இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய ஜீப் மெரிடியன் கார்
published on அக்டோபர் 21, 2024 07:24 pm by dipan for ஜீப் meridian
- 59 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய மெரிடியன் இரண்டு புதிய பேஸ் வேரியன்ட்கள் மற்றும் ஒரு ஃபுல்லி லோடட் ஓவர்லேண்ட் வேரியன்ட்டுடன் ஒரு ADAS தொகுப்பைப் கொண்டுள்ளது.
-
2024 ஜீப் மெரிடியன் 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அமைப்புகளுடன் வருகிறது.
-
பழைய மாடலுடன் வழங்கப்பட்ட லிமிடெட் மற்றும் X வேரியன்ட்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.
-
ஆல்-எல்இடி லைட்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்களுடன் வெளிப்புறமும் ஒரே மாதிரியாக உள்ளது.
-
உள்ளே இது இப்போது வேரியன்ட்டுக்கு ஏற்றவாறு கேபின் தீம்கள் மற்றும் பழைய மாடலில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு வடிவமைப்பைப் கொண்டுள்ளது.
-
10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
விலை ரூ.24.99 லட்சம் முதல் ரூ.36.49 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
2024 ஜீப் மெரிடியன் இந்தியாவில் ரூ. 24.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது இரண்டு புதிய பேஸ் வேரியன்ட்களை பெறுகிறது. மற்றும் மொத்தம் 4 வேரியன்ட்களை வழங்குகிறது. இந்த வேரியன்ட்களின் விலை விவரங்களை பார்ப்போம்:
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
லாங்கிடியூட் |
ரூ.24.99 லட்சம் |
– |
புதிய வேரியன்ட் |
லாங்கிடியூட் பிளஸ் |
ரூ.27.50 லட்சம் |
– |
புதிய வேரியன்ட் |
லிமிடெட் |
– |
ரூ.29.99 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
எக்ஸ் |
– |
ரூ.31.23 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
லிமிடெட் (O) |
ரூ.30.49 லட்சம் |
ரூ.33.77 லட்சம் |
(- ரூ 3.28 லட்சம்) |
ஓவர்லேண்ட் |
ரூ.36.49 லட்சம் |
ரூ.37.14 லட்சம் |
(- ரூ 65,000) |
இது வேரியன்ட்களின் ஆரம்ப விலை என்பதை நினைவில் வைக்கவும்.
புதுப்பிக்கப்பட்ட ஜீப் மெரிடியனில் உள்ளவற்றை விரிவாக பார்ப்போம்:
புதிதாக என்ன உள்ளது ?
புதிய ஜீப் மெரிடியன் பழைய மாடலை போலவே உள்ளது. இது எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவற்றைப் பெறுகிறது.
உள்ளே டூயல்-டோன் கேபின் தீம் உள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் படி மாறுபடும். இந்த கலர் ஆப்ஷன்களை பார்ப்போம்:
-
லாங்கிடியூட்: பிளாக் மற்றும் கிரே
-
லாங்கிடியூட் பிளஸ்: பிளாக் மற்றும் கிரே
-
லிமிடெட் (O): பெய்ஜ் மற்றும் பிளாக்
-
ஓவர்லேண்ட்: டுபெலோ மற்றும் பிளாக்
டாஷ்போர்டு வடிவமைப்பு முன்பு போலவே இருந்தாலும் கூட 2024 மெரிடியனில் இப்போது 5 முதல் 7 இருக்கைகள் உள்ளன. பேஸ்-ஸ்பெக் லாங்கிட்யூட் 5-சீட்டர் ஆக மட்டுமே கிடைக்கும். அதே சமயம் 1-அபோவ்-பேஸ் லாங்கிட்யூட் பிளஸ் 5 முதல் 7 இருக்கைகளுக்கு இடையே தேர்வு செய்து கொள்ளலாம். ஹையர்-ஸ்பெக் லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் வேரியன்ட்கள் 7 இருக்கைகளாக வழங்கப்படுகின்றன.
புதுப்பிக்கப்பட்ட மெரிடியனில் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், கனெக்டட் கார் டெக், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ப்ரீ-கூலிங் ஏசி ஃபங்ஷன், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை மற்ற வசதிகள் ஆகும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக) மற்றும் புதிய ரேடார் மற்றும் கேமரா அடிப்படையிலான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமராவும் உள்ளது.
மேலும் படிக்க: Mahindra XUV.E9 மீண்டும் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
2-லிட்டர் டீசல் இன்ஜின் வெளிச்செல்லும் மெரிடியனில் இருந்து முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
170 PS |
டார்க் |
350 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT / 9-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன்^ |
FWD / AWD |
மைலேஜ் |
16.25 கிமீ/லி வரை |
*எம்டி = மேனுவல் டிரான்ஸ்மிஷன்; AT = ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^FWD = ஃபிரன்ட் -வீல் டிரைவ்; AWD = ஆல்-வீல் டிரைவ்
வெளிச்செல்லும் மெரிடியனுடன் ஒப்பிடுகையில் பவர் அல்லது டார்க் அவுட்புட்டில் எந்த வித்தியாசமும் இல்லை. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
போட்டியாளர்கள்
2024 ஜீப் மெரிடியன் ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் ஸ்கோடா கோடியாக் உடன் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஜீப் மெரிடியன் டீசல்
0 out of 0 found this helpful