• English
    • Login / Register

    MG Hector Style மற்றும் Mahindra XUV700 MX 5-சீட்டர்: விவரங்கள் ஒப்பீடு

    மஹிந்திரா எக்ஸ்யூவி700 க்காக மார்ச் 21, 2024 07:59 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 35 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்த மிட்-சைஸ் எஸ்யூவிகளின் என்ட்ரி லெவல் பெட்ரோலில் இயங்கும் வேரியன்ட்களுக்கு நிகரான விலையுடன் இருக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவது எது ? வாருங்கள் கண்டுபிடிக்கலாம்.

    ஹூண்டாய் கிரெட்டா அல்லது மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களை விட ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில் 5 சீட்டர்களை கொண்ட எஸ்யூவி உங்களின் விருப்பமாக இருந்தால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில ஆப்ஷன்கள் உள்ளன. MG ஹெக்டரின் பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் வேரியன்ட் விலை இப்போது ரூ.96000 வரை குறைந்துள்ளது. இதன் விளைவாக ஹெக்டரின் பேஸ்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட் நேரடியாக மஹிந்திரா XUV700 MX 5-சீட்டருடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டு மிட்-சைஸ் எஸ்யூவி -களை அதன் அறிவிக்கப்பட்ட ஸ்பெசிஃபிகேஷன்களின் அடிப்படையில் ஒப்பிடுவோம்.

    விலை

     

    MG ஹெக்டர் ஸ்டைல் பெட்ரோல்

     

    மஹிந்திரா XUV700 MX 5-சீட்டர் பெட்ரோல்

     

    ரூ.13.99 லட்சம்

     

    ரூ.13.99 லட்சம்

    விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

    MG மற்றும் மஹிந்திரா எஸ்யூவி -களின் பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் வேரியன்ட் இரண்டுமே  ஒரே விலையில் கிடைக்கின்றன.

    அளவுகள்

     

     

    MG ஹெக்டர்

     

    மஹிந்திரா XUV700

     

    நீளம்

     

    4655 மிமீ

     

    4695 மிமீ

     

    அகலம்

     

    1835 மிமீ

     

    1890 மிமீ

     

    உயரம்

     

    1760 மிமீ

     

    1755 மிமீ

     

    வீல்பேஸ்

     

    2750 மிமீ

     

    2750 மிமீ

    MG Hector Style Variant

    • மஹிந்திரா XUV700 MG ஹெக்டரின் பேஸ்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்டை விட 40 மிமீ நீளமும் 55 மி.மீ அகலமும் கொண்டது.

    • மேலே குறிப்பிட்டுள்ள ஹெக்டரின் நீளம் அதன் பேஸ்-ஸ்பெக் வேரியன்டிற்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். எஸ்யூவி -யின் மற்ற அனைத்து வேரியன்ட்களின் நீளம் 4699 மிமீ ஆகும்.

    • பேஸ்-ஸ்பெக் ஹெக்டருக்கும் அதன் பிற வேரியன்ட்களுக்கும் இடையிலான உள்ள நீள வித்தியாசம் என்னவென்றால் MG ஹெக்டரின் பேஸ்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்டை அதன் ப்ரீ-ஃபேஸ்லிஃப்டெட் அவதாரில் வழங்குகிறது.

    • ஹெக்டர் XUV700 ஐ விட 5 மிமீ உயரமானது. அதே சமயம் இரண்டு எஸ்யூவி -களுக்கான வீல்பேஸ் ஒரே மாதிரியாக தான் உள்ளது.

    மேலும் பார்க்க: Ford Endeavour vs Toyota Fortuner ஸ்பெசிஃபிகேஷன்கள் ஒப்பீடு

    பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

     

    விவரங்கள்

     

    MG ஹெக்டர் ஸ்டைல் பெட்ரோல்

     

    மஹிந்திரா XUV700 MX 5-சீட்டர் பெட்ரோல்

     

    இன்ஜின்

     

    1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்

     

    2 லிட்டர் டர்போ பெட்ரோல்

     

    பவர்

     

    143 PS

     

    200 PS

     

    டார்க்

     

    250 Nm

     

    380 Nm

     

    டிரான்ஸ்மிஷன்

     

    6-ஸ்பீடு MT

     

    6-ஸ்பீடு MT

    • இரண்டுமே டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின்களை பெறுகின்றன. ஆனால் XUV700 ஆனது ஹெக்டரின் 1.5-லிட்டர் இன்ஜினுடன் ஒப்பிடும்போது 57 PS மற்றும் 130 Nm அதிக டார்க்கை உருவாக்கும் பெரிய 2-லிட்டர் யூனிட்டை பெறுவதால் எனவே XUV700 ஆனது ஹெக்டரை  காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

    • ஹெக்டர் மற்றும் XUV700 இரண்டின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் பார்க்க: Mahindra XUV300 Facelift: இதற்காக காத்திருக்கலாமா ? அல்லது அதற்கு பதிலாக அதன் போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா?

