சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Maruti Wagon R காரின் புதிய வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது

மாருதி வாகன் ஆர் க்காக செப் 20, 2024 07:01 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷன், டாப்-ஸ்பெக் ZXi வேரியன்ட் மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக சில ஆக்ஸசெரீஸ்களுடன் வருகிறது.

  • புதிய மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷனின் விலை ரூ.5.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

  • இது பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படுகிறது.

  • இது ஃபாக் லேம்ப்ஸ் மற்றும் கிரில்லுக்கான குரோம் இன்செர்ட்கள் போன்ற புதிய வசதிகளை கொண்டுள்ளது.

  • இன்ட்டீரியரில் இருக்கை கவர்கள், டச் ஸ்கிரீன் மற்றும் புதிய 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

  • இன்ஜின் ஆப்ஷன்களில் 1-லிட்டர் (67 PS) மற்றும் 1.2-லிட்டர் (90 PS), CNG பதிப்பு 57 PS அவுட்புட்டை கொடுக்கும்.

புதியது மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் பதிப்பு புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 5.65 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). லிமிடெட் எடிஷனின் முழுமையான வேரியன்ட் வாரியான விலை பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இது Lxi, Vxi மற்றும் Zxi வேரியன்ட்களில் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வேகன் ஆர் வால்ட்ஸ் பதிப்பில் புதியது என்ன என்பது பற்றிய விரைவான கண்ணோட்டம் இங்கே:

கூடுதல் ஆக்ஸரீஸ்களுடன் வரும் வெளிப்புறம்

வேகன் ஆர் வால்ட்ஸ் பதிப்பின் வெளிப்புற வடிவமைப்பு பெரும்பாலும் மாறாமல் உள்ளது. ஆனால் அதில் சில புதிய பாகங்கள் உள்ளன:

  • முன்பக்க ஃபாக் லேம்ப்ஸ்

  • வீல் ஆர்ச் கிளாடிங்

  • பம்பர் புரொடெக்டர்ஸ்

  • சைடு கிளாடிங்

  • பாடி சைடு மோல்டிங்

  • குரோம் கிரில் இன்செர்ட்கள்

  • டோர் விசர்

வேகன் R ஆனது ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லேம்ப்களுடன் கூடிய டால்பாய் டிசைனை கொண்டுள்ளது. அத்துடன் அலாய் வீல்கள் (Zxi பிளஸ் வேரியன்ட்களில் மட்டும் ஹாலோஜன் டெயில் லைட்டுகள் மற்றும் ஸ்டீல் வீல்கள் கிடைக்கும்).

வெவ்வேறு பொருட்களுடன் ஒரே மாதிரியான உட்புறம்

வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷனின் உட்புறம் வழக்கமான மாடலை போலவே புதிய சீட் கவர்களுடன் உள்ளது. இது ஒரு புளூ கலர் ஃபுளோர் மேட் மற்றும் Vxi மற்றும் Zxi வேரியன்ட்களுக்கான ஸ்டீயரிங் வீல் கவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதல் வசதிகளில் டோர் சில் கார்டு, டிஷ்யூ பாக்ஸ் மற்றும் இரண்டு போர்ட் ஃபாஸ்ட் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவை அடங்கும். ஒப்பிடுகையில் வழக்கமான வேகன் ஆர் ஒரு வொயிட் மற்றும் பிளாக் கலர் டூயல்-டோன் சீட் அப்ஹோல்ஸ்டரியைக் கொண்டுள்ளது. இல்லையெனில் வால்ட்ஸ் பதிப்பு நிலையான வேகன் ஆர் -ன் அனைத்து வசதிகளையும் தக்க வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க: ஆகஸ்ட் 2024 இல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக் விற்பனையில் மாருதி ஆதிக்கம் செலுத்தியது

ஒரு சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன

மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷன் முன்பு போலவே வேரியன்ட்-குறிப்பிட்ட வசதிகளைப் பெறுகிறது. மேலும் சில வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள்:

  • ஒரு டச் ஸ்கிரீன்

  • ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

  • மல்டி ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

இந்த வசதிகள் அனைத்தும் ஏற்கனவே ஃபுல்லி லோடட் Zxi பிளஸ் வேரியன்ட்டுடன் கிடைக்கின்றன. Lxi, Vxi மற்றும் Zxi வேரியன்ட்களின் உபகரணங்கள் பட்டியலில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

வேகன் ஆர் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களின் தேர்வை கொண்டுள்ளது : 1-லிட்டர் இன்ஜின் (67 PS மற்றும் 89 Nm), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 1.2-லிட்டர் இன்ஜின் (90) உடன் கிடைக்கிறது. PS மற்றும் 113 Nm), மேலும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT ஆப்ஷன் கிடைக்கும்.

CNG பதிப்பு 1-லிட்டர் இன்ஜினுடன் (57 PS மற்றும் 82 Nm) வருகிறது. மேலும் இது ஒரு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும்.

போட்டியாளர்கள்

வேகன் ஆர் காரின் விலை ரூ.5.54 லட்சம் முதல் ரூ.7.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும். இது மாருதி செலிரியோ, டாடா டியாகோ, மற்றும் சிட்ரோன் சி3 ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மாருதி வேகன் ஆர் ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Maruti வாகன் ஆர்

K
k banerjee
Sep 23, 2024, 7:34:45 AM

I just love मारुति.Jai बजरंगबली. WagonR the best car. Please increase more offer. It need more attractive look.

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.5 - 8.45 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.16 - 10.15 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை