Maruti Ignis ரேடியன்ஸ் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, ஆரம்ப விலை ரூ.5.49 லட்சமாக நிர்ணயம்.
published on ஜூலை 25, 2024 04:00 pm by rohit for மாருதி இக்னிஸ்
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய ரேடியன்ஸ் பதிப்பின் அறிமுகத்தால் மாருதி இக்னிஸின் ஆரம்ப விலை ரூ.35,000 வரை குறைந்துள்ளது.
-
இக்னிஸ் கார் 2017 -ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது. 2020 ஆண்டில் ஒரு பெரிய அப்டேட்டை பெற்றது.
-
இந்த ஹேட்ச்பேக் 2.8 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
-
புதிய பதிப்பு மிட்-ஸ்பெக் டெல்டாவை தவிர அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது.
-
புதிய ஆக்ஸசரி பொருட்களில் வீல் கவர்கள், டோர் வைசர்கள் மற்றும் டோர் கிளாடிங் ஆகியவை அடங்கும்.
-
மாருதி இக்னிஸை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
-
இக்னிஸ் காரின் விலை இப்போது ரூ. 5.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இக்னிஸ் ஹேட்ச்பேக்கின் விற்பனையை 2.8 லட்சம் யூனிட் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. மாருதி இக்னிஸ் இப்போது ரேடியன்ஸ் எடிஷன் என்ற புதிய சிறப்புப் பதிப்பைப் பெற்றுள்ளது. இது ஹேட்ச்பேக்கின் மிட்-ஸ்பெக் டெல்டாவை தவிர அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸா அர்பன் எடிஷன் போல இதுவும் ஒரு ஆக்ஸசரி எடிஷன் ஆகும்.
இக்னிஸ் ரேடியன்ஸ் பதிப்பு: இதில் என்ன கிடைக்கும்?
ரேடியன்ஸ் பதிப்பின் மூலம் இக்னிஸின் ஆரம்ப விலை ரூ.5.84 லட்சத்தில் இருந்து ரூ.5.49 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது ரூ.35,000 விலை குறைந்துள்ளது. பேஸ்-ஸ்பெக் சிக்மா ரேடியன்ஸ் எடிஷன் ஆல் வீல் கவர்கள், டோர் வைசர்கள் மற்றும் பாடி சைட் மோல்டிங் (குரோமில்) ஆகியவற்றுடன் வருகிறது. இதன் விலை ரூ.3,650 ஆகும். நீங்கள் தனித்தனியாக தேர்வு செய்தால் இந்த ஆக்ஸசரீஸ்களின் விலை 5,320 ரூபாய் ஆக இருக்கும்.
ரேடியன்ஸ் எடிஷனுடன் கூடிய ஹையர்-ஸ்பெக் ஜெட்டா அல்லது ஆல்ஃபா வேரியன்ட்டை நீங்கள் விரும்பினால் மாருதி அவர்களுக்கு இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர் ஆகியவற்றை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இதற்கு ரூ.9,500 செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆக்ஸசரீஸ்கள் அனைத்தும் தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் விலை ரூ.11,9710 ஆக இருக்கும்.
மேலும் படிக்க: பட்ஜெட் 2024: இறக்குமதி வரி விலக்கால் லித்தியம்-அயன், EV விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
இக்னிஸ் பற்றிய கூடுதல் தகவல்கள்
2015 எஸ்-கிராஸ் மற்றும் பலேனோவை தொடர்ந்து மாருதியின் பிரீமியம் நெக்ஸா ஷோரூம்களில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சில தயாரிப்புகளில் இக்னிஸ் ஒன்றாகும். இது 2020 ஆண்டில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை பெற்றது. மற்றும் இப்போது சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா என 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
பவர்டிரெய்ன்கள்
5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனுடன், இக்னிஸ் -க்கு ஒரே ஒரு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை (83 PS/113 Nm) மாருதி வழங்கியுள்ளது. மேனுவல் மற்றும் AMT எடிஷன்கள் இரண்டிற்கும் 20.89 கிமீ/லி மைலேஜ் கிடைக்கும் என மாருதி கூறுகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, உயரத்தை சரி செய்யது கொள்ளக்கூடிய டிரைவர் இருக்கை, கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றுடன் வருகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை மாருதி இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள், ஒரு ரிவர்ஸிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESP) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: மாருதி நிறுவனம் விரைவில் ADAS வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது, முதலில் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் கொடுக்கப்படலாம்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இக்னிஸ் காரின் விலை இப்போது ரூ.5.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது. இது டாடா டியாகோ உடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி வேகன் R மற்றும் மாருதி செலிரியோ, டாடா பன்ச் , ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மைக்ரோ எஸ்யூவி -களுக்கு மாற்றாகவும் இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: மாருதி இக்னிஸ் AMT