Hyundai Creta EV - காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
published on ஜனவரி 02, 2025 08:51 pm by dipan for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் புதிய கிரெட்டா 473 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்போது EV -ன் வடிவமைப்பு, பேட்டரி பேக் ஆப்ஷன்கள், வசதிகள் மற்றும் அவற்றின் கிளைம்டு ரேஞ்ச் ஆகிய விவரங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் 4 வேரியன்ட்களில் கிடைக்கும்: எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ்.
வடிவமைப்பு கிரெட்டா போன்று உள்ளது
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் ICE-பவர்டு கிரெட்டா வடிவமைப்பைப் போலவே உள்ளது. அதே கனெக்டட் LED DRLகள், வெர்டிகலாக கொடுக்கப்பட்ட டூயல்-பேரல் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது.
இருப்பினும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. முன்பக்கம் கிரெட்டா N லைன் போலவே குளோஸ்டு-ஆஃப் கிரில் உடன் வரலாம். மற்றும் ஹெட்லைட்டுகளுக்கு இடையில் கிளாஸி பிளாக் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சார்ஜிங் போர்ட் ஹூண்டாய் லோகோ -விற்கு கீழே நடுவில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏரோடைனமிக்ஸை மேம்படுத்துவதற்கும் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பகுதியை குளிர்விப்பதற்கும் கிரில்லில் 4 ஏர் இன்டேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்படவில்லை.
17-இன்ச் அலாய் வீல்கள், டாடா நெக்ஸான் EV-யில் உள்ளதைப் போன்றே ஏரோடைனமிகல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ICE பதிப்பில் உள்ள சில்வர் விண்டோ அப்ளிகிற்கு பதிலாக பிளாக்-அவுட் ஃபினிஷ் உள்ளது. பக்கவாட்டில் ஒரு சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளது.
பின்புறத்தில் டெயில் லைட்ஸ் வழக்கமான கிரெட்டா போலவே இருக்கும். ஆனால் EV ஆனது பூட் கேட்டின் கீழ் ஒரு பிளாக் டிரிம் மற்றும் பிக்ஸல் போன்ற எலமென்ட்களுடன் புதிய வடிவிலான் பம்பர் மற்றும் ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க: 2025 ஆண்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மாஸ் மார்க்கெட் எஸ்யூவி -கள்
ஹூண்டாய் கிரெட்டா EV: உட்புறம் மற்றும் வசதிகள்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் டூயல்-டோன் உட்புறத்தைக் கொண்டிருக்கும், அதன் தளவமைப்பு நிலையான காரை போலவே இருக்கும். இருப்பினும் டிரைவ் செலக்டர் லீவருடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்ற சில வேறுபாடுகள் உள்ளன. ஹூண்டாய் அயோனிக் 5. குறைந்த சென்டர் கன்சோலும் எலக்ட்ரிக் பதிப்பிற்கான மாற்றப்பட்ட கட்டுப்பாடுகளுடன் வேறுபட்டது.
இது வழக்கமான கிரெட்டாவை போன்று டேஷ்போர்டில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப், வெஹிகிள் டூ லோடிங்(V2L) மற்றும் டிரைவ் மோடுகள் போன்ற வசதிகளைப் பெறும்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்றவற்றை பாதுகாப்பிற்காக கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இந்த கார் ARAI-மதிப்பிடப்பட்ட 390 கி.மீ ரேஞ்ச் கொடுக்கும் 42 kWh பேக் மற்றும் பெரிய 51.4 kWh பேக் 473 கி.மீ என கிளைம்டு ரேஞ்ச் கொண்ட இரண்டு பேட்டரி ஆப்ஷகளுடன் கிடைக்கும் . எலக்ட்ரிக் மோட்டார் விவரங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் கிரெட்டா EV 7.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் என்று ஹூண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 58 நிமிடங்களில் EV 10-80 சதவிகிதத்திலிருந்து சார்ஜ் செய்யலாம் என்றும் 11 kW AC சார்ஜர் 4 மணி நேரத்தில் பேட்டரியை 10 சதவிகிதத்தில் இருந்து முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்றும் என்று ஹூண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் படிக்க: இந்தியாவில் EV வாங்குவதற்கு முன்னால் கருத்தில் கொள்ள வேண்டிய 7 காரணங்கள்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும். டாடா கர்வ்வ் EV, மஹிந்திரா பிஇ 6, MG ZS EV மேலும் வரவிருக்கும் மாருதி மற்றும் விட்டாரா ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.