    சிறப்பம்சங்கள்

     

     

    MG ஹெக்டர் ஸ்டைல்

     

    மஹிந்திரா XUV700 MX




    எக்ஸ்ட்டீரியர்

    • LED DRL-களுடன் கூடிய  ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

    • செமி LED டெயில் லைட்ஸ்
    • ORVM-இல் ஆன் இண்டிகேட்டர்
    • ஷார்க்-பின் ஆண்டெனா (மைக்ரோ-வகை)
    • ரூஃப் ரெயில்கள்
    • வீல் கவர் கொண்ட 17-இன்ச் ஸ்டீல் வீல்கள்
    • ஃபாலோ மீ ஹோம் செயல்பாட்டைக் கொண்ட ஹாலோஜன் ஹெட்லைட்கள்
    • LED டெயில் விளக்குகள்

    • ரூஃப் ஆண்டெனா

    • ORVMகளை ஆன் இண்டிகேட்டர்

    • ஃப்ளஷ் வகை டோர் ஹேண்டில்கள் 

    • வழக்கமான ரூஃப் ஆண்டெனா

    • 17-இன்ச் ஸ்டீல் வீல்கள்

     



    இன்டிரியர்

    • ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

    • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட்

    • ரியர் ஆர்ம்ரெஸ்ட்

    • ஃப்ரன்ட் மற்றும் ரியர் ரீடிங் லைட்ஸ் 

    • அனைத்து சீட்களுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள்

    • 2 வது வரிசை சீட் ரிக்ளைனிங்

    • ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

    • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட்

    • ஃப்ரன்ட் மற்றும் ரியர் ரீடிங் விளக்குகள்

    • அனைத்து ஜன்னல் சீட்களுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள்

     

     

    வசதி மற்றும் சௌகரியம்

     
    • மேனுவல் ஏசி

    • ரியர் ஏசி வென்ட்டுகள்

    • டில்ட் அட்ஜஸ் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல்

    • ஸ்டோரேஜ் உடன் கூடிய டிரைவர் ஆர்ம்ரெஸ்ட்

    • டிரைவர் பக்க ஆட்டோ-டவுன் செயல்பாட்டுடன் கூடிய நான்கு பவர் விண்டோஸ்

    • எலக்ட்ரிக் அமைப்பில் அட்ஜஸ்ட செய்யக்கூடிய ORVMகள்

    • ரியர் டிஃபாகர்

    • ரியர் வைப்பர் மற்றும் வாஷர்

    • USB சார்ஜிங் போர்ட்கள்

    • மேனுவல் ஏசி
    • ரியர் ஏசி வென்ட்டுகள்

    • டில்ட் அட்ஜஸ் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல்

    • சேமிப்பகத்துடன் கூடிய டிரைவர் ஆர்ம்ரெஸ்ட்

    • நான்கு பவர் விண்டோஸ்கள்

    • எலக்ட்ரிக் அமைப்பில் அட்ஜஸ்ட செய்யக்கூடிய ORVMகள்

    • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள்

    • டே/நைட் IRVM

    • USB சார்ஜிங் போர்ட்கள்

     

    இன்ஃபோடெயின்மெண்ட்

    • USB FM மற்றும் ப்ளூடூத் கொண்ட ஆடியோ சிஸ்டம்

    • 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

    • 3.5 இன்ச் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே கொண்ட அனலாக் கிளஸ்டர்

    • 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்

    • டிரைவருக்கான 7 இன்ச் செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே

    • ஆண்ட்ராய்டு ஆட்டோ

    • 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்



    பாதுகாப்பு

    • டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்குகள்

    • EBDயுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம்

    • எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல்

    • ரியர் பார்க்கிங் சென்சார்கள்

    • நான்கு டிஸ்க் பிரேக்குகள்

    • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்

    • டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்குகள்

    • EBDயுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம்
    • எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல்

    • ரியர் பார்க்கிங் சென்சார்கள்

    • நான்கு டிஸ்க் பிரேக்குகள்

    • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்

    MG Hector Style Interior

    • இதே விலையில் பேஸ்-ஸ்பெக் MG ஹெக்டரில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள் இல்லை .ஆனால் இரண்டு கார்களிலுன் ஆடியோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    • இரண்டு எஸ்யூவி -களின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களும் நான்கு பவர் விண்டோஸ் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ORVM-கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட் மற்றும் டில்ட் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஸ்டீயரிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளன.

    • பேஸ்-ஸ்பெக் ஹெக்டரில் ரியர் டிஃபோகர் மற்றும் ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை அடங்கும். ஆனால் XUV700 இன் MX வேரியன்ட்டில் இந்த சிறப்பம்சங்கள் இல்லை.

    • இரண்டு எஸ்யூவி -களும் டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் நான்கு டிஸ்க் பிரேக்குகளுடன் வருகின்றன.

    முக்கிய விவரங்கள்:

    இரண்டு எஸ்யூவி -களின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களும் அடிப்படையான வசதிகளை மட்டுமே வழங்குகின்றன என்றாலும் XUV700 -ன் பேஸ்-ஸ்பெக் டிரிம் ஆண்ட்ராய்டு ஆட்டோவை கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது. இருப்பினும் MG எஸ்யூவி ஆனது மஹிந்திரா போட்டியாளரிடம் இல்லாத ரியர் வைப்பர் மற்றும் டிஃபோகர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

    கூடுதலாக XUV700 ஹெக்டரை விட சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது ஆனால் நீங்கள் சிறந்த மைலேஜ் -க்கா கஹெக்டர் உங்களின் சிறந்த தேர்வாக இருக்கலாம்.

    ஒட்டுமொத்தமாக மஹிந்திரா XUV700-இன் MX 5-சீட்டர் பெட்ரோல் வேரியன்ட் MG ஹெக்டரின் ஸ்டைல் வேரியன்ட்டை விட சற்றே கூடுதல் மதிப்பை வழங்குகிறது இருப்பினும் வேறுபாடு குறிப்பிடத்தக்கதாக இல்லை.

    இந்த இரண்டு கார்களில் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்கும்? கீழே உள்ள கமெண்ட் பகுதியின் மூலமாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    மேலும் படிக்க: மஹிந்திரா XUV700-இன் ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூவி700

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience