சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பிரிட்டிஷ் ரேசிங் கலர்களை அறிமுகப்படுத்துகிறது

published on மே 13, 2024 07:12 pm by ansh for எம்ஜி ஹெக்டர்

MG ஆஸ்டர், ஹெக்டர், காமெட் EV மற்றும் ZS EV ஆகிய மாடல்களுக்கான 100-வது ஆண்டையொட்டி லிமிடெட் எடிஷனை MG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

  • காமெட் EV -யை தவிர அனைத்து மாடல்களுக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷனுக்கு 20,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.

  • காமெட் EV -ன் ஸ்பெஷல் எடிஷனுக்கு கூடுதலாக ரூ.16,000 வசூலிக்கப்படுகிறது.

  • 100 -வது ஆண்டு எடிஷனானது புதிய வெளிப்புற ஷேட், பிளாக்-அவுட் கேபின் மற்றும் கஸ்டமைசேஷன் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

குளோஸ்டரை தவிர்த்து இந்தியாவில் அதன் பிற மாடல்கள் முழுவதும் 100-வது ஆண்டுக்கான ஸ்பெஷல் லிமிடெட் எடிஷனை MG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் MG ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், காமெட் EV மற்றும் ZS EV மாடல்களுக்கு கிடைக்கிறது, இது MG-இன் 100-வது ஆண்டின் நிறைவையொட்டி இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் விலை மற்றும் பிரத்தியேக வசதிகளை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.

விலை

மாடல்

வேரியன்ட்

ஸ்பெஷல் எடிஷன்

ஸ்டாண்டர்டு வேரியன்ட்

வித்தியாசம்

MG ஆஸ்டர்

ஷார்ப் ப்ரோ 1.5 பெட்ரோல் MT

ரூ. 14.81 லட்சம்

ரூ. 14.61 லட்சம்

+ரூ. 20,000

ஷார்ப் ப்ரோ 1.5 பெட்ரோல் CVT

ரூ. 16.08 லட்சம்

ரூ. 15.88 லட்சம்

+ரூ. 20,000

MG ஹெக்டர்

ஷார்ப் ப்ரோ பெட்ரோல் CVT 5 சீட்டர்

ரூ. 21.20 லட்சம்

ரூ. 21 லட்சம்

+ரூ. 20,000

ஷார்ப் ப்ரோ பெட்ரோல் CVT 7 சீட்டர்

ரூ. 21.93 லட்சம்

ரூ. 21.73 லட்சம்

+ரூ. 20,000

MG காமெட் EV

எக்ஸ்க்ளூசிவ் FC

ரூ. 9.40 லட்சம்

ரூ. 9.24 லட்சம்

+ரூ. 16,000

MG ZS EV

எக்ஸ்க்ளூசிவ் பிளஸ்

ரூ. 24.18 லட்சம்

ரூ. 23.98 லட்சம்

+ரூ. 20,000

ஆஸ்டர், ஹெக்டர் மற்றும் ZS EV-க்கான 100-வது ஆண்டுக்கான ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களில் கிடைக்கிறது. அதே சமயம் காமெட் EV-க்கு இது டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூசிவ் FC வேரியன்டில் வழங்கப்படுகிறது. ஆஸ்டர் காம்பாக்ட் எஸ்யூவியின் மேனுவல் மற்றும் CVT ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் இந்த ஸ்பெஷல் லிமிடெட் எடிஷனை MG வழங்குகிறது.

மேலும் பார்க்க: MG காமெட் EV-இல் 5 பேக்குகளை எப்படி வைக்கலாம், வீடியோவை பாருங்கள்

ஹெக்டரின் 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் (ஹெக்டர் பிளஸ்) எடிஷன்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் கிடைக்கிறது. மேலும் இது பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்களுடன் வழங்கப்படுகிறது. இருப்பினும் இது ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸின் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களில் கிடைக்காது. டீசல் வேரியன்ட்களுக்கான விலையை MG இன்னும் வெளியிடவில்லை.

மாற்றங்கள்

இந்த ஸ்பெஷல் எடிஷனில் அனைத்து MG மாடல்களும் ஒரே மாதிரியான அப்டேட்டை பெறுகின்றன. வெளிப்புறமானது 'எவர்கிரீன்' ஷேடில் வருகிறது. இது பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பிளாக் கலர் எலமென்ட்களுடன் கூடிய பிளாக் ரூப் உடன் வருகின்றது. வெளியில் உள்ள குரோம் எலமென்ட்கள் குறைக்கப்பட்டு பிளாக் அல்லது கருமையான குரோம் பிட்களால் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து மாடல்களும் டெயில்கேட்டில் ‘100-வது ஆண்டு எடிஷன்’ என்ற பேட்ஜிங்கை பெறுகின்றன.

இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் கேபின் பிளாக் டாஷ்போர்டு, கிரீன் மற்றும் பிளாக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் முன் ஹெட்ரெஸ்ட்களில் '100-வது ஆண்டு எடிஷன்' பேட்ஜிங் உட்பட அனைத்து பிளாக் கலரில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், கஸ்டமைஸ்டு விட்ஜெட்டுடன் 'எவர்கிரீன்' கலர் தீம் உடன் வருகிறது.

பிற ஸ்பெஷல் எடிஷன்கள்

MG -யின் மற்றொரு ஸ்பெஷல் எடிஷனான 'பிளாக்ஸ்டார்ம்' எடிஷன் ஆஸ்டர், ஹெக்டர் மற்றும் க்ளோஸ்டர் மாடல்களுக்கு கிடைக்கிறது. இந்த எடிஷன் முழுவதும் பிளாக் கலர் மற்றும் கேபினில் ரெட் கலர் ஹைலைட்ஸை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் 100-வது ஆண்டு எடிஷனுக்கான எந்த ஒரு தனித்தன்மையையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் படிக்க: ஹெக்டர் ஆட்டோமேட்டிக்

a
வெளியிட்டவர்

ansh

  • 67 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது எம்ஜி ஹெக்டர்

Read Full News

explore similar கார்கள்

எம்ஜி ஹெக்டர் பிளஸ்

Rs.17.30 - 23.08 லட்சம்* get சாலை விலை
டீசல்15.58 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

எம்ஜி ஹெக்டர்

Rs.13.99 - 22.24 லட்சம்* get சாலை விலை
டீசல்13.79 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.60.97 - 65.97 லட்சம்*
Rs.14.49 - 19.49 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை