Maruti Alto: 45 லட்சத்தை தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது
published on ஆகஸ்ட் 04, 2023 05:31 pm by rohit for மாருதி ஆல்டோ கே10
- 58 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருக்கும் "ஆல்டோ" பெயர்ப்பலகை மூன்று தலைமுறைகளாக மாற்றத்தை சந்திருக்கிறது.
இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கும் கார் பெயர் பலகைகளை நினைக்கும் போது, மாருதி ஆல்ட்டோ தான் பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும். இரண்டு தசாப்தங்களாக அதன் மொத்த விற்பனையில் 45 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. நமது நாட்டில் அதன் சாதனை பயணத்தை நாம் இங்கே விரைவாக பார்க்கலாம்.
இந்தியாவில் "ஆல்ட்டோ" பெயர் பலகையின் சுருக்கமான வரலாறு
மாருதி 2000 ஆம் ஆண்டு இந்தியாவில் "ஆல்டோ" என்ற பெயர்ப் பலகையை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளில், மாருதி ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தைத் பிடித்தது. 2010 ஆம் ஆண்டில் "Alto K10" மோனிகர் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இது ஒரு பெரிய 1-லிட்டர் இன்ஜின் ஆப்ஷனை பெற்றது, அதே நேரத்தில் ஹேட்ச்பேக்கின் CNG வேரியன்ட்களையும் மாருதி அறிமுகப்படுத்தியது.
2012 ஆம் ஆண்டில், மாருதி ஒரு புதிய தலைமுறை ஆல்டோவுடன் வெளிவந்தது, அதன்பின் என்ட்ரி லெவல் மாடலுக்கான "800" சேர்க்கையை பெற்றது. ஏறக்குறைய அதே நேரத்தில்தான் மாருதி இந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கிற்கு 20 லட்சம் யூனிட் விற்பனையைப் பதிவு செய்தது. ஆல்டோ 800 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாருதி இரண்டாம் தலைமுறை ஆல்டோ K10 ஐ 2014 -ல் அறிமுகப்படுத்தியது, அந்த சமயத்தில் ஆல்டோ பெயர்ப்பலகை இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை நிறைவு செய்திருந்தது மற்றும் 2020 இல் 10 லட்சம் யூனிட் என்ற விற்பனை எண்ணிக்கையை கடந்தது.
இந்த சாதனை குறித்து மாருதியின் கருத்துகள்
மாருதி சுஸூகியின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “கடந்த 2 தசாப்தங்களாக, ஆல்டோ பிராண்ட் எங்கள் வாடிக்கையாளர்களுடன் வலுவான உணர்ச்சிபூர்வமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்டோவின் அபாரமான பயணத்தில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 45 லட்சம் வாடிக்கையாளர்களின் மைல்கல்லை எட்டியது, எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத ஆதரவிற்கும் நம்பிக்கைக்கும் சாட்சி. இதுவரை எந்த ஒரு கார் பிராண்டாலும் சாதிக்க முடியாத ஒரு மைல்கல் இது” என்றார்.
இதையும் படியுங்கள்: Maruti Fronx: 22,000 யூனிட்களுக்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன
இப்போதும் நீங்கள் ஆல்டோவை வாங்கலாம்
மூன்றாம் தலைமுறை ஆல்டோ K10 பின்னர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் BS6. 2 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறும்போது ஆல்டோ 800 நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இப்போது விற்பனையில் இருக்கும் ஒரே ஆல்டோவாக அந்த மாடல் இருக்கிறது. தற்போதைய ஆல்டோ ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன், நான்கு பவர் விண்டோஸ், டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் 1-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது 67PS மற்றும் 89Nm ஐ உருவாக்குகிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே இன்ஜின் 57PS மற்றும் 82Nm அளவுக்கு குறைக்கப்பட்ட அவுட்புட் உடன் CNG மாடலில் வழங்கப்படுகிறது, 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே இது கிடைக்கும். தற்போதைய ஆல்டோ, ஐடில்-இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது போக்குவரத்து சூழ்நிலைகளில் எரிபொருளை குறைவாக பயன்படுத்த இது உதவும்.
இதையும் படியுங்கள்: Maruti Invicto: பின்புற சீட்பெல்ட் ரிமைன்டர் இப்போது ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி ஆல்டோ K10 நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும் - Std (O), LXi, VXi மற்றும் VXi + - மற்றும் இவற்றின் விலையானது ரூ. 3.99 லட்சம் முதல் ரூ. 5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது . இது ரெனால்ட் க்விட் உடன் நேரடியாக போட்டியிடுகிறது, அதே நேரத்தில் இது மாருதி எஸ்-பிரஸ்ஸோ -விற்கு மாற்றாகவும் இந்த காரை பார்க்கலாம்.
மேலும் படிக்க: Alto K10-ன் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful