• English
  • Login / Register

Mahindra XUV700 காரின் உற்பத்தி 2 லட்சம் மைல்கல்லை கடந்தது, இப்போது புதிதாக இரண்டு புதிய கலர்கள் சேர்க்கப்பட்டுள்ளன

published on ஜூன் 28, 2024 06:58 pm by samarth for மஹிந்திரா எக்ஸ்யூவி700

  • 72 Views
  • ஒரு கருத்தை எழுதுக

XUV700 காரில் இப்போது பர்ன்ட் சியன்னா என்ற எக்ஸ்க்ளூஸிவ் ஷேடில் கிடைக்கும். அல்லது டீப் ஃபாரஸ்ட் ஷேடு ஸ்கார்பியோ N உடன் கிடைக்கும்

Mahindra XUV700 Crosses 2 Lakh Production Milestone

  • மஹிந்திரா XUV700 அறிமுகமான 3 ஆண்டுகளுக்குள் தயாரிப்பில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது 

  • XUV700 கார் இப்போது 9 மொத்த கலர் ஆப்ஷன்களை பெறுகிறது. அவற்றில் சில டூயல்-டோன் பிளாக் ரூஃப் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

  • இது எஸ்யூவி -யின் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன், அந்தந்த வேரியன்ட்களுக்கான டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படுகிறது.

  • வேரியன்ட்டை பொறுத்து 5, 6- மற்றும் 7-இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்

  • இதன் விலை ரூ 13.99 லட்சம் முதல் ரூ 26.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது.

மஹிந்திரா XUV700 அறிமுகப்படுத்தப்பட்ட 33 மாதங்களில் உற்பத்தியில் 2 லட்சம் யூனிட் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டியதை கொண்டாட லிமிடெட் எடிஷன் வேரியன்ட் இல்லை எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் எஸ்யூவி -க்கு இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுமையான விவரங்கள் இங்கே:

Mahindra XUV700 Crosses 2 Lakh Production Milestone

XUV700 -க்கான புதிய வண்ணங்கள்

இந்திய வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா XUV700 -க்கு இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது: டீப் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பர்ன்ட் சியன்னா பிரவுன் ஆகியவை XUV700 -க்கு பிரத்தியேகமானதாக கிடைக்கும். இதற்கிடையில் மற்ற மஹிந்திரா மாடல்களான தார், ஸ்கார்பியோ N, மற்றும் XUV 3XO ஆகிய கார்களிலும் இராணுவத்தால் ஈர்க்கப்பட்ட பச்சை நிறத்தை காணலாம். 

Mahindra XUV700 Deep Forest
Mahindra XUV700 Burnt Sienna

மஹிந்திரா XUV700 -க்கான முழுமையான வண்ணங்களின் பட்டியல் இங்கே:

எவரெஸ்ட் வொயிட்

மிட்நைட் பிளாக்

டேஸ்லிங் சில்வர்

ரெட் ரேஜ்

எலக்ட்ரிக் புளூ

நபோலி பிளாக்

பிளேஸ் சிவப்பு

டீப் ஃபாரஸ்ட் (புதியது)

பர்ன்ட் சியன்னா (புதியது)

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

XUV700 காரில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6-வே எலக்ட்ரிக்கல்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பில்டு-இன் அலெக்சா கனெக்டிவிட்டி உடன் கூடிய கனெக்டட் கார் டெக்னாலஜி.

பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX ஆங்கர்ஸ், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டாப்-எண்ட் வேரியன்ட், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுடன்(ADAS) வருகிறது. இது ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு மற்றும் டிரைவருக்கான வசதியை மேம்படுத்துகிறது.

XUV700 பவர்டிரெயின்கள் 

XUV700 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. அவற்றின் விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:

 

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

பவர்

200 PS

156 PS

185 PS

டார்க்

380 Nm

360 Nm

450 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/AT

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT/AT

டிரைவ்டிரெய்ன்

ஃபிரன்ட் வீல் டிரைவ்

ஃபிரன்ட் வீல் டிரைவ்

ஃபிரன்ட் அல்லது ஆல்-வீல் டிரைவ் (AT மட்டும்)

XUV700 காரின் லோவர் வேரியன்ட்கள் டீசல் இன்ஜினின் ஒரு ஆட்டோமெட்டிக் வசதி இல்லாமல் குறைந்த ட்யூன் செய்யப்பட்ட இன்ஜினை பெறுகின்றன. அதே சமயத்தில்  AWD ஆப்ஷன் டீசல்-ஆட்டோமெட்டிக் பவர்டிரெயினுக்கு மட்டுமே கிடைக்கும்.

XUV700 விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா XUV700 -வின் விலை தற்போது ரூ.13.99 லட்சம் முதல் ரூ.26.99 லட்சம் வரை உள்ளது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இது ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் பிளஸ், மற்றும் டாடா சஃபாரி உடன் போட்டியிடுகிறது. 5-சீட்டர் வேரியன்ட் எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற எஸ்யூவி -களுக்கு போட்டியாக உள்ளது.

மஹிந்திரா 2024 -ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆல் எலக்ட்ரிக் XUV700 -யை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது XUV e8 என்று அழைக்கப்படலாம்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேக்கோ –வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: XUV700 டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி700

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • ஸ்கோடா kylaq
    ஸ்கோடா kylaq
    Rs.8.50 - 15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2025
×
We need your சிட்டி to customize your experience