• English
  • Login / Register

மனேசர் தொழிற்சாலையில் 1 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்து சாதனை படைத்தது மாருதி நிறுவனம்

published on அக்டோபர் 17, 2024 05:38 pm by shreyash

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதியின் மனேசர் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் 1 கோடி -யாவது கார் ஆக பிரெஸ்ஸா உள்ளது.

  • மாருதி 2006 ஆண்டில் தனது மனேசர் உற்பத்தி ஆலையைத் தொடங்கியது.

  • மனேசர் ஆலை 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது.

  • லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் அண்டை நாடுகளுக்கு மனேசர் உற்பத்தி ஆலையில் இருந்து கார்களை மாருதி நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

  • பிரெஸ்ஸா, டிசையர், எர்டிகா மற்றும் வேகன் ஆர் போன்ற கார்கள் மனேசர் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான மாருதி சுஸூகி ஹரியானாவில் உள்ள மனேசர் உற்பத்தி ஆலையில் 1 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்து பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாருதி அக்டோபர் 2006 ஆண்டில் இந்த ஆலையில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இந்த மைல்கல்லை அடைய கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆனது. தொழிற்சாலையில் இருந்து 1 கோடி -யாவது கார் ஆக மாருதி பிரெஸ்ஸா இருந்தது.

மனேசர் ஆலை பற்றி கூடுதலான விவரங்கள்

ஹரியானாவின் மானேசரில் அமைந்துள்ள மாருதியின் உற்பத்தி நிலையம் 600 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனேசர் உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட கார்கள் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாருதி ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் கார் பலேனோ ஆகும். இது மனேசர் ஆலையில் தயாரிக்கப்பட்டது. இங்கு மாருதி பிரெஸ்ஸா, மாருதி எர்டிகா, மாருதி XL6, மாருதி சியாஸ், மாருதி டிசையர், மாருதி வேகன் ஆர், மாருதி எஸ்-பிரஸ்ஸோ மற்றும் மாருதி செலிரியோ ஆகிய மாருதி கார்களின் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மாருதிக்கு குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் ஒரு உற்பத்தி ஆலை ஒன்றும் உள்ளது. மேலும் ஹரியானாவின் கார்கோடாவில் ஒரு ஆலையை நிறுவவுள்ளது, இது 2025 ஆண்டில் செயல்பட தொடங்கும். மேலும் மாருதி வரவிருக்கும் EV -களை குஜராத்தில் உற்பத்தி செய்யத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பார்க்க: Maruti Swift Blitz லிமிடெட்-எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது

மாருதியின் தற்போதைய மற்றும் வரவிருக்கும் கார்கள்

மாருதி தற்போது இந்தியாவில் மொத்தமுள்ள 17 மாடல்களில் அதன் அரீனா மூலம் 9 மாடல்களையும், அதன் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் 8 மாடல்களையும் விற்பனை செய்கிறது. 2031 க்குள் மாருதி நிறுவனம் eVX எஸ்யூவியின் தயாரிப்பு பதிப்பில் தொடங்கும் EVகள் உட்பட அதன் இந்திய போர்ட்ஃபோலியோவை 18 முதல் 28 மாடல்களாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience