சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Maruti Fronx: 22,000 யூனிட்களுக்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன

மாருதி fronx க்காக ஆகஸ்ட் 03, 2023 05:07 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மாருதி ஃபிரான்க்ஸின் நிலுவையில் உள்ள 22,000 ஆர்டர்கள் சுமார் ஒட்டுமொத்தமாக டெலிவரி செய்யப்பட வேண்டிய 3.55 லட்சம் யூனிட்டுகளின் ஒரு பகுதியாகும்.

  • பலேனோ அடிப்படையிலான ஃபிரான்க்ஸ் காரை 2023 ஏப்ரலில் மாருதி அறிமுகப்படுத்தியது.

  • கார் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 9,000 ஃபிரான்க்ஸை உற்பத்தி செய்கிறது.

  • ஃபிரான்க்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை பெறுகிறது; CNG யும் உள்ளது.

  • 9 இன்ச் டச் ஸ்கிரீன், அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளது.

  • இதன் விலை ரூ.7.46 லட்சம் முதல் ரூ.13.14 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023 ஏப்ரலில், மாருதி ஃபிரான்க்ஸ் வடிவில் ஒரு புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவி நமது மார்க்கெட்டில் அறிமுகமானது. இது மாருதி பலேனோ அடிப்படையிலான ஸ்டைல் என்றாலும், அதன் தோற்றம் கிராண்ட் விட்டாராவிலிருந்து பெறப்பட்டுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனம், அதன் சமீபத்திய காலாண்டு முடிவுகள் அறிவிப்பு கூட்டத்தில், சப்-4 எம் க்ராஸ்ஓவரின் சராசரி உற்பத்தி எண்ணிக்கை மற்றும் நிலுவையில் உள்ள ஆர்டர்கள் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது, அதே நேரத்தில் அதன் ஒட்டுமொத்த ஆர்டர் பின்னடைவு பற்றிய கருத்தையும் நமக்கு தெரிவித்தது.

ஃபிரான்க்ஸ் மற்றும் நிலுவையில் உள்ள ஆர்டர்களின் விவரங்கள்

மாருதி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 9,000 ஃபிரான்க்ஸ் கார்களை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் அதன் ஏற்றுமதி சமீபத்தில் தான் தொடங்கியது. ஃபிரான்க்ஸின் சுமார் 22,000 யூனிட்கள் இன்னும் டெலிவரி செய்யப்பட வேண்டியுள்ளது என்று கார் தயாரிப்புநிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 3.55 லட்சம் ஆர்டர்கள் ஒட்டுமொத்தமாக நிலுவையில் இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

மாருதி ஃபிரான்க்ஸ்: சுருக்கமான விவரம்

மாருதி ஃபிரான்க்ஸ் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் கிடைக்கிறது: 90PS மற்றும் 113Nm உருவாக்கும் 1.2 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் யூனிட், மற்றொன்று மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (100PS/148Nm)). முந்தைய மாடலில் 5 ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களும், 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT ஆப்ஷன்களும் கிடைக்கும்.

மாருதி ஃப்ராங்க்ஸில்1.2 லிட்டர் யூனிட்டில் ஆப்ஷனலாக CNG கிட்டை வழங்குகிறது, இதில் இது மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்படும்போது 77.5PS மற்றும் 98.5Nm ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கொண்ட 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, அதிகபட்சமாக ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் இந்த கிராஸ்ஓவர் எஸ்யூவி -யில் உள்ளன.

மேலும் படிக்கவும்: "டொயோட்டா ஃபிரான்க்ஸ்" 2024 ல் புத்தம் புதிதாக வெளிவரக்கூடும்!

விலை மற்றும் போட்டியாளர்கள்

மாருதி ஃபிரான்க்ஸ் கார்களின் விலை ரூ. 7.46 லட்சம் முதல் ரூ.13.14 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும், சிட்ரோன் C3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுடன் ஃபிரான்க்ஸ் போட்டியிடுகிறது. ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற சப்-4எம் SUV-களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் காணவும்: உற்பத்திக்கு தயாராகவுள்ள டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் ஹெட்லைட்கள் விவரம் வெளியானது

மேலும் படிக்கவும்: ஃபிரான்க்ஸ் AMT

Share via

Write your Comment on Maruti fronx

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.42 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை