இந்தியாவில் MG Windsor EV அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on செப் 11, 2024 04:36 pm by shreyash for எம்ஜி விண்ட்சர் இவி
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ZS EV மற்றும் காமெட் EV -க்கு பிறகு வின்ட்சர் EV -யை அதன் மூன்றாவது ஆல்-எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
-
MG விண்ட்ஸர் EV மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: எக்ஸைட், எக்ஸ்க்ளூஸிவ் மற்றும் எசென்ஸ்
-
இந்தியாவில், வின்ட்சர் EV ஆனது பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (BaaS) வாடகை திட்டத்தின் மூலமாகவும் கிடைக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 3.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
வெளிப்புற சிறப்பம்சங்கள் கனெக்டட் LED லைட்ஸ், 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் ஆகியவை அடங்கும்.
-
வின்ட்சர் EV ஆனது வுடன் மற்றும் புரோன்ஸ் இன்செர்ட்கள் உடன் ஆல் பிளாக் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
விண்ட்சர் EV-யில் உள்ள வசதிகளில் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் கிளாஸ் கூரை ஆகியவை அடங்கும்.
-
38 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது மற்றும் 331 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
-
விண்ட்ஸர் EV -யின் விலை ரூ.9.99 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆன்லைன் டீஸர்களுக்கு பிறகு இப்போது எம்ஜி வின்ட்சர் இவி இறுதியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் தொடங்குகிறது (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்). MG -யின் இந்திய EV போர்ட்ஃபோலியோவில் எம்ஜி காமெட் EV மற்றும் ZS EV ஆகிய கார்களுக்கு பிறகு எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் ஆக வின்ட்சர் EV வெளியாகியுள்ளது. இதன் முன்பதிவுகள் அக்டோபர் 3 முதல் தொடங்கவுள்ளன. மேலும் அதே நேரத்தில் டெலிவரிகளை அக்டோபர் 12 முதல் தொடங்க எம்ஜி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. MG இதை மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது: எக்ஸைட், எக்ஸ்க்ளூஸிவ் மற்றும் எசென்ஸ்.
விண்ட்ஸர் EV ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் வூலிங் பிராண்டின் கீழ் கிளவுட் EV என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இந்தியா-ஸ்பெக் MG விண்ட்ஸர் EV என்ன வழங்குகிறது என்று பார்ப்போம்.
பேட்டரி வாடகை -க்கு கிடைக்கும்
வின்ட்சர் EV அறிமுகத்துடன் MG ஆனது பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) உரிமையாளருக்கான வாடகை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் மேலும் அணுகக்கூடியதாக மாறும் வாய்ப்புகள் அதிகம். மேலும் வாடிக்கையாளர்கள் அதன் பயன்பாட்டிற்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வின்ட்சர் EV ஒரு கி.மீ.க்கு ரூ. 3.5க்கு கிடைக்கும், இது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பவர்டு வாகனத்தின் எரிபொருள் செலவில் 40 சதவீதம் மட்டுமே ஆகும்.
தெளிவான வடிவமைப்பு, நவீனமான தோற்றம்
MG விண்ட்ஸர் EV ஆனது கிராஸ்ஓவர் பாடி ஸ்டைலை கொண்டுள்ளது மற்றும் தெளிவான, குறைந்தபட்ச வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது இருந்தபோதிலும் இது ஒரு நவீன தோற்றத்தை தக்க வைக்கிறது, கனெக்டட் LED DRL -கள் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் LED டெயில் விளக்குகள் உள்ளன. ஹெட்லைட்கள் பம்பரில் கொடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் MG லோகோ மையத்தில் கனெக்டட் DRL ஸ்ட்ரிப் -க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம், அதன் பெரிய 18-இன்ச் ஏரோடைனமிக் பாணியில் அலாய் வீல்கள், அதே சமயம் சார்ஜிங் மடல் முன் இடது ஃபெண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன தோற்றத்தை தருவது அதன் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் ஆகும்.
விண்ட்சர் EV நான்கு எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் ஒயிட், க்ளே பீஜ் மற்றும் டர்க்கைஸ் கிரீன்
மேலும் பார்க்க: BYD e6 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் eMAX 7 என அறியப்படும்
கேபின் மற்றும் வசதிகள்
உள்ளே MG விண்ட்ஸர் EV காரில் ஆல் பிளாக் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. கேபின் முழுவதும் புரோன்ஸ் ஆக்சென்ட்கள் இருக்கும் போது டேஷ்போர்டு வுடன் கார்னிஷ் உடன் வருகிறது. இது பிளாக் கலர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது. மேலும் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலும் லெதரெட்டில் கவர் செய்யப்பட்டிருக்கும். அதன் பின் இருக்கைகள் 135 டிகிரி சாய்வு ரிக்ளைனிங் வரை வழங்குகின்றன மற்றும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டுடன் வருகின்றன.
எம்ஜி தனது எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் கொடுக்கிறது. இது இன்று வரை இந்தியாவில் எந்த எம்ஜி காருக்கும் வழங்கப்படாத அளவிலான மிகப்பெரிய யூனிட் ஆகும். வின்ட்சர் EV ஆனது 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆட்டோமெட்டிக் ஏசி, இயங்கும் ஓட்டுனர் இருக்கை, பவர்டு டெயில்கேட் மற்றும் இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு பிரத்யேகமான ஒரு பனோரமிக் கிளாஸ் கூரை ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.
பவர்டிரெய்ன் விவரங்கள்
MG ஆனது விண்ட்ஸர் EVயை 38 kWh பேட்டரி பேக்குடன் வழங்குகிறது. விரிவான விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
38 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
136 PS |
டார்க் |
200 Nm |
MIDC உரிமைகோரப்பட்ட வரம்பு |
331 கி.மீ |
சார்ஜிங் விவரங்கள்
விண்ட்ஸர் EV -க்கான சார்ஜிங் ஆப்ஷன்கள் பின்வருமாறு:
சார்ஜர் |
சார்ஜிங் நேரம் |
3.3 kW ஏசி சார்ஜர் |
13.8 மணி நேரம் |
7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜர் |
6.5 மணி நேரம் |
50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் |
55 நிமிடங்கள் |
வாகன சந்தையில் முதன்முறையாக வின்ட்சர் EV -யின் பேட்டரி பேக்கில் முதல் செட் வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் உத்தரவாதம் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் eHUB ஆப் மூலம் MG மூலம் சார்ஜ் செய்தால் அனைத்து பப்ளிக் சார்ஜர்களிலும் ஒரு வருடம் வரை இலவசமாக சார்ஜிங் செய்து கொள்ளலாம்.
போட்டியாளர்கள்
MG விண்ட்ஸர் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஒரு ஆப்ஷனாக இருக்கும். அதன் விலையை கருத்தில் கொண்டு விண்ட்ஸர் EV டாடா பன்ச் EV -க்கும் போட்டியாக உள்ளது.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: விண்ட்ஸர் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful