• English
    • Login / Register

    மாருதி நிறுவனம் விரைவில் ADAS வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது, முதலில் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் கொடுக்கப்படலாம்

    மாருதி இ விட்டாரா க்காக ஜூலை 18, 2024 04:47 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 101 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்தியாவில் தற்போதுவரை மாருதியின் கார்களில் ADAS வசதி கொடுக்கப்படவில்லை. இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மாருதி சிறப்பாக மாற்றியமைக்கும்.

    Maruti eVX

    அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) என்பது ஒரு கூடுதலான பாதுகாப்பு தொழில்நுட்பமாகும். இது கேமரா மற்றும்/அல்லது ரேடார் சென்சார்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டுவதற்கும் மோதல்களைத் தடுப்பதற்கும் உதவுகிறது. ஆரம்பத்தில் சொகுசு கார்களுக்கு பிரத்தியேகமாக கிடைத்து வந்த ADAS வசதி. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் மஹிந்திரா XUV700, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மற்றும் டாடா ஹாரியர் போன்ற சாமான்யர்கள் வாங்கும் கார்களில் கிடைக்கிறது. இது கடந்த 3-4 ஆண்டுகளில் இந்திய கார்களின் பாதுகாப்பை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்பட்டுள்ளதை பிரதிபலிக்கிறது. 

    இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனம் ஆனது ரூ. 30 லட்சம் வரை விலையில் பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்கும் சில கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் இதுவரை மாருதி அதன் கார்களில் ADAS வசதியை கொடுக்கவில்லை. சமீபத்திய கூட்டத்தில் வாகன உற்பத்தியாளர் தனது கார்களில் ADAS வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியிருந்தது. இது குறிப்பாக இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

    தாமதத்துக்கான காரணம் என்ன?

    2024 Maruti Suzuki Swift ADAS Features

    ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை செய்யும் கார்களுடன் இந்த மேம்பட்ட பாதுகாப்பு வசதியை சுஸூகி ஏற்கனவே கொடுத்து வருகிறது. ஆனால் இந்தியாவில் அதன் கார்களில் அதை அறிமுக செய்யவில்லை. காரணம் இந்தியாவில் ADAS வசதியை செயல்படுத்த அதன் உகந்த செயல்பாட்டிற்கு விரிவான பயிற்சி தேவைப்படுகிறது. மோட்டார் சைக்கிள்கள், 3 வீலர்ஸ் போன்ற வாகனங்கள் மற்றும் வெளிச்சம் இல்லாத வாகனங்கள், கார்கள், டிராக்டர்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் போன்ற பல்வேறு வாகனங்களை இந்த அமைப்பு துல்லியமாக கண்டறிய வேண்டும். மேலும் இந்தியாவின் தூசி மற்றும் மாசு நிறைந்த சூழல், பனி மற்றும் புகை போன்ற சில வட மாநிலங்களில் பல்வேறு பருவகால சவால்களுக்கு ஏற்ப இதை மாற்றியமைக்க வேண்டிருக்கும். இவை அனைத்தும் கேமராக்கள் மற்றும் ரேடார் போன்ற முக்கியமான ADAS பாகங்களுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை கொடுக்கின்றன. 

    சவால்களில் குறிக்கப்படாத பாதைகள் மற்றும் சீரற்ற சாலை ஆகியவையும் இரு காரணமாக இருக்கும். இந்தியாவிற்கு ஏற்றவாறு குர்தாக்கள், புடவைகள் மற்றும் வேட்டிகள் போன்ற பலவகையான ஆடைகளை அணிந்த நபர்களையும் இந்த ADAS வசதியால் கண்டறிய முடியும்.

    Maruti Grand Vitara Review

    சவால்கள் காரணமாக இந்தியாவின் நெரிசலான தெருக்களிலும் நன்றாக வேலை செய்யக்கூடிய இந்த மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளில் வேலை செய்து வருவதாக மாருதி தெரிவித்துள்ளது. 2024 ஆண்டு ஸ்விஃப்ட்டின் சோதனைக் கார் மாருதி விரைவில் ADAS வசதியை அறிமுகப்படுத்தலாம் என்ற தகவல் வெளியானது, இது பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் செட்டப் உடன் காணப்பட்டது. ஆகவே இந்த அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வசதியை மாருதி அதன் ஃபிளாக்ஷிப் கார்களுக்கு மட்டுமில்லாமல் விலை குறைவான மாடல்களுக்கும் கொடுக்கும் என்பதை காட்டுகிறது. மேலும்  எதிர்காலத்தில் மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் மாருதி இன்விக்டோ ஆகிய கார்களுக்கும் இந்த பாதுகாப்பு வசதியை மாருதி வழங்கலாம்

    ADAS வசதியை பெறும் முதல் மாருதியாக eVX இருக்க வாய்ப்புள்ளது

    மாருதி எந்தெந்த கார்களுக்கு ADAS கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும்,  eVX எலக்ட்ரிக் எஸ்யூவி இந்த வசதியை பெறும் முதல் மாருதி காராக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். eVX -ன் சோதனைக் கார் ஏற்கனவே ஒரு ரேடார் தொகுதியுடன் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

    was this article helpful ?

    Write your Comment on Maruti இ விட்டாரா

    explore மேலும் on மாருதி இ விட்டாரா

    space Image

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience