• English
  • Login / Register

Maruti Alto K10 மற்றும் S-Presso கார்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் வசதி ஸ்டாண்டர்டாக கிடைக்கும்

published on ஆகஸ்ட் 21, 2024 06:00 pm by rohit for மாருதி ஆல்டோ கே10

  • 81 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆல்டோ K10 மற்றும் S-பிரஸ்ஸோ ஆகிய இரண்டும் அவற்றின் விலையில் எந்த அதிகரிப்பும் இல்லாமல் பாதுகாப்பு வசதியை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன.

Maruti Alto K10 and S-Presso now get ESP as standard

  • மாருதி இகோ தவிர அனைத்து மாருதி கார்களும் இப்போது ESP -ஐ ஸ்டாண்டர்டான வசதியாக பெறுகின்றன.

  • மற்ற ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

  • ESP ஆனது கார் சறுக்குவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சென்சார்கள் மற்றும் பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது.

  • இரண்டு ஹேட்ச்பேக்குகளும் ஒரே 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஆப்ஷனாக CNG கிட் மூலம் இயக்கப்படுகின்றன.

  • மாருதி ஆல்டோ K10 கார் ரூ.3.99 லட்சத்தில் முதல் ரூ.5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை விற்பனை செய்கிறது.

  • S-பிரஸ்ஸோ ரூ 4.27 லட்சம் முதல் ரூ 6.12 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோ K10 மற்றும் மாருதி S-பிரஸ்ஸோ ஆகியவை இப்போது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராமை (ESP) ஒரு ஸ்டாண்டர்டான வசதியாக பெறக்கூடிய மற்ற மாடல்களின் வரிசையில் இணைந்துள்ளன. இந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்குகளின் விலையை அதிகரிக்காமல் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பித்தலின் மூலம், இகோ தவிர அனைத்து மாருதி கார்களும் இப்போது ஸ்டாண்டர்டான வசதியாக ESP வசதியுடன் வருகின்றன.

எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் என்றால் என்ன?

Maruti Alto K10

எளிமையாக கூறுவதானால், ESP கார் சறுக்குவதைத் தடுக்கிறது, மேலும் சாலைகளில் உங்களின் கார்களில் பாதுகாப்பாக பயணிக்க இது உதவுகிறது. ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ESP அமைப்பு, காரின் இயக்கத்தைக் கண்காணிக்க பல்வேறு சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இந்தத் தரவு எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்டால் செயலாக்கப்படுகிறது, இது பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் பாதையை சரிசெய்கிறது மற்றும் சக்தி வெளியீட்டைக் கட்டுப்படுத்துகிறது, இது காரின் ஒட்டுமொத்த சிறத்தன்மையையும், நிலைத்தன்மையையும், கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது.

மிகவும் கடுமையான உலகளாவிய NCAP கிராஷ் டெஸ்ட்கள் மற்றும் பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீடுகளில் ESP இப்போது கட்டாய ஸ்டாண்டர்டான வசதியாக உள்ளது.

மற்ற பாதுகாப்பு அமைப்புகளில் மாற்றமில்லை

ESP ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவதைத் தவிர, மாருதி ஆல்டோ K10 மற்றும் S-பிரஸ்ஸோ இரண்டும் முன்பு இருந்த அதே பாதுகாப்பு உபகரணங்களுடன் வருகிறது. இதில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: இவை ஜூலை 2024 இல் சிறந்த விற்பனையான காம்பாக்ட் மற்றும் மிட்-சைஸ் ஹேட்ச்பேக்குகளாகும்

இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

மாருதி இரண்டு ஹேட்ச்பேக்குகளையும் கீழே குறிப்பிட்டுள்ள அதே பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது. ஆல்டோ K10 மற்றும் S-பிரஸ்ஸோ இரண்டும் விருப்பமான CNG கிட் உடன் கிடைக்கின்றன.

 

விவரங்கள்

 

 

மாருதி ஆல்டோ K10

 

 

மாருதி S-பிரஸ்ஸோ

 

 

இன்ஜின்

 

 

1-லிட்டர் பெட்ரோல்

 

 

1-லிட்டர் பெட்ரோல்+CNG

 

 

1-லிட்டர் பெட்ரோல்

 

 

1-லிட்டர் பெட்ரோல்+CNG

 

 

பவர்

 

 

67 PS

 

 

57 PS

 

 

67 PS

 

 

57 PS

 

 

டார்க்

 

 

89 Nm

 

 

82 Nm

 

 

89 Nm

 

 

82 Nm

 

 

டிரான்ஸ்மிஷன்

 

 

 5-ஸ்பீட் MT, 5-ஸ்பீட் AMT

 

 

5-ஸ்பீட் MT

 

 

 5-ஸ்பீட் MT, 5-ஸ்பீட் AMT

 

 

5-ஸ்பீட் MT

இரண்டு மாடல்களும் ஒரே பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பகிர்ந்து கொள்கின்றன. CNG ஆப்ஷன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மாருதி ஆல்டோ K10 விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரையிலும், மாருதி S-பிரஸ்ஸோவின் விலை ரூ.4.27 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரையிலும் (அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது. இரண்டு மாடல்களும் ரெனால்ட் க்விட் உடன் போட்டியிடுகின்றன மற்றும் அவற்றின் ஒரே மாதிரியான விலையின் காரணமாக ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.

புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: Alto K10-இன் ஆன்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti ஆல்டோ கே10

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா clavis
    க்யா clavis
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience