Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) செயல்திறன் மற்றும் மைலேஜ் விவரங்கள் பற்றிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO க்காக ஏப்ரல் 25, 2024 06:45 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
XUV 3XO டீசல் இன்ஜினுக்கான புதிய டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறும் என்பதை சமீபத்திய டீஸர் காட்டுகிறது.
-
மஹிந்திரா நிறுவனம் ஏப்ரல் 29 அன்று ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 (தற்போது XUV 3XO என அழைக்கப்படுகிறது) வெளியிட உள்ளது.
-
டீசல் இன்ஜினுடன் பழைய 6-ஸ்பீடு AMT -க்கு பதிலாக ஆட்டோமெட்டிக் டார்க் கன்வெர்டர் கொடுக்கப்படும் என்பதை புதிய டீஸர் உறுதிப்படுத்துகிறது.
-
0 முதல் 60 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டும் என மஹிந்திரா கூறுகிறது.
-
இப்போதுள்ள XUV300 -ன் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை பெறலாம்.
-
புதிய மஹிந்திரா எஸ்யூவிகளில் வழங்கப்படும் அதே டிரைவ் மோடுகளையும் (ஜிப், ஜாப் மற்றும் ஜூம்) கொண்டிருக்கும்.
-
அதன் அறிமுகத்திற்கு பிறகு விரைவில் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; விலை ரூ.9 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
மஹிந்திரா XUV 3XO (ஃபேஸ்லிப்டட் XUV300) அதன் அறிமுகமாகும் தேதி நெருங்கியுள்ளது. ஏப்ரல் 29 அன்று வெளியிடப்படுவதற்கு முன்னதாக மஹிந்திரா அப்டேட்டட் எஸ்யூவியின் வெளிப்புற மற்றும் உட்புற விவரங்களை காட்டும் டீசர்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது.. எஸ்யூவி -யின் உட்புறத்தைக் காட்டும் சமீபத்திய டீஸர் அதன் சில முக்கிய தொழில்நுட்ப விவரங்களை பற்றிய ஒரு பார்வையை எங்களுக்கு வழங்கியுள்ளது:
பவர்டிரெய்ன் மற்றும் விவரங்கள் அடங்கிய டீசர்
XUV 3XO இப்போதுள்ள XUV300 போன்ற அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், விவரங்கள் கீழே உள்ளன:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
110 PS |
130 PS |
117 PS |
டார்க் |
200 Nm |
250 Nm வரை |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT (எதிர்பார்க்கப்படுகிறது) |
சமீபத்திய டீசரின் அடிப்படையில் மஹிந்திரா XUV 3XO காரை டீசல் இன்ஜினுடன் AMT யூனிட்க்கு பதிலாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வழங்கலாம் என்று தெரிகிறது. மஹிந்திரா சப்-4எம் எஸ்யூவி -க்கு வேறு எந்த பவர்டிரெய்ன் தொடர்பான மாற்றங்களும் வெளியிடப்படவில்லை.
சமீபத்திய வீடியோ XUV 3XO -க்கு 20.1 கிமீ/லி மைலேஜ் கிடைக்கும் என்று ARAI கூறுகிறது. இது புதிய டீசல்-ஆட்டோ கலவையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். புதுப்பிக்கப்பட்ட சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அறிமுகத்தின் போது மற்ற பவர்டிரெய்ன் வாரியாக கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்களை மஹிந்திரா வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
மஹிந்திரா நிறுவனம் 0 முதல் 60 கிமீ ஸ்பீடுத்தில் 4.5 வினாடிகளில் வேகமெடுக்கும் என்று அறிவித்துள்ளது. XUV700 மற்றும் ஸ்கார்பியோ N உள்ளிட்ட பிராண்டின் பிற எஸ்யூவி -களில் இருக்கும் அதே டிரைவ் மோடுகளான ஜிப், ஜாப் மற்றும் ஜூம் ஆகியவற்றையும் டீஸர் உறுதிப்படுத்துகிறது.
வடிவமைப்பு மாற்றங்கள்
XUV 3XO ஆனது முக்கோண அலங்காரங்கள், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் LED இணைக்கப்பட்ட டெயில்லைட்கள் கொண்ட புதிய கிரில்லை பெறும் என்று முந்தைய டீஸர்கள் காட்டுகின்றன. உள்ளே கேபின் புதிய டாஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கும், இப்போது ஃபிரீ-புளோட்டிங் டச் ஸ்கிரீன் மற்றும் அப்டேட்டட் கிளைமேட் கன்ட்ரோல் பேனலை கொண்டுள்ளது.
மேலும் படிக்க: Mercedes-Benz EQG காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன! இந்த ஆல் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் 1,000 Nm டார்க் மற்றும் 4 கியர்பாக்ஸ்களுடன் வருகிறது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
மஹிந்திரா புதிய XUV 3XO காரை டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்களுடன் வழங்கும் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவர் டிஸ்ப்ளேவுக்காகவும்). மற்ற உறுதிப்படுத்தப்பட்ட வசதிகளில் இந்த பிரிவில் முதல் பனோரமிக் சன்ரூஃப், டூயல்-சோன் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவை அடங்கும். இது பின்புற ஏசி வென்ட்கள், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
மஹிந்திரா XUV 3XO அதன் அறிமுகத்தை தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ 9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இரண்டு சப்-4மீ கிராஸ்ஓவர் மாருதி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியவற்றுடனும் போட்டியிடும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV300 AMT