Maruti Ertiga-அடிப்படையிலான டொயோட்டா ரூமியான் MPV இந்தியாவில் அறிமுகமானது; பண்டிகை காலத்தில் வெளியாகிறது.
டொயோட்டா ரூமியன் க்காக ஆகஸ்ட் 11, 2023 05:45 pm அன்று tarun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
சற்று வித்தியாசமான ஸ்டைலிங் மற்றும் சிறந்த நிலையான உத்தரவாதத்துடன் கூடிய இது அடிப்படையில் மாருதி எர்டிகா கார் ஆகும்.
-
பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா ரூமியான் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது அதன் விலை விவரங்களும் வெளிவந்துள்ளன.
-
எர்டிகாவுடன் ஒப்பிடும்போது, புதிய முன்பக்க தோற்றம் மற்றும் வித்தியாசமான 15 இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது.
-
டூயல் டோன் தீம் கொண்ட எர்டிகா காரின் உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை.
-
7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், நான்கு ஏர்பேக்குகள், ESP, மற்றும் பின்புற கேமரா ஆகியவற்றைக் வழங்குகிறது.
-
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் தொடரும்; CNG -ஆப்ஷனும் உள்ளது.
-
ரூ.8.64 லட்சம் முதல் ரூ.13.08 லட்சம் வரையிலான விலையில் எர்டிகா காரின் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ரூமியான் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பண்டிகை காலத்தில் இது வெளியாகலாம். பலேனோ-கிளான்ஸா, முந்தைய தலைமுறை பிரெஸ்ஸா / அர்பன் க்ரூஸர், கிராண்ட் விட்டாரா-ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ்-இன்விக்டோ ஆகியவற்றுக்குப் பிறகு மாருதி-டொயோட்டா கூட்டணியில் வெளியாகும் நான்காவது கார் இதுவாகும். இதற்கான முன்பதிவு விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேரியன்ட் விவரம்
வேரியன்ட்கள் |
|
AT |
CNG |
S |
☑️ |
☑️ |
☑️ |
G |
☑️ |
- |
- |
V |
☑️ |
☑️ |
- |
ரூமியான் S, G, மற்றும் V ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியன்ட்டை ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் தேர்வு செய்யலாம், அதே நேரத்தில் மிட்-ஸ்பெக் வேரியன்ட்டில் இந்த வசதி கிடைக்காது. CNG ஆப்ஷன் கூட என்ட்ரி-லெவல் S வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். மறுபுறம், மேனுவல் லைன்அப் முழுவதும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.
இன்னோவா-விலிருந்து பெறப்பட்ட முன்பக்க தோற்றம்
டொயோட்டா ரூமியான், அடிப்பகுதியில் எர்டிகாவாக இருந்தாலும், பெரும்பாலான மாருதி-டொயோட்டா கார்களில் காணப்படுவது போல, பழைய கார்களை விட சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இன்னோவா ஹைகிராஸால் ஈர்க்கப்பட்ட கிரில் என்பதால், முன்பக்க தோற்றம் புதியதாக உள்ளது. பம்பர், ஃபாக் லைட் ஹவுசிங் மற்றும் லோயர் ஏர்டேம் ஆகியவை மாருதி மாடலை விட வித்தியாசமாக இருக்கின்றன.
புதிய 15-இன்ச் அலாய் வீல்கள் தவிர, பக்கவாட்டு தோற்றம் அப்படியே இருக்கிறது. பின்புற தோற்றம் பேட்ஜிங்கில் மட்டும் குறைந்தபட்ச மாற்றத்தைப் பெறுகிறது.
இது ஸ்பான்கி ப்ளூ, ரஸ்டிக் பிரவுன், ஐகானிக் கிரே, கஃபே ஒயிட் மற்றும் என்டிசிங் சில்வர் ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
குறைவான இன்டீரியர் அப்டேட்கள்
ரூமியனின் கேபின் எர்டிகாவில் உள்ளதைப் போல இருக்கிறது, இது டாஷ்போர்டில் தேக்கு மர பயன்பாட்டுடன் டூயல் டோன் தீமில் மூடப்பட்டுள்ளது. இந்த இருக்கைகள் எர்டிகாவின் சிங்கிள்-டோன் பழுப்பு நிற இருக்கைகளை போலல்லாமல், டூயல்-டோன் ஃபேப்ரிக் ஷேடில் மூடப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீலில் உள்ள டொயோட்டா பேட்ஜிங் மட்டுமே மற்றொரு வித்தியாசம்.
சராசரியான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன
அம்சங்கள் பட்டியல் எர்டிகாவின் நேரடி நகல் ஆகும். டொயோட்டா ரூமியான் காரில் ஹாலோஜன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்புகள், இன்ஜின் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் AC, கூரையில் பொருத்தப்பட்ட ACவென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ / ஆப்பிள் கார் பிளே ஆகியவை உள்ளன.
Safety is covered by the presence of up to four airbags, ESP, hill hold assist, ISOFIX child seat mounts, and a rear parking camera with sensors.
நான்கு ஏர்பேக்குகள், ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் சென்சார்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பாதுகாப்புடன் உள்ளன.
இரண்டு பவர்டிரெயின்கள் கிடைக்கும்
|
|
|
|
103PS |
88PS |
டார்க் |
136.8Nm |
121.5Nm |
|
|
|
|
20.51kmpl |
26.11km/kg |
ரூமியான் கார் எர்டிகாவின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் கார் வேரியன்ட்கள் பேடில் ஷிஃப்டர் போன்ற கூடுதல் வசதியை பெறுகின்றன. CNG ஆப்ஷனும் கிடைக்கும், இது 26.11 கிமீ / கிலோ மைலேஜை கொடுக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா ரூமியான் காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் (எது முந்தையதோ) கொண்ட நிலையான உத்தரவாதத்தை வழங்குகிறது. மாருதி எர்டிகா காருக்கு இணையான விலையில் ரூ.8.64 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை எனினும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, கியா கேரன்ஸ் மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு மாற்றாக இந்த கார் இருக்கும்.
மேலும் படிக்கவும்: எர்டிகா ஆன் ரோடு விலை