• English
  • Login / Register

அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.

published on ஜூலை 30, 2024 07:12 pm by samarth for மாருதி கிராண்டு விட்டாரா

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிராண்ட் விட்டாரா சுமார் 1 வருடத்தில் 1 லட்சம் யூனிட்களை விற்பனையானது. அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் வரை விற்பனையானது.

Maruti Grand Vitara Crosses 2 Lakh Sales Milestone

  • மாருதி கிராண்ட் விட்டாரா கார் கடந்த 2022 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி பவர் ட்ரெய்ன்கள் அதிக தேவை இருப்பதால் அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

  • இது 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

  • இது பலவிதமான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள், மைல்டு-ஹைபிரிட் உடன் கூடிய 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், ஸ்ட்ராங் ஹைபிரிட் உடன் கூடிய 1.5-லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் CNG ஆப்ஷன் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • இதன் விலைரூ.10.99 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.

இந்தியாவில் மாருதியின் முதல் ஸ்ட்ராங்-ஹைபிரிட் மாடலாக மாருதி கிராண்ட் விட்டாரா 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது விற்பனையில் 2-லட்சம் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. குறிப்பிட்டு சொல்லும்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் அதை எட்டியுள்ளது. மாருதி ஒரு வருடத்தில் 1 லட்சம் காம்பாக்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்தது.  மற்றும் 10 மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் விற்பனை செய்துள்ளது. மாருதியை பொறுத்தவரையில்  ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்கள் கிராண்ட் விட்டாராவை வாங்குபவர்களிடையே மிகவும் அதிகமாக விரும்பப்படும் தேர்வுகளாகும். 

மாருதி எஸ்யூவியை பற்றிய ஒரு பார்வை

Maruti Grand Vitara Review

மாருதி கிராண்ட் விட்டாராவை டொயோட்டாவுடனான தனது கூட்டாண்மையின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது. மேலும் இது மாருதியின் நெக்ஸா சீரிஸில் விற்பனை செய்யப்பட்டு வந்த பழைய S -கிராஸ் காரை மாற்றியது. சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஜெட்டா பிளஸ், ஆல்பா மற்றும் ஆல்பா பிளஸ் ஆகிய 6 வேரியன்ட்களில் கிராண்ட் விட்டாரா இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Maruti Grand Vitara Review

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் மாருதியின் காம்பாக்ட் எஸ்யூவி வழங்கப்படுகிறது. . 

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: Maruti Suzuki Grand Vitara -வின் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன; அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

பவர்டிரெயின்கள்

கிராண்ட் விட்டாரா பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் யூனிட் 103 PS மற்றும் 136.8 Nm 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் மேனுவல் வேரியன்டில், இது ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனையும் பெறுகிறது. மற்றொரு ஆப்ஷன் 1.5-லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் யூனிட் 115.56 PS (இன்டெகிரேட்டட்) மற்றும் 122 Nm அவுட்புட்டை கொடுக்கும் செய்யும் மற்றும் e-CVT கியர் பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். 

கிராண்ட் விட்டாரா ஒரு சிஎன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் மட்டுமே வருகிறது, இது 87.83 PS மற்றும் 121.5 Nm 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் போட்டியாளர்கள் 

Maruti Grand Vitara Review

மாருதி கிராண்ட் விட்டாராவின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது. இது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்க்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மாருதி கிராண்ட் விட்டாரா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti கிராண்டு விட்டாரா

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience