ஆன்லைனில் வலம் வரும் மாருதி ஜிம்னியின் ரியல் வேர்ல்டு பூட் ஸ்பேஸ் படங்கள் மஹிந்திரா தாரை விட இது கூடுதல் இடம் கொண்டது
ஐந்து-கதவு ஜிம்னியின் பூட் ஸ்பேஸ் கொள்ளளவு இரண்டாவது வரிசையை மடக்கி வைக்கும் நிலையில் 332 லிட்டர்கள் வரை இருக்கும்.
-
ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி காட்சிக்கு வைத்தது.
-
மூன்று-கதவு மாடலுடன் ஒப்பிடும்போது இது நீண்ட வீல்பேஸ் மற்றும் இரண்டு கூடுதல் கதவுகளைப் பெறுகிறது.
-
ஜிம்னியின் பூட் சில லக்கேஜ் பைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்பதை புதிய படங்கள் காட்டுகின்றன.
-
மஹிந்திரா தார் (200 லிட்டருக்கும் குறைவானது) விட ஜிம்னி அதிக பூட் ஸ்பேஸை வழங்குகிறது.
-
அதன் மூன்று-கதவு எடிஷன் இரண்டாவது வரிசையை மடக்கும்போது அதிக இடத்தை வழங்குகிறது.
-
இந்தியா-ஸ்பெக் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது; 4X4 ஸ்டாண்டர்டாக வர உள்ளது.
-
ஆரம்ப விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எங்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்த பிறகு, மாருதி இறுதியாக சுஸுகியின் ஐகானிக் ஆஃப்ரோடரான ஜிம்னியை இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்து ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அதனை காட்சிப்படுத்தியுள்ளது. நமது சந்தைக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்ற, கார் தயாரிப்பாளர் எஸ்யூவி யின் நடைமுறைத்தன்மையை மேம்படுத்த அதன் வீல்பேஸை விரிவுபடுத்தியுள்ளது, அதே நேரத்தில் அதற்கு இரண்டு கூடுதல் கதவுகளையும் கொடுத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் கவனிக்கும் மற்றொரு முக்கியமான அம்சம், ஒரு காரின் பூட் எவ்வளவு சேமிப்பு திறனை வழங்குகிறது என்பதுதான். நீங்கள் ஜிம்னியைத் தேடுகிறீர்களானால், அதன் பூட்ஸ்பேஸ் பற்றிய சில புதிய புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன, எனவே அவற்றைப் பார்க்கவும்.
உரிமை கோரப்பட்ட புள்ளவிவரங்கள் Vs உண்மையான நிலவரம்
ஜிம்னி இரண்டாவது வரிசை மேலே உள்ள நிலையில் 208 லிட்டர்கள் பூட் ஸ்பேஸைப் பெறுகிறது என மாருதி கூறுகிறது. இரண்டாவது வரிசையை கீழே மடக்கினால், அது 332 லிட்டர் வரை கூடுதலாகக் கிடைக்கும். காகிதத்தில் உள்ள இந்த புள்ளவிவரம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், நிஜ உலகத்திற்கு வரும்போது, புதிய படங்கள் சில லக்கேஜ் பைகளை மட்டுமே சிறந்த முறையில் எடுத்துச் செல்ல முடியும் என்பதைக் காட்டுகின்றன. சிறந்த ஏற்பாட்டில் கூட, அதிகபட்சமாக மூன்று லக்கேஜ் பைகளை அடுக்கி வைப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.
மேலும் படிக்க: 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மாருதியின் '800' பெயர்ப் பலகை, ஆல்டோ 800 உடன் அதிகாரப்பூர்வமாக கிடைக்கப் போவது இல்லை
ஜிம்னி vs தார்: எது அதிக இடத்தை வழங்குகிறது?
ஜிம்னியின் நெருங்கிய போட்டியாளரான -மஹிந்திரா தார்- உடன் ஒப்பிடும் போது, மாருதி ஆஃப்ரோடரின் பூட் ஸ்பேஸ் பார்வைக்கு அதிகமாக உள்ளது. மஹிந்திரா, தார் முழுமையாக லக்கேஜ் திறனை வெளிப்படுத்தவில்லை என்றாலும் (200 லிட்டருக்கும் குறைவாக இருக்கலாம்), எங்களின் இடம் மற்றும் நடைமுறை சோதனையில் இது ஒரு பெரிய அளவிலான பயணப் பைக்கு கூட பொருந்தாது என்பதை வெளிப்படுத்தியது. சமீபத்திய ஆன்லைன் படங்களில் காணப்படுவது போல், ஜிம்னியில் இது சாத்தியமாகும் என்பது தெரிகிறது. இரண்டு எஸ்யூவிக்களும் 50:50 பிரித்து-மடிக்கும் பின்புற இருக்கைகளைப் பெறுகின்றன, ஆனால் முழுமையாகத் தட்டையாக மடிக்க இயலாது, பயன்படுத்தக்கூடிய லக்கேஜ் வைக்கும் பகுதியைத் தடுக்கிறது.
இன்ஜின் மற்றும் டிரைவ்டிரெய்ன்
இந்தியா-ஸ்பெக் ஜிம்னியில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (103PS/134Nm) வழங்கப்படுகிறது. இந்த பிரிவு ஐந்து வேக மேனுவல் உடனோ அல்லது நான்கு வேக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனோ இணைக்கப்பட்டுள்ளது நான்கு சக்கர டிரைவ் டிரெய்ன் (4WD) ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.
வெளியீடு மற்றும் விலை விவரங்கள்
மே மாதம் ஜிம்னியை மாருதி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் . அறிமுகம் செய்யப்பட்டவுடனே அது மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்க்கா ஆகியவற்றுக்கு நேரடிப் போட்டியாக இருக்கும் .
மேலும் படிக்கவும்: தார் டீசல்