• English
  • Login / Register

Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

published on ஏப்ரல் 29, 2024 07:05 pm by ansh for ஃபோர்ஸ் குர்கா 5 டோர்

  • 32 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கூர்க்கா 5-டோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய கேபின், கூடுதலான டோர்கள், கூடுதல் வசதிகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன் வருகின்றது.

5-door Force Gurkha Detailed In Pics

5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த பிறகு இப்போது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் மே மாத தொடக்கத்தில் வெளியிடப்படவுள்ளது. இது கூடுதல் டோர்கள், புதிய வசதிகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் தவிர வெளிப்புற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் வருகிறது. நீங்கள் கூர்க்கா 5-டோர் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த 15 படங்களில் அதைப் பற்றிய விவரங்களை பார்க்கவும்.

வெளிப்புறம்

5-door Force Gurkha Front

முன்பக்கத்தில் 3-டோர் மாடலுடன்  ஒப்பிடும் போது எதுவும் மாறவில்லை. கிரில், பானட் மற்றும் பம்பர்களின் வடிவமைப்பு அப்படியே உள்ளது. ஏர் ஸ்நோர்கெல் என்பது கரடுமுரடான ஆஃப்-ரோடருக்கான ஸ்டாண்டர்டான கிட்டின் ஒரு பகுதியாகும்.

5-door Force Gurkha Headlight

இன்னும் அதே வட்ட வடிவ LED ஹெட்லைட்கள் (இப்போது கார்னர்ரிங் செயல்பாடு உள்ளது) உள்ளன. மேலும் DRL செட்டப் அதன் 3-டோர் காரை போலவே உள்ளது.

5-door Force Gurkha Side

பக்கவாட்டில் தெரியும் மாற்றம் கூடுதல் பின்புற டோர்களின் தொகுப்பாகும். வீல் ஆர்ச்கள், கிளாடிங் மற்றும் சைடு படி உட்பட அனைத்தும் 3-டோர் பதிப்பை போலவே இருக்கும். இருப்பினும் 5-டோர் பதிப்பில் உள்ள மூன்றாவது வரிசை ஜன்னல் 3-டோர் பதிப்பில் உள்ளதை விட சிறியது. மேலும் திறந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஃபோர்ஸ் கூர்க்கா 3-டோர் கூடுதல் வசதிகள் மற்றும் செயல்திறனுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது

5-door Force Gurkha Alloy Wheel

5-டோர் கூர்க்கா -வில் 18-இன்ச் அலாய் வீல்களை ஃபோர்ஸ் மாற்றியமைத்துள்ளது. மேலும் அவை 2024 3-டோர் பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

5-door Force Gurkha Rear

முன்பக்கத்தைப் போலவே பின்பக்கமும் எந்த டிசைன் மாற்றங்களையும் பெறவில்லை. பின்புறத்தில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல்களை தவிர, பூட் லிப், பம்ப்பர்கள் மற்றும் டெயில் லைட்ஸ் உள்ளிட்ட அனைத்து வடிவமைப்புகளும் பழைய 3-டோர் எடிஷனை போலவே உள்ளன.

உட்புறம்

5-door Force Gurkha Dashboard

கேபினுக்குள் ஒட்டுமொத்த வடிவமைப்பும் கிட்டத்தட்ட 3-டோர் பதிப்பைப் போலவே உள்ளது. இது அதே சென்டர் கன்சோல், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி வென்ட்கள் மற்றும் ஸ்டீயரிங் கூட அப்படியே இருக்கின்றது. டாஷ்போர்டில் உள்ள ஒரே மாற்றம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் ஆகும்.

மேலும் படிக்க: Hyundai Creta EV 2025 ஆண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதற்கான காரணங்கள் இங்கே

5-door Force Gurkha Front Row

முன் இருக்கைகளின் வடிவமைப்பு அப்படியே உள்ளது. ஆனால் பழைய 3-டோர் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட நீல நிறத்துடன் ஒப்பிடும்போது, ​​5-டோர் கூர்காவில் (சிவப்பு நிறத்தில் பினிஷ் செய்யப்பட்ட) சீட்களின் வடிவம் வேறுபட்டதாக உள்ளது.

5-door Force Gurkha Second Row

கூர்க்கா 5-டோர் காரில் கப்ஹோல்டர்களுடன் சென்டர் ஆர்ம்ரெஸ்டுடன் வரும் இரண்டாவது வரிசையில் பெஞ்ச் சீட்கள் உங்களுக்கு கிடைக்கும்.

5-door Force Gurkha Third Row

புதிய கூர்காவில் உள்ள முக்கியமான விஷயத்தை பார்ப்போம்: மூன்றாவது வரிசை. இங்கே கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுநர் உட்பட மொத்தம் 7 பயணிகள் இந்த காரில் பயணிக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் இந்த மூன்றாவது வரிசைக்குச் செல்ல நீங்கள் பூட் வழியாக நுழைய வேண்டும். எனவே இருக்கைகளுடன் பொருட்களை வைக்க இடமில்லாமல் போய்விட்டது. நல்ல விஷயம் இது ஆப்ஷனலான ரூஃப் கேரியரை பெறுகிறது.

வசதிகள்

5-door Force Gurkha 9-inch Touchscreen

பழைய 3-டோர் காருடன் ஒப்பிடும் போது புதிய 5-டோர் கூர்க்கா மற்றும் 2024 3-டோர் கூர்க்கா இரண்டிலும் முக்கிய வசதி வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் புதிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.

5-door Force Gurkha Digital Driver's Display

இது இப்போது 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வசதிகள் பழைய 3-டோர் கூர்க்கா -வில் உள்ளதை போலவே இருக்கின்றன. இதில் மேனுவல் க்ளைமேட் கன்ட்ரோல் (பின்புற ஏசி வென்ட்களுடன்) எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVMகள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங், டூயல்-ஃப்ரன்ட் ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும். ABS உடன் EBD, மற்றும் ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

மேலும் பார்க்க: Mahindra Thar 5-door காரின் உட்புறம் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது - இதில் ADAS கிடைக்குமா ?

பவர்டிரெய்ன்

5-door Force Gurkha Diesel Engine

கூர்காவின் 5-டோர் மற்றும் 3-டோர் இரண்டு பதிப்புகளிலும் டீசல் இன்ஜினை ஃபோர்ஸ் அப்டேட் செய்துள்ளது. இதில் இன்னும் 2.6-லிட்டர் யூனிட் உள்ளது. ஆனால் இப்போது அது 140 PS மற்றும் 320 Nm அவுட்புட் உடன் இப்போது அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.

5-door Force Gurkha 5-speed Manual Transmission

இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

5-door Force Gurkha Electronic Shift On Fly

இருப்பினும் ஆஃப்-ரோடர் இப்போது எலக்ட்ரானிக் ஷிப்ட்-ஆன்-தி-ஃப்ளை செயல்பாட்டுடன் வருகிறது. இது டூ-வீல்-டிரைவிலிருந்து ரியர்-வீல்-டிரைவ் மற்றும் 4-லோ (ஆஃப்-ரோடிங்கிற்கு) எளிதாக மாற்ற அனுமதிக்கிறது. இது பழைய 3-டோர் மாடலை போலவே மேனுவலாக லாக்கிங் முன் மