ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கான புதிய Maruti Tour S கார் அறிமுகம்
டிசையர் டூர் எஸ் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஸ்டாண்டர்ட் மற்றும் சிஎன்ஜி
-
டிசையர் டூர் எஸ் என்பது தனியார் வாடிக்கையாளர்களுக்காக லோவர் டிரிம் ஆன LXi -யை அடிப்படையாகக் கொண்டது.
-
வடிவமைப்பை பொருத்தவரையில் பின்பக்கம் ‘டூர் எஸ்’ பேட்ஜ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
-
மேனுவல் ஏசி, இயங்கும் ஜன்னல்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவை இந்த காரில் உள்ளன.
-
இது ஒரே ஒரு பெட்ரோல் பவர்டிரெய்னுடன் ஆப்ஷனலான சிஎன்ஜி கிட் உடன் கிடைக்கும்.
-
டிசையர் டூர் எஸ் விலை ஆனது ரூ.6.79 லட்சம் முதல் ரூ.7.74 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி டிசையர் கடந்த ஆண்டு நவம்பரில் புதிய தலைமுறை அப்டேட்டை பெற்றது. இப்போது மாருதி டிசையரின் வணிக மாடலை அறிமுகம் செய்துள்ளது. தனியார் வாடிக்கையாளர்களுக்கான இந்த கார் டிசைரின் பேஸ்-ஸ்பெக் LXi வேரியன்ட் அடிப்படையிலான ஃபிளீட் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாருதி டிசையர் டூர் எஸ் பற்றிய விரைவான பார்வை இங்கே.
முன்பக்கம்
புதிய டிசையர் டூர் எஸ் -ன் முன்பக்கம் பெரிய கிரில், ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் மையத்தில் 'சுஸூகி' லோகோ ஆகியவை உள்ளன. டிசையர் டூர் எஸ் 3 எக்ஸ்ட்டீரியர் ஷேடுகளில் கிடைக்கும்: ஆர்க்டிக் ஒயிட், ஸ்ப்ளெண்டிட் சில்வர் மற்றும் ப்ளூயிஷ் பிளாக்.
பக்கவாட்டு தோற்றம்
புதிய மாருதி டிசையர் டூர் எஸ் -ன் பக்கவாட்டில் கறுப்பு நிறத்திலான டோர் ஹேண்டில்கள் மற்றும் ORVM -கள் மற்றும் பாடி கலர்டு ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகியவற்றை பார்க்க முடிகிறது. இதில் 14-இன்ச் ஸ்டீல் சக்கரங்கள் உள்ளன. வீல்களில் எந்தவித கவர்களும் இல்லை.
பின்புறம்
பின்பக்கமாக LED டெயில் லைட்ஸ் மற்றும் பிரேக் லைட்ஸ் ஆகியவையும் உள்ளன. ஒரு டெயில் லேம்ப் ஹவுசிங்கில் இருந்து மற்றொன்றுக்கு ஒரு பிளாக் ஸ்ட்ரிப் ஒன்று உள்ளது. அதன் மேலே நீங்கள் சுஸூகி பேட்ஜையும் பார்க்க முடிகிறது. 'டூர் எஸ்' எழுத்து பூட் லிட்டின் கீழ் இடது பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்ட்டீரியர்
டிசையர் டூர் எஸ் டூயல் தொனி பிளாக் மற்றும் பெய்ஜ் நிற கேபின் தீம் உடன் வருகிறது. பிசிக்கல் கன்ட்ரோல்கள் மேனுவல் ஏசியுடன் வருகின்றன. டிசையர் டூர் எஸ் காரில் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் கொடுக்கப்படவில்லை. இதன் சென்டர் கன்சோலில் மேனுவல் கியர் ஷிஃப்டர் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன.
இது லோவர் டிரிம் அடிப்படையிலானது என்றாலும், கீலெஸ் என்ட்ரி, அனைத்து நான்கு பவர் விண்டோக்கள் மற்றும் முன் இருக்கைகளுக்கு அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் போன்ற வசதிகள் உள்ளன. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: வெளியானது Mahindra XUV700 -யின் எபோனி எடிஷன்
பவர்டிரெய்ன்
மாருதி டிசையர் டூர் எஸ் ஒரே ஒரு இன்ஜினுடன் வருகிறது. இது பெட்ரோல் அல்லது பெட்ரோல்+சிஎன்ஜி காம்போவுடன் கிடைக்கும். அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2 லிட்டர் பெட்ரோல் |
1.2 லிட்டர் பெட்ரோல்+CNG |
பவர் |
82 PS |
70 PS |
டார்க் |
112 Nm |
102 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT* |
5-ஸ்பீடு MT* |
*MT= மேனுவல் டிரான்ஸ்மிஷன்
பெட்ரோல் பவர்டிரெய்ன் 26.06 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது. அதே நேரத்தில் சிஎன்ஜி 34.30 கிமீ/கிகி மைலேஜை கொடுக்கிறது.
விலை
புதிய தலைமுறை மாருதி டிசையர் டூர் எஸ் காரின் ஸ்டாண்டர்ட் வேரியன்ட் ரூ.6.79 லட்சமாகவும், சிஎன்ஜி வேரியன்ட் காரின் விலை ரூ.7.74 லட்சமாகவும் உள்ளது. விலை விவரங்கள் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கானவை ஆகும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.