Windsor EV இன்ட்டீரியர் இப்படித்தான் இருக்குமா ! டீசரை வெளியிட்ட எம்ஜி நிறுவனம்
காரின் இந்த புதிய டீசர் 135-டிகிரி ரிக்ளைனிங் சீட்கள் மற்றும் கேபின் தீம் ஆகியவற்றைக் காட்டுகிறது.
-
இந்தியாவில் MG நிறுவனத்தின் எலக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவில் வின்ட்சர் EV ஆனது மூன்றாவது காராக இருக்கும்.
-
சென்டர் கன்சோல் மற்றும் டோர் பேட்களில் புரோன்ஸ் இன்செர்ட்களுடன் கூடிய ஆல் பிளாக் கேபின் தீம் உடன் இது வரும்.
-
டீசரில் ஃபோல்டபிள் ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பின்புற ஏசி வென்ட்களை பார்க்க முடிகிறது.
-
இது 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் பவர்-அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பின்பக்க பயணிகள் அனைவருக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் கொடுக்கப்படலாம்
-
இது கிளவுட் EV போன்ற அதே 50.6 kWh பேட்டரி பேக்கை பெறலாம். ARAI-ரேட்டட் கிளைம்டு ரேஞ்சில் மாற்றம் இருக்கலாம்.
-
விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
எம்ஜி நிறுவனம்இந்தியாவில் அதன் மூன்றாவது எலக்ட்ரிக் காராக எம்ஜி வின்ட்சர் இவி -யை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ஏற்கெனவே சில டீசர்களை வெளியிட்ட எம்ஜி நிறுவனம் தற்போது புதிய டீசர் மூலம் இன்டீரியரை பற்றிய ஃபர்ஸ்ட் லுக்கை வழங்கியுள்ளது. இந்த டீசரில் நாம் பார்க்கும் விஷயங்களை இங்கே பார்க்கலாம்:
டீசரில் நாம் என்ன பார்க்க முடிகிறது?
MG விண்ட்ஸர் EV -யின் டீசர் பிளாக் கலர் லெதரெட் இருக்கைகளுடன் இரண்டாவது வரிசையை காட்டுகிறது. அதில் தெரியும் தனித்துவமான வசதி, 135 டிகிரி ரிக்ளைனிங் பின் இருக்கைகள் ஆகும். பின் இருக்கைகளில் ஃபோல்டபிள் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. மூன்று பின்புற இருக்கைகளும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-பாயின்ட் சீட் பெல்ட்களுடன் வருகின்றன என்பதை படம் காட்டுகிறது. கூடுதலாக பின்புற ஏசி வென்ட் மற்றும் பின்புற டிஃபாகர் ஆகியவையும் டீசரில் காட்டப்பட்டுள்ளன.
உட்புறம் ஆல் பிளாக் நிற திட்டத்தில் புரோன்ஸ் ஆக்ஸென்ட்களுடன் காணப்படுகிறது. இருப்பினும் டீசரில் காணப்படும் ஆம்பியன்ட்ஸ் லைட்ஸ் நீல கலரில் உள்ளன. ஆனால் தயாரிப்புக்கு தயாரான ஸ்பெக் மாடல் அதிக வண்ணங்களுடன் வரக்கூடும்.
மேலும் படிக்க: MG விண்ட்ஸர் EV: 10 படங்களில் விரிவாக பார்க்கலாம்
இந்த காரில் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், எலக்ட்ரிக்ம் அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் டெயில்கேட் ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம். MG விண்ட்ஸர் ஆனது அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வரலாம், இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை அடங்கும்.
MG விண்ட்ஸர் EV எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்
MG விண்ட்ஸர் ஆனது 136 PS மற்றும் 200 Nm டார்க்கை வழங்கும் ஒரே ஒரு ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) செட்டப் உடன் 50.6 kWh பேட்டரி பேக் உடன் வரும். இந்தோனேஷியா-ஸ்பெக் பதிப்பு சீனா லைட் டூட்டி வெஹிக்கிள் டெஸ்ட் சைக்கிள் (CLTC) அடிப்படையில் 460 கி.மீ ரேஞ்சை கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய சந்தையைப் பொறுத்தவரை இந்த ரேஞ்சில் மாற்றம் இருக்கலாம். இந்த ரேஞ்சை இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) சோதிக்கும்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எம்ஜி அறிவித்துள்ளது. விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் MG ZS EV -க்கு விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும். மேலும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV -க்கு பிரீமியம் ஆப்ஷனாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.