ஜனவரி 2024 மாத விற்பனையில் Hyundai Creta மற்றும் Kia Seltos கார்களை முந்தியது Maruti Grand Vitara
மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய இரண்டு எஸ்யூவி -கள் மட்டுமே 10,000 யூனிட்களை தாண்டி விற்பனையாகியுள்ளன.
ஜனவரி மாதத்தில் இந்தியாவில் 46,000 -க்கும் மேற்பட்ட காம்பாக்ட் எஸ்யூவி -கள் விற்பனையாகியுள்ளன, இந்த பிரிவு மாதந்தோறும் (MoM) 12 சதவீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மாருதி கிராண்ட் விட்டாரா அதன் செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவி -யாக மாறியுள்ளது, ஹூண்டாய் கிரெட்டா அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த மாதம் ஒவ்வொரு காம்பாக்ட் எஸ்யூவி -யின் விற்பனை விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
காம்பாக்ட் எஸ்யூவி -கள் கிராஸ்ஓவர்கள் |
|||||||
ஜனவரி 2024 |
டிசம்பர் 2023 |
MoM வளர்ச்சி |
தற்போதைய சந்தை பங்கு (%) |
சந்தை பங்கு (கடந்த ஆண்டு%) |
YoY சந்தை பங்கு (%) |
சராசரி விற்பனை (6 மாதங்கள்) |
|
மாருதி கிராண்ட் விட்டாரா |
13438 |
6988 |
92.3 |
28.76 |
23.94 |
4.82 |
9732 |
ஹூண்டாய் கிரெட்டா |
13212 |
9243 |
42.94 |
28.27 |
41.55 |
-13.28 |
12458 |
கியா செல்டோஸ் |
6391 |
9957 |
-35.81 |
13.67 |
28.93 |
-15.26 |
10833 |
டொயோட்டா ஹைரைடர் |
5543 |
4976 |
11.39 |
11.86 |
11.59 |
0.27 |
3880 |
ஹோண்டா எலிவேட் |
4586 |
4376 |
4.79 |
9.81 |
0 |
9.81 |
3766 |
ஃபோக்ஸ்வேகன் டைகுன் |
1275 |
2456 |
-48.08 |
2.72 |
4.02 |
-1.3 |
1981 |
ஸ்கோடா குஷாக் |
1082 |
2485 |
-56.45 |
2.31 |
5.56 |
-3.25 |
2317 |
எம்ஜி ஆஸ்டர் |
966 |
821 |
17.66 |
2.06 |
2.64 |
-0.58 |
868 |
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் |
231 |
339 |
-31.85 |
0.49 |
0 |
0.49 |
98 |
மொத்தம் |
46724 |
41641 |
12.2 |
99.95 |
முக்கியமான விவரங்கள்
-
மாருதி கிராண்ட் விட்டாரா ஜனவரி 2024 இல் 13,400 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி -யாக மாறியது. கிராண்ட் விட்டாரா 92 சதவிகிதம் கூடுதலான MoM வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த பிரிவில் அதிகமாக சந்தைப் பங்கை கொண்டுள்ள காராகவும் உள்ளது.
-
கிராண்ட் விட்டாராவுக்கு அடுத்ததாக 10,000 யூனிட்களை கடந்த ஒரே எஸ்யூவி -யாக ஹூண்டாய் கிரெட்டா உள்ளது, ஜனவரியில் மொத்தம் 13,212 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. மாதாந்திர விற்பனையில் கிட்டத்தட்ட 43 சதவிகிதம் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், கிரெட்டா -வின் ஆண்டுக்கு ஆண்டு சந்தைப் பங்கு 13 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
-
ஜனவரி 2024 -ல் கியா செல்டோஸ் விற்பனை குறைந்துள்ளது, 6,400 பேர் மட்டுமே இதை வாங்கியுள்ளனர், இது டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும் போது 3,500 யூனிட்கள் குறைவானது. உண்மையில், அதன் ஜனவரி 2024 விற்பனை கடந்த ஆறு மாதங்களின் சராசரி விற்பனையை விட தோராயமாக 4,500 யூனிட்கள் குறைவாக இருந்தது.
-
மாருதி கிராண்ட் விட்டாராவின் உடன்பிறப்பான, டொயோட்டா ஹைரைடர் 5,543 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி விற்பனை அட்டவணையில் நான்காவது இடத்தைப் பிடித்தது. டொயோட்டா எஸ்யூவி 11 சதவீதத்திற்கும் மேலான நேர்மறையான MoM வளர்ச்சியைப் பதிவு செய்தது.
மேலும் பார்க்க: Maruti Ertiga மற்றும் Toyota Rumion மற்றும் Maruti XL6: பிப்ரவரி 2024 மாத காத்திருப்பு கால விவரங்கள் ஒப்பீடு
-
4,500 -க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி ஹோண்டா எலிவேட் ஜனவரி 2024 விற்பனையில் 4.5 சதவீதத்திற்கும் அதிகமான MoM வளர்ச்சியைப் பதிவு செய்தது. எலிவேட் செப்டம்பர் 2023 -ல் ஹோண்டாவின் புதிய காராக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தற்போதைய சந்தைப் பங்கு 9.8 சதவீதமாக உள்ளது.
-
ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் இரண்டும் ஜனவரி 2024 விற்பனையில் முறையே 48 சதவீதம் மற்றும் சுமார் 56 சதவீதம் MoM இழப்புகளை சந்தித்தன. கடந்த மாதம் 2,300 -க்கும் மேற்பட்ட டைகுன் மற்றும் குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
-
மாதாந்திர விற்பனையில் கிட்டத்தட்ட 18 சதவிகிதம் சிறிய வளர்ச்சியை கொண்டிருந்தாலும், எம்ஜி ஆஸ்டர் இன்னும் விற்பனை 1,000 யூனிட்களை எட்டவில்லை.
-
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஜனவரி 2024 -ல் இந்த பிரிவில் மிகக் குறைந்த விற்பனையான மாடலாக உள்ளது, மொத்த விற்பனை 231 யூனிட்களாக உள்ளது.
மேலும் படிக்க: மாருதி கிராண்ட் விட்டாரா ஆன் ரோடு விலை