• English
  • Login / Register

Maruti Swift: Zxi வேரியன்ட் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததா?

published on ஜூலை 15, 2024 05:19 pm by ansh for மாருதி ஸ்விப்ட்

  • 27 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய ஸ்விஃப்ட் காரில் தேர்வுசெய்ய 5 வேரியன்ட்கள் உள்ளன: Lxi, Vxi, Vxi (O), Zxi மற்றும் Zxi பிளஸ். இவற்றில் ஒன்று மட்டுமே உங்கள் அனைத்து தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

Maruti Swift: Most Value For Money Variant

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கடந்த மே மாதம் விற்பனைக்கு வந்தது. மேலும் இது புத்தம் புதிய வடிவமைப்பு, அப்டேட் செய்யப்பட்ட இன்ட்டீரியர்கள், பிரிவில் கொடுக்கப்பட்ட முதல் வசதிகள் மற்றும் புதிய மற்றும் அதிக மைலேஜ் திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜினுடன் வந்தது. ஹேட்ச்பேக் 5 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது, மேலும் அதன் விலையில் எது அதிகம் வழங்கப்பட உள்ளது என்பதைப் பார்க்க அனைத்து வேரியன்ட்களின் விரிவான ஆய்வை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். 

எங்கள் ஆய்வு விவரங்கள்

Lxi: இது ஒரு பொதுவான பேஸ் வேரியன்ட். அடிப்படையான விஷயங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு வசதிகளில் நன்றாக உள்ளன. உங்களுக்கு சில கம்ஃபோர்ட் வசதிகள் மற்றும்/அல்லது AMT டிரான்ஸ்மிஷன் தேவைப்பட்டால், அடுத்த-இன்-லைன் Vxi வேரியன்ட்டை தேர்வு செய்யவும்.

Vxi: நகரப் பயணங்களில் கூடுதல் வசதிக்காக AMT ஆப்ஷனை உங்களுக்கு வழங்குகிறது. மேலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள் போன்ற சில பயனுள்ள வசதிகள் கிடைக்கும்.

Vxi (O): சற்று இறுக்கமான பட்ஜெட்டில் கனெக்டட் கார் வசதிகளை நீங்கள் தேடுகிறீர்களா என்பதை மட்டும் கவனியுங்கள். Vxi வேரியன்ட்டின் மீது இது வழங்கும் வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றதாக இல்லை.

Zxi: நாங்கள் பரிந்துரைக்கும் வேரியன்ட் இது. இது Vxi (O) -யை விட பல வசதிகளை கொண்டுள்ளது, மேலும் சிறந்த வெளிப்புற ஸ்டைலிங்கை பெறுகிறது. இவை அனைத்தும் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற மதிப்பை தரக்கூடியவை.  

Zxi Plus: புதிய தலைமுறை ஸ்விஃப்ட்டின் முழு பிரீமியம் அனுபவத்தை நீங்கள் விரும்பினால் மட்டும் இதை தேர்ந்தெடுக்கவும். இது அதிக வசதிகளை வழங்குகிறது மற்றும் டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் ஃபினிஷ்க்கான ஆப்ஷனையும் பெறுகிறது.

Swift Zxi: சிறந்த வேரியன்ட்?

Maruti Swift LED Headlights & DRLs

வேரியன்ட்

எக்ஸ்-ஷோரூம் விலை

MT

ரூ.8.29 லட்சம்

AMT

ரூ.8.75 லட்சம்

புதிய ஸ்விஃப்ட்டின் இந்த வேரியன்ட்டை அதன் விரிவான வசதிகள் பட்டியல் மற்றும் அதன் ஓரளவுக்கு நன்றான வெளிப்புறங்கள் காரணமாக இதை பரிந்துரைக்கிறோம். Zxi வேரியன்ட் LED DRLகள் உட்பட அனைத்து சுற்றிலும் LED லைட்டிங் எலெமென்ட்களை பெறுகிறது. மேலும் இது 15-இன்ச் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட் ஒரு இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் நீங்கள் Zxi வேரியன்ட்டுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் (AMT) இரண்டையும் தேர்வு செய்யலாம்.

Maruti Swift Engine

இன்ஜின்

1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல்

பவர்

82 PS

டார்க்

112 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/ 5-ஸ்பீடு AMT

இந்த வேரியன்ட் ஒரு நிறைய வசதிகளை கொண்டுள்ளது, மேலும் டாப்-ஸ்பெக் Zxi பிளஸ் வேரியன்ட்டுடன் ஒப்பிடுகையில் சில வசதிகளை மட்டுமே இதில் கிடைக்காது. வசதிகளின் விவரங்கள் இங்கே.

Maruti Swift Wireless Phone Charger

வெளிப்புறம்

  • ஆட்டோ-LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • LED டெயில் லைட்ஸ்

  • LED DRLகள்

  • 15-இன்ச் அலாய் வீல்கள்

  • பாடி கலர்டு ORVM -கள்

  • பாடி கலர்டு டோர் ஹேண்டில்ஸ் 

உட்புறம்

  • ஆல் பிளாக் கேபின்

  • ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி

  • அட்ஜஸ்ட்டபிள் பின்புற இருக்கை ஹெட்ரெஸ்ட்கள்

  • பூட் லைட்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் 

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • வாய்ஸ் அசிஸ்டென்ட்

  • சுஸூகி கனெக்ட் (கனெக்டட் கார் டெக்னாலஜி)

கம்ஃபோர்ட் & வசதி

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • பின்புற துவாரங்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

  • ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்

  • எலக்ட்ரிக்கலி சரி செய்து கொள்ளக்கூடிய மற்றும் ஃபோல்டபிள் ORVM -கள்

  • உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட் 

  • பின்புற USB போர்ட்கள் (வேரியன்ட் A மற்றும் C)

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP)

  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட்

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டே மற்றும் நைட் அட்ஜஸ்ட்டபிள் IRVM

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • டிஃபோக்கருடன் கூடிய பின்புற வைப்பர் & வாஷர்

Zxi வேரியன்ட் மிகவும் சிறப்பான வசதிகளுடன் வருகிறது. மற்றும் சில வசதிகளை மட்டும் இதில் கிடைக்காது. டாப்-ஸ்பெக் Zxi பிளஸ், சில வெளிப்புற மற்றும் கேபின் மேம்படுத்தல்கள் தவிர, பெரிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எங்களின் பரிந்துரைக்கப்பட்ட வேரியன்ட்டின் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளை வழங்குகிறது.

தீர்ப்பு

Maruti Swift Rear

புதிய தலைமுறை ஸ்விஃப்ட்டின் Zxi வேரியன்ட் ஆனது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான சிறந்த வேரியன்ட் ஆகும். ஏனெனில் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் சில வசதிகளை தவிர உங்கள் ஹேட்ச்பேக்கிற்கு தேவையான அனைத்தையும் இது வழங்குகிறது. வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற சில வசதிகளையும் இது கொண்டுள்ளது, மேலும் இதிலுள்ள பாதுகாப்பு வசதிகளும் நன்றாகவே உள்ளன. இது AMT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: 2024 யூரோ NCAP கிராஷ் டெஸ்ட்களில் Maruti Suzuki 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது

டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் கூடுதல் வசதிகளை நீங்கள் விரும்பினால் மட்டுமே கூடுதல் பணத்தைச் செலவழிப்பதை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் Zxi வேரியன்ட் உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

வாகனத் துறையின் சமீபத்திய அப்டேட்களை முதல் நபராக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கார்தேக்கோவின் வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti ஸ்விப்ட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • க்யா clavis
    க்யா clavis
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience