பேஸ்லிஃப்டட் BYD e6 இப்போது இந்தியாவில் eMAX 7 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
published on செப் 11, 2024 05:13 pm by shreyash
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
BYD eMAX 7 இது e6-இன் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனாகும். இது ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் BYD M6 என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
BYD e6 2022-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன வாகன உற்பத்தியாளரின் முதல் மாடலாகும்.
-
eMAX 7 ஆனது சர்வதேச BYD M6 போன்றே அதே டிசைன் அப்டேட்களை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெளிப்புற அப்டேட்களில் புதிய LED லைட்டிங் மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
-
முக்கிய அம்சங்களில் 12.8-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை அடங்கும்.
-
சர்வதேச அளவில், M6 இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது: 55.4 கிலோவாட் மற்றும் 71.8 கிலோவாட், 530 கி.மீ வரை கிளைம் செய்யப்படும் ரேஞ்ஜை இது வழங்குகிறது.
-
e6 உடன் ஒப்பிடும்போது eMAX 7 பிரீமியம் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போது ரூ. 29.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளது.
இந்தியாவில் சீன வாகன உற்பத்தியாளரின் முதல் தயாரிப்பான BYD e6, மிட்லைஃப் அப்டேடுக்கு விரைவில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, BYD ஆனது பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட e6-ஐ 'eMAX 7' என மறுபெயரிட்டுள்ளது. சர்வதேச அளவில், இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் ‘M6’ பேட்ஜின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் eMAX 7 ஆனது புதுப்பித்த டிசைன், புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிரைவிங் ரேஞ்ஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'eMAX 7' என்பது எதைக் குறிக்கிறது?
BYD-இன் படி, e6 பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் புதிய பெயர், 'eMAX 7,' இது மூன்று முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கிறது: இதன் பெயரில் 'e' என்பது இது ஒரு எலக்ட்ரிக் கார் என்பதைக் குறிக்கிறது, MAX என்பது மேம்பட்ட செயல்திறன் மற்றும் ரேஞ்ஜைக் குறிக்கிறது, மேலும் 7 என்பது e6 MPV-க்கு அடுத்த மாடல் என்பதைக் குறிக்கிறது. 'eMAX 7' பெயர் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் செயல்திறன் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் நடைமுறை அனுபவத்தை உறுதியளிக்கிறது என்று வாகன உற்பத்தியாளர் கூறுகிறார். eMAX 7, 6 மற்றும் 7-சீட்டர் தளவமைப்புகளில் கிடைக்கக்கூடும் என்று இது குறிப்பிடுகிறது, அதே சமயத்தில் தற்போதைய e6, 5-சீட்டராக மட்டுமே வழங்கப்படுகிறது.
டிசைனில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
BYD eMAX 7 ஆனது அதன் முன்னோடியான e6-இன் அதே உடல் பாணி மற்றும் வடிவத்தைத் தக்கவைத்துக் கொள்ளும், ஆனால் சர்வதேச அளவில் விற்கப்படும் M6 போன்ற சில டிசைன் அப்டேட்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்களில் ரீடிசைன் செய்யப்பட்ட LED ஹெட்லைட்கள் மற்றும் BYD அட்டோ 3 மூலம் ஈர்க்கப்பட்ட புதிய கிரில் ஆகியவை அடங்கும். கூடுதல் மாற்றங்கள் புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட LED டெயில் லைட்கள் போன்றவை இதில் அடங்கும்.
மேலும் பார்க்க: MG Windsor EV-யில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்
கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
இதேபோல், eMAX 7 ஆனது BYD M6-இலிருந்து டாஷ்போர்டு மற்றும் கேபின் தீம் ஆகியவற்றைப் பெறுகிறது. சர்வதேச வெர்ஷன் ஆனது அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு டிசைனுடன் டூயல்-டோன் கேபினைக் கொண்டுள்ளது. இதன் சென்டர் கன்சோல் திருத்தப்பட்டுள்ளது, மேலும் புதிய டிரைவ் மோட் செலக்டரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது உட்புறத்திற்கு கூடுதல் அழகைச் சேர்கிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, eMAX 7 ஆனது BYD M6 போன்ற பெரிய 12.8-இன்ச் ரொட்டேட்டபிள் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் காற்றோட்டமான முன் சீட்களை உள்ளடக்கியிருக்கும். இதன் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இதில் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்படுகிறது. கூடுதலாக, இதில் லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமை (ADAS) வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் சென்டரிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் போன்ற மேம்பட்ட அம்சங்களும் அடங்கும்.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
சர்வதேச அளவில், BYD eMAX 7 இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 55.4 கிலோவாட் பேக் 163 PS எலக்ட்ரிக் மோட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பெரிய 71.8 கிலோவாட் பேக் 204 PS மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 530 கி.மீ வரையிலான NEDC (நியூ ஐரோப்பியன் ட்ரைவிங் சைக்கிள்) ரேஞ்ஜை வழங்குகிறது மற்றும் வெஹிகிள்-டு-லோட் (V2L) செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது வெளிப்புற சாதனங்களுக்கு மின்சாரம் வழங்குவதை அனுமதிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
BYD e6 உடன் ஒப்பிடும்போது eMAX 7 பிரீமியம் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் தற்போதைய விலை ரூ.29.15 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இந்திய சந்தையில் இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும், இந்த MPV ஆனது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகியவற்றுக்கு இது ஒரு எலெக்ட்ரிக் மாற்றாக செயல்படும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: BYD E6 ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful