சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV 3XO கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.7.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

shreyash ஆல் ஏப்ரல் 29, 2024 08:33 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
52 Views

புதிய வடிவமைப்பு மற்றும் வசதிகளை தவிர XUV 3XO இந்த பிரிவில் முதல் முறையாக பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகின்றது.

  • XUV 3XO 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது: MX1, MX2, MX3, AX5 மற்றும் AX7.

  • புதிய கிரில் மற்றும் ஹெட்லைட்கள் மற்றும் நீளமான ஃபாங் வடிவ LED DRL -கள் உட்பட பல விஷயங்களுடன் முன்பக்கம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

  • புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் பின்பக்கத்தில் கனெக்டட் LED டெயில் லைட்ஸ்.

  • உள்ளே கேபினும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இப்போது இது XUV 400 EV -யில் இருப்பதை போன்ற டேஷ்போர்டை பெறுகிறது.

  • பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ADAS போன்ற புதிய வசதிகளையும் பெறுகிறது.

  • பழைய XUV300 போன்ற அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

  • T-GDi (டேரக்ட் இன்ஜெக்ஷன்) டர்போ-பெட்ரோல் இன்ஜின் இப்போது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கான ஆப்ஷனையும் பெறுகிறது.

பலரும் எதிர்பார்த்த மஹிந்திரா XUV 3XO கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது XUV300 காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும். இதன் விலை ரூ. 7.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றது. மே 15 முதல் இந்த காருக்கான ஆர்டர்களை மஹிந்திரா ஏற்கத் தொடங்கும். தொடர்ந்து மே 26, 2024 முதல் டெலிவரிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3XO பற்றிய விவரங்களை பார்க்கும் முன்னர் வேரியன்ட் வாரியான அறிமுக விலை விவரங்கள் இங்கே.

எக்ஸ்-ஷோரூம் விலை (அறிமுகம்)

வேரியன்ட்

மேனுவல்

ஆட்டோமெட்டிக்

1.2 லிட்டர் MPFi டர்போ-பெட்ரோல்

MX1

ரூ.7.49 லட்சம்

விவரம் இல்லை

MX2 Pro

ரூ 8.99 லட்சம்

ரூ.9.99 லட்சம்

MX3

ரூ.9.49 லட்சம்

ரூ.10.99 லட்சம்

MX3 ப்ரோ

ரூ.9.99 லட்சம்

ரூ.11.49 லட்சம்

AX5

ரூ.10.69 லட்சம்

ரூ.12.19 லட்சம்

1.2-லிட்டர் TGDi (டேரக்ட் இன்ஜெக்ஷன்) டர்போ-பெட்ரோல்

AX5L

ரூ.11.99 லட்சம்

ரூ.13.49 லட்சம்

AX7

ரூ.12.49 லட்சம்

ரூ.13.99 லட்சம்

AX7L

ரூ.13.99 லட்சம்

ரூ.15.49 லட்சம்

1.5 லிட்டர் டீசல்

MX2

ரூ.9.99 லட்சம்

விவரம் இல்லை

MX2 Pro

ரூ.10.39 லட்சம்

விவரம் இல்லை

MX3

ரூ.10.89 லட்சம்

ரூ.11.69 லட்சம்

MX3 ப்ரோ

ரூ.11.39 லட்சம்

விவரம் இல்லை

AX5

ரூ.12.09 லட்சம்

ரூ.12.89 லட்சம்

AX7

ரூ.13.69 லட்சம்

ரூ.14.49 லட்சம்

AX7L

ரூ.14.99 லட்சம்

விவரம் இல்லை

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை (அறிமுகம்)

XUV 3XO வடிவமைப்பு

XUV 3XO காரின் உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. முன்பக்கம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கிரில், நீளமான ஃபாங் வடிவ LED DRL -கள் கொண்ட புதிய ஹெட்லைட்கள் மற்றும் புதிய முன்பக்க பம்பர் ஆகியவை உள்ளன. பக்கவாட்டில் ஷில்அவுட் தோற்றம் முன்பு போலவே உள்ளது. ஆனால் அது இப்போது புதிய வடிவத்தில் அலாய் வீல்கள் உள்ளன.

பின்புறத்தில் மஹிந்திராவின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சப்காம்பாக்ட் எஸ்யூவி, புதிய 'XUV 3XO' என்ற பெயரைக் காட்டும் வகையில் டெயில் கேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கனெக்டட் LED டெயில்லேம்ப்கள் மற்றும் உயரமான பம்பர் வடிவமைப்புடன் ஷார்ப்பான தோற்றத்தைப் பெறுகிறது.

மேலும் பார்க்க: புதிய Toyota Rumion மிட்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் அறிமுகம், விலை ரூ.13 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

XUV 3XO காரின் கேபின் அப்டேட்கள்

மஹிந்திரா 3XO காரில் XUV400 EV -யில் உள்ளதை போன்ற டேஷ்போர்டு செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய XUV300 உடன் ஒப்பிடும்போது இதில் சென்டர் கன்சோல் புதிய வடிவில் உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அட்ரினோ எக்ஸ் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் கீழே சென்ட்ரல் ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது அதே ஸ்டீயரிங் வீல் உள்ளது. ஆனால் இப்போது டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்துக்காக XUV 3XO மெட்டாலிக் பெடல்களுடன் வருகிறது.

மஹிந்திரா 3XO கேபினின் மிகப்பெரிய ஹைலைட்டாக இந்த பிரிவில் முதலாவதாக பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகின்றது.

XUV 3XO வசதிகள்

7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் ஏசி, ரியர் ஏசி வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிமோட் ஏசி கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளுடன் XUV 3XO -யை மஹிந்திரா கொடுக்கின்றது. புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகளில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டானவை), 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரோல்-ஓவர் மிட்டிகேஷன் ஆகியவை உள்ளன. இது 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளின் முழு தொகுப்பையும் பெறுகிறது.

மேலும் பார்க்க: Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

XUV 3XO இன்ஜின் டிரான்ஸ்மிஷன்

XUV 3XO -யில் பழைய காரில் இருந்த அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை அப்படியே மஹிந்திரா கொடுத்துள்ளது . அவற்றின் விவரங்கள் கீழே உள்ளன:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்

1.2-லிட்டர் T-GDi (டேரக்ட் இன்ஜெக்ஷன்)

1.5 லிட்டர் டீசல்

பவர்

112 PS

130 PS

117 PS

டார்க்

200 Nm

250 Nm வரை

300 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AMT

கிளைம் செய்யப்படும் மைலேஜ்

18.89 கிமீ/லி / 17.96 கிமீ/லி

20.1கிமீ/லி / 18.2 கிமீ/லி

20.6 கிமீ/லி / 21.2 கிமீ/லி

T-GDi (டேரக்ட் இன்ஜெக்ஷன்) மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் இப்போது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனையும் பெறுகின்றன.

XUV 3XO -காரின் போட்டியாளர்கள்

மஹிந்திரா XUV 3XO-க்கான விலை டாடா நெக்ஸான், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும் வகையில் நிர்ணயம் செய்யப்படும்.

மேலும் இது வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி -யுடனும் போட்டியிடும்.

மேலும் படிக்க: XUV 3XO ஆன் ரோடு விலை

Share via

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

G
growth is life
Apr 30, 2024, 2:14:22 PM

Bigger sunroof starts from which variant?

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6 - 10.51 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.67.65 - 73.24 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.25 - 13.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை