சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பண்டிகை காலத்தை முன்னிட்டு MG ZS EV கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

published on அக்டோபர் 09, 2023 07:00 pm by rohit for எம்ஜி இஸட்எஸ் இவி

விலை குறைப்பின் மூலம், ZS EV இப்போது ரூ.2.30 லட்சம் வரை குறைவான விலையில் கிடைக்கிறது

  • MG ZS EV காருக்கு இப்போது ரூ.22.88 லட்சம் முதல் ரூ.25.90 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • MG ஹெக்டருக்கு ரூ.14.73 லட்சம் முதல் ரூ. 21.73 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது.

  • தற்போது ஹெக்டர் பிளஸ் காரின் விலை ரூ.17.50 லட்சம் முதல் ரூ.22.43 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர்பிளஸ் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்ட செய்தியை நாங்கள் சமீபத்தில் உங்களுக்குக் கொண்டு வந்தோம். பண்டிகை காலத்திற்காக இரண்டு எஸ்யூவி -களின் விலையை குறைத்த கார் தயாரிப்பு நிறுவனம், இப்போது MG ZS EV க்கும் அதையே செய்துள்ளது. எலெக்ட்ரிக் SUVஇன் மறுமதிப்பீடு செய்யப்பட்ட கார் வேரியன்ட்கள் வாரியான விலைகளை பாருங்கள்:

ZS EV


கார்களின் வேரியன்ட்கள்


பழைய விலை


புதிய விலை


எக்சைட்


ரூ. 23.38 லட்சம்


ரூ. 22.88 லட்சம்


எக்ஸ்க்ளூசிவ்:


ரூ. 27.30 லட்சம்


ரூ. 25 லட்சம்


எக்ஸ்க்ளூசிவ் ப்ரோ


ரூ. 27.90 லட்சம்


ரூ. 25.90 லட்சம்

விலை குறைப்பின் மூலம், MG ZS EVயின் ஆரம்ப விலை ரூ.50,000 குறைந்துள்ளது. இதன் மிட்-ஸ்பெக் மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட்கள் ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. எலெக்ட்ரிக் SUV ஆனது 177PS மற்றும் 280Nm ஐ வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 50.3kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இந்த அமைப்பின் மூலம், இது 461 கிமீ தூரம் பயணதூர வரம்பை வழங்குகிறது.

ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ்

ஏற்கனவே எங்கள் முந்தைய அறிக்கையில் பார்த்தபடி, MG ஹெக்டரின் விலை ரூ.1.29 லட்சம் வரை குறைந்துள்ளது, அதே நேரத்தில் MG ஹெக்டர் பிளஸ் ரூ.1.37 லட்சம் வரை மிகவும் மலிவானதாக மாறியுள்ளது. அவற்றின் திருத்தப்பட்ட விலை வரம்புகள் முறையே ரூ. 14.73 லட்சம் முதல் ரூ.21.73 லட்சம் மற்றும் ரூ. 17.50 லஇட்சம் முதல் ரூ. 22.43 லட்சம் வரை இருக்கும். மிட்-சைஸ் SUVகளின் உயர் கார் வேரியன்ட்களுக்கு குறிப்பிடத்தக்க விலை குறைப்புகள் உள்ளன. ஹெக்டர் 5 சீட்டர் SUVயாகவும், ஹெக்டர் பிளஸ் கார் 6 மற்றும் 7 சீட்டர் லேஅவுட் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு SUVகளிலும் ஒரே மாதிரியான இரண்டு எஞ்சின் விருப்பங்கள் உள்ளன: 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVTயுடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் (143PS/250Nm) மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டும் இணைக்கப்பட்ட 2 லிட்டர் டீசல் எஞ்சின் (170PS/350Nm).

மேலும் விவரம் அறிந்து கொள்ள : 2023 செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான சிறந்த 15 கார்களை பாருங்கள்

MG -யின் போட்டியாளர்கள்

MG ZS EV, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் BYD அட்டோ 3 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கிறது, அதே நேரத்தில் டாடா நெக்ஸான் EVக்கு பிரீமியம் மாற்றாக உள்ளது. மறுபுறம், MG ஹெக்டர் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் ஆகியவை டாடா ஹாரியர், டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்றவற்றுடன் போட்டி போடுகின்றன.

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், டெல்லிக்கானவை.

மேலும் தெரிந்து கொள்ள: ZS EV ஆட்டோமெட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 22 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது எம்ஜி ZS EV

Read Full News

explore மேலும் on எம்ஜி இஸட்எஸ் இவி

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.74 - 19.99 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.40 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை