MG Windsor EV காரின் புதிய ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
published on ஆகஸ்ட் 26, 2024 04:30 pm by dipan for எம்ஜி விண்ட்சர் இவி
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
MG விண்ட்சர் EV ஆனது குளோபல்-ஸ்பெக் வூலிங் கிளவுட் EV -யில் இருப்பதை போலவே பெய்ஜ் மற்றும் பிளாக் கலர் இன்ட்டீரியரை கொண்டிருக்கும்.
-
MG விண்ட்சர் EV -யானது இந்தியாவில் MG -ன் மூன்றாவது EV ஆகும்.
-
ஸ்பை ஷாட்டில் உள்ள மாடலில் டச் ஸ்கிரீன், வூலிங் கிளவுட் EV போன்ற அதே 15.6-இன்ச் யூனிட் ஆகியவை இருந்தன.
-
டீஸர்கள் பனோரமிக் பனோரமிக் ரூஃப், 135 டிகிரி ரிக்ளைனிங் பின் இருக்கை மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தின.
-
டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS போன்ற மற்ற வசதிகளும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ARAI-கிளைம்டு ரேஞ்ச் உடன் 50.6 kWh பேட்டரி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
-
இதன் விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி விண்ட்சர் இவி செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இப்போது எம்ஜி நிறுவனம் சில காலமாக அதன் டீசர்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கிராஸ்ஓவர் EV மும்பையின் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதை காண முடிந்தது. இந்த சோதனை கார் ஆனது இன்ட்டீரியர் பற்றிய ஒரு சிறிய பார்வையை எங்களுக்கு கொடுக்கிறது. MG விண்ட்சர் EV -யில் நாம் காணக்கூடிய அனைத்து விஷயங்களும் இங்கே.
நாம் என்ன பார்க்க முடிகிறது ?
ஸ்பை ஷாட்கள் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் இருப்பதை பார்க்க முடிகிறது. இது வின்ட்சர் EV அடிப்படையிலான மாடலான வூலிங் கிளவுட் EV இல் உள்ள வெர்டிகல் யூனிட் போன்று உள்ளது. கிளவுட் EV ஆனது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. ரியர்வியூ மிரர் (IRVM) உள்ளே ஒரு ஆட்டோ டிம்மிங் மற்றும் இருக்கைகளில் பிளாக் அப்ஹோல்ஸ்டரியும் தெரியும்.
சோதனை விண்ட்சர் EV கார் ஆனது அதிகாரப்பூர்வ டீஸர்களில் உள்ளதை போலவே வெளிப்புறம் மறைக்கப்பட்டிருந்தது. இது டாடா கர்வ் EV மற்றும் மஹிந்திரா XUV700 போன்றவற்றில் உள்ள ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களையும் கொண்டுள்ளது. ஸ்பை ஷாட்கள் சார்ஜிங் மடல் முன் ஃபெண்டரில் கொடுக்கப்படும் என்பதையும் ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன.
மேலும் பார்க்க: MG Windsor EV: 10 படங்களில் விரிவாக உள்ளது
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
MG முன்பு வின்ட்சர் EV -யை பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் 135 டிகிரி சாய்ந்த பின் இருக்கைகளுடன் டீசர்களை வெளியிட்டது. இது 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக்கலி டெயில்கேட் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பிற்காக விண்ட்சர் EV ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஒரு எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 360-டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைப் பெறலாம்.
மேலும் படிக்க: வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
MG விண்ட்சர் ஆனது 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஃபிரன்ட்-வீல் டிரைவ் மோட்டார் மற்றும் 50.6 kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியா-ஸ்பெக் பதிப்பு 460 கி.மீ ரேஞ்சை கொடுக்கிறது. ஆனால் இந்திய மாடல் ARAI சோதனைக்குப் பிறகு அதிகரித்த ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG விண்ட்சர் EV விலை ரூ.20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV உடன் ஒப்பிடும்போது பிரீமியம் மாற்றாகவும், MG ZS EV -க்கு மிகவும் குறைவான விலையில் உள்ள மாற்றாகவும் இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.