சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Kia Syros காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்

published on ஜனவரி 03, 2025 10:25 pm by kartik for க்யா syros

ரூ.25,000 டோக்கன் தொகையை செலுத்தி கியா சைரோஸ் காரை புக் செய்யலாம்.

  • கியா சைரோஸிற்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவி -களுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

  • HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் இது கிடைக்கும்:

  • சைரோஸ் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது.

  • முன்புற மற்றும் பின்புற வென்டிலேட்டட் சீட்கள், இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ADAS ஆகியவை இந்த காரில் கிடைக்கும்.

  • பிப்ரவரி 1 ஆம் தேதி இது விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.9.7 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சைரோஸ் காருக்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கியுள்ளன. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் கியா புதிய சைரோஸை காட்சிப்படுத்துகிறது மற்றும் சப்-4 மீ எஸ்யூவிக்கான விலை விவரங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்படும். அதே நேரத்தில் டெலிவரி விரைவில் தொடங்கும். ரூ. 25,000 டோக்கன் தொகையுடன் சைரோஸை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவு செய்யலாம். கியா சைரோஸுடன் என்ன வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.

கியா சைரோஸ் வெளிப்புறம்

கியா சைரோஸின் முன்பக்கம் LED DRL -களுடன் வெர்டிகலான 3-பாட் ஹெட்லைட்களை கொண்டுள்ளது. சப்-4m எஸ்யூவி -யின் பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்பானது ஃபிளாக்ஷிப் ஆல்-எலக்ட்ரிக் EV9 போன்றே உள்ளது. இது ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது. சைரோஸின் பின்புறம் கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் எல் வடிவ LED டெயில் லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கியா சைரோஸ் இன்டீரியர் மற்றும் வசதிகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து கான்ட்ராஸ்ட்டான டூயல்-டோன் கலர் தீம் கொண்ட சைரோஸின் கேபினை கியா வழங்குகிறது. டாஷ்போர்டு EV9 போலவே உள்ளது. மேலும் அதே போன்ற ஏசி வென்ட் கூட அதே இடத்திலும் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலும் அப்படியே உள்ளது. இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன்-க்கு மற்றொன்று டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே), டிஜிட்டல் ஏசி கண்ட்ரோல் பேனல் மற்றும் முன் மற்றும் பின்புற வென்டிலேட்டட் சீட்களை என இந்த பிரிவில் முதலாவதாக கிடைக்கும் வசதிகளுடன் சைரோஸ் வருகிறது. 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகிய வசதிகளுடன் வரும்.

பாதுகாப்புக்காக கியா சைரோஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: 2025 ஆண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் மாஸ் மார்க்கெட் எஸ்யூவிகள்

கியா சைரோஸ் பவர்டிரெய்ன்

கியா சைரோஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 120 PS மற்றும் 172 Nm, 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இன்ஜின் ஆப்ஷன் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும், இது 116 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. இது 6-ஸ்பீடு எம்டி அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கியா சைரோஸ் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா சைரோஸ் காரின் விலை ரூ.9.7 லட்சம் முதல் ரூ.16.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைரோஸுக்கு இதுவரை எந்த நேரடி போட்டியளார்களும் இல்லை என்றாலும் கூட டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா என சப்காம்பாக்ட் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி -கள் ஆகியற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் பார்க்க: Hyundai Creta EV - காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia syros

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வகைகள்
Rs.44.90 - 55.90 லட்சம்*
Rs.75.80 - 77.80 லட்சம்*
புதிய வகைகள்
Rs.88.70 - 97.85 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை