சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஜனவரி 2025 முதல் மாருதி கார்களின் விலை உயரவுள்ளது

gajanan ஆல் டிசம்பர் 09, 2024 07:09 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
61 Views

மாருதி தனது கார்களுக்கு நான்கு சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்த உள்ளது. இதில் அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார் மாடல்கள் அடங்கும்

மாருதி நிறுவனம் தனது கார்களின் விலையை ஜனவரி 2025 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி விலை உயர்வு நான்கு சதவிகிதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த விலை உயர்வானது மாடல்களைப் பொறுத்து மாறுபடும். அரீனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்கப்படும் 17 மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த விலை உயர்வு?

தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பை எதிர்கொள்ள வரவிருக்கும் விலை உயர்வு அவசியம் என்று மாருதி தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு ஆல்டோ K10, டிசையர், ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா, ஃப்ரோன்க்ஸ், எர்டிகா, பலேனோ, வேகன் R, செலிரியோ, XL6, இக்னிஸ், ஈகோ, ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, S-பிரஸ்ஸோ, சியாஸ் மற்றும் இன்விக்டோ உள்ளிட்ட பல்வேறு மாடல்களின் விற்பனையை பாதிக்க கூடும். இந்த மாடல்களில் பலவும் CNG வேரியன்ட் ஆப்ஷனை வழங்குகின்றன.

மாருதியின் தற்போதைய வேரியன்ட்களின் விலை விவரங்களை பாருங்கள்:

அரீனாவின் வேரியன்ட்கள்

மாருதி சுஸூகி அரீனா

விலை (எக்ஸ்-ஷோரூம்)

ஆல்டோ K10

ரூ.3.99 லட்சத்தில் இருந்து ரூ.5.96 லட்சம் வரை

S-பிரஸ்ஸோ

ரூ.4.27 லட்சத்தில் இருந்து ரூ.6.12 லட்சம் வரை

வேகன் R

ரூ.5.54 லட்சத்தில் இருந்து ரூ.7.33 லட்சம் வரை

செலிரியோ

ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.7.05 லட்சம் வரை

ஸ்விஃப்ட்

ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் வரை

டிசையர்

ரூ.6.79 லட்சத்தில் இருந்து ரூ.10.14 லட்சம் வரை (அறிமுக விலை)

பிரெஸ்ஸா

ரூ.8.34 லட்சத்தில் இருந்து ரூ.14.14 லட்சம் வரை

எர்டிகா

ரூ.8.69 லட்சத்தில் இருந்து ரூ.13.03 லட்சம் வரை

இகோ

ரூ.5.32 லட்சத்தில் இருந்து ரூ.6.58 லட்சம் வரை

மேலும் படிக்க: புதிய ஹோண்டா அமேஸ் மற்றும் புதிய மாருதி டிசையர் விவரக்குறிப்புகளின் ஒப்பீடு

நெக்ஸா வேரியன்ட்கள்

மாருதி நெக்ஸா கார்கள்

விலை (எக்ஸ்-ஷோரூம்)

ஃபிரான்க்ஸ்

ரூ.7.52 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் வரை

ஜிம்னி

ரூ.12.74 லட்சத்தில் இருந்து ரூ.14.95 லட்சம் வரை

இக்னிஸ்

ரூ.5.84 லட்சத்தில் இருந்து ரூ.8.06 லட்சம் வரை

பலேனோ

ரூ.6.66 லட்சத்தில் இருந்து ரூ.9.83 லட்சம் வரை

சியாஸ்

ரூ.9.40 லட்சத்தில் இருந்து ரூ.12.30 லட்சம் வரை

XL6

ரூ.11.61 லட்சத்தில் இருந்து ரூ.14.77 லட்சம் வரை

கிராண்ட் விட்டாரா

ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.20.09 லட்சம் வரை

இன்விக்டோ

ரூ.25.21 லட்சத்தில் இருந்து ரூ.28.92 லட்சம் வரை

மாருதி வெகுஜன சந்தையில் அனைத்து பட்ஜெட் பிரிவு கார்களையும் வழங்குகிறது. அதன் மிகவும் மலிவு மாடலான ஆல்டோ K10, ரூ. 3.99 லட்சத்தில் தொடங்குகிறது, மேலும் அதன் விலையுயர்ந்த கார் ஆன இன்விக்டோ ரூ. 28.92 லட்சம் வரை செல்கிறது.

2025 மற்றும் அதற்கு அப்பால் மாருதியின் திட்டங்கள் என்ன?

வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல், மாருதி அதன் இ-விட்டாரா (முன்பு eVX ) புரொடக்ஷன் வெர்ஷன் உட்பட பல புதிய மாடல்களை காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எலக்ட்ரிக் கார்களின் சந்தையில் புதிய பிராண்டின் நுழைவைக் குறிக்கிறது. இ-விட்டாரா 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வர உள்ளது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

Share via

Write your Comment on Maruti ஸ்விப்ட்

explore similar கார்கள்

மாருதி கிராண்டு விட்டாரா

4.5561 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி26.6 கிமீ / கிலோ
பெட்ரோல்21.11 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி டிசையர்

4.7416 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி33.73 கிமீ / கிலோ
பெட்ரோல்24.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி ஃபிரான்க்ஸ்

4.5599 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி28.51 கிமீ / கிலோ
பெட்ரோல்21.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி பிரெஸ்ஸா

4.5722 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி25.51 கிமீ / கிலோ
பெட்ரோல்19.89 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

மாருதி ஸ்விப்ட்

4.5372 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
சிஎன்ஜி32.85 கிமீ / கிலோ
பெட்ரோல்24.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

ஓலா எலக்ட்ரிக் கார்

4.311 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.40 லட்சம்* Estimated Price
டிசம்பர் 16, 2036 Expected Launch
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை