Mahindra XUV.E9 மீண்டும் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
published on அக்டோபர் 21, 2024 04:32 pm by dipan for மஹிந்திரா xev 9e
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய ஸ்பை ஷாட்கள் ஸ்பிளிட்-LED ஹெட்லைட் செட்அப் மற்றும் அலாய் வீல் டிசைனை காட்டுகிறது. இது 2023 -ல் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் மாடலை போலவே உள்ளது.
-
XUV.e9 என்பது XUV.e8 இன் எஸ்யூவி-கூபே வேரியன்ட் ஆகும். இது XUV700-இன் ஆல்-எலக்ட்ரிக் வெர்ஷனாகும்.
-
அதன் கேபின் டாஷ்போர்டில் 3-ஸ்கிரீன் செட்அப்-ஐக் கொண்டதாக முன்பு காணப்பட்டது.
-
மல்டி-ஜோன் ஏர் கண்டிஷனிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாப்பை பொறுத்தவரை இதன் தொகுப்பில் 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றுடன் இது வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்த வாகனம் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும், இது 500 கி.மீ வரை கிளைம் செய்யப்படும் ரேஞ்ஜை அனுமதிக்கிறது.
-
இது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 38 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
மஹிந்திரா XUV.e9-இன் இந்திய வாகன உற்பத்தியாளரிடமிருந்து வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 2023-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், தற்போது இது சாலைகளில் விரிவான சோதனைக்கு உட்பட்டுள்ளது. இது XUV.e8-இன் எஸ்யூவி-கூபே வெர்ஷனாகும், இது அடிப்படையில் XUV700-இன் ஆல்-எலக்ட்ரிக் வேரியன்ட் மற்றும் டிசம்பர் 2024-க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஸ்பை ஷாட்கள் மூலம் XUV.e9-இன் சில வெளிப்புற எலமென்ட்களை காட்டும் வகையில் வகையில் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்:
புதிதாக எதை எதிர்பார்க்கலாம்
நாங்கள் பார்த்த டெஸ்ட் மியூல் முழுவதும் உருவம் மறைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் ஒரு முக்கிய அம்சம் தனித்து நின்றது அதுதான் அதன் முன் மற்றும் பின்புறம் ஆகிய இரண்டிலும் உள்ள டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள். இந்த இண்டிகேட்டர்கள் இரு முனைகளிலும் தலைகீழ் L வடிவத்தைக் கொண்டுள்ளன. முன்புற இண்டிகேட்டர்கள் கனெக்டட் LED DRLs -களாகவும் செயல்படுகின்றன, அதே சமயம் பின்புறம் லைட் பார் மூலம் கனெக்டட் டெயில் லைட்களாகவும் செயல்படுகின்றன.
ஸ்பிளிட்-LED ஹெட்லைட் செட்அப் மற்றும் கீழ் கிரில்லில் இரண்டு ஏர் இன்லெட்டுகளையும் காணலாம். 2023 -ல் காட்சிப்படுத்தப்பட்ட XUV.e9 கான்செப்ட்டை ஒத்த அலாய் வீல் டிசைனையும் டெஸ்ட் மியூல் கொண்டுள்ளது.
முன்பக்க பம்பரின் மையத்தில் ஒரு அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ரேடரைக் காணலாம். இது ப்ரொடக்ஷன்-ஸ்பெக் மாடல் பெறக் கூடும் என்பதைக் குறிக்கிறது.
மேலும் படிக்க: 2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?
மஹிந்திரா XUV.e9 உட்புறம்
முந்தைய ஸ்பை ஷாட்கள் XUV.e9-இன் டாஷ்போர்டு செட்அப்பை வெளிப்படுத்தியது. புதிய டாடா எஸ்யூவி-களில் காணப்படுவதைப் போலவே மூன்று-ஸ்கிரீன் செட்அப் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் காட்டுகிறது. கேபினில் செமி-லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கியர் லீவர் டிசைன் முன்மாதிரியை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV.e9 -ல் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
XUV.e9 உடன், மஹிந்திரா மல்டி-ஜோன் ஏர் கண்டிஷனிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் பவர்டு காற்றோட்டமான சீட்கள் போன்ற அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எலக்ட்ரிக் வெஹிகிள் (EV) என்பதால், வெஹிகிள்-டு-லோட் (V2L) செயல்பாடு மற்றும் பல ரிஜெனரேஷன் மோட்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வரலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் XUV.e9 ஆனது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட்-கோலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தையும் இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: மனேசர் தொழிற்சாலையில் 1 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்து சாதனை படைத்தது மாருதி நிறுவனம்
மஹிந்திரா XUV.e9: பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
இந்த மாடல் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், XUV.e9 ஆனது INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. மேலும், இது 60 கிலோவாட் மற்றும் 80 கிலோவாட் பேட்டரி பேக்குகளை ஆதரிக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது 500 கி.மீ வரை மொத்த வரம்பை வழங்குகிறது. இந்த பிளாட்ஃபார்ம் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.
மஹிந்திராவை பொறுத்தவரையில் INGLO பிளாட்ஃபார்ம் 175 கிலோவாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் திறனையும் சப்போர்ட் செய்யும். இது பேட்டரியை 0-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே எடுத்துக்கொள்ளும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV700-இன் எலக்ட்ரிக் வெர்ஷனான XUV.e8-க்குப் பிறகு மஹிந்திரா XUV.e9 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, இது ஏப்ரல் 2025-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 38 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. XUV.e9 ஆனது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV ஆகியவற்றுடன் போட்டியிட வாய்ப்புள்ளது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.