MG Windsor EV-இன் ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்!
published on ஆகஸ்ட் 29, 2024 06:20 pm by samarth for எம்ஜி விண்ட்சர் இவி
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரவிருக்கும் MG விண்ட்சர் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.
-
MG விண்ட்சர் EV என்பது வுலிங் கிளவுட் EV-இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகும்.
-
உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களில் பனோரமிக் கிளாஸ் ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் 135 டிகிரி வரை சாய்ந்து கொள்ளக்கூடிய ரியர் சீட்கள் ஆகியவை இதில் அடங்கும்.
-
இந்த வாகனத்தில் 15.6 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 8.8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை இதில் இடம்பெறும்.
-
சர்வதேச அளவில், இது 50.6 கிலோவாட் பேட்டரி பேக்குடன் 136 PS மற்றும் 200 Nm உற்பத்தி செய்யும் ஒற்றை மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட MG டீலர்ஷிப்கள் இந்திய சந்தைக்கான வாகன உற்பத்தியாளரின் மூன்றாவது எலக்ட்ரிக் கார் ஆன வரவிருக்கும் MG விண்ட்சர் EV-க்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, MG அதன் அதிகாரப்பூர்வ தளங்களில் விண்ட்சர் EV-யின் டீசரை பதிவிட தொடங்கியுள்ளது. வின்ட்சர் EV என்பது சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் வுலிங் கிளவுட் EV-யின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகும். விண்ட்சர் EV பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்கள் இதோ:
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
அம்சங்களைப் பொறுத்தவரை, விண்ட்சர் EV-க்கான பல முக்கிய சிறப்பம்சங்களை MG டீசரில் வெளியிட்டுள்ளது, இதில் ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், 135 டிகிரி வரை சாய்ந்த ரியர் சீட்கள் மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜி கூடிய 15.6 இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை அடங்கும். 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஏசி, எலக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட்கள் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, MG விண்ட்சர் EV ஆனது ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: MG Windsor EV காரின் புதிய ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இந்தோனேசியாவில், MG விண்ட்சர் EV ஆனது 50.6 கிலோவாட் பேட்டரி மற்றும் 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் மோட்டார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தோனேசிய சந்தையில் கிளவுட் EV ஆனது 460 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய ரேஞ்ஜைக் கொண்டுள்ளது.
மற்ற சர்வதேச சந்தைகளிலும் 37.9 கிலோவாட் பேட்டரி பேக்கை கொண்டுள்ளன. இது 360 கி.மீ ரேஞ்ஜை வழங்குகிறது. MG நிறுவனம் இந்தியாவில் எந்த வெர்ஷனை அறிமுகப்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
MG விண்ட்சர் EV-யின் விலைகள் ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV-க்கு மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் மாற்றாக இருக்கும். மேலும் இது டாடா நெக்ஸான் EV, மஹிந்திரா XUV400 EV மற்றும் டாடா கர்வ் -ன் சில வேரியன்ட்களுடன் நேரடியாக போட்டியிட உள்ளது.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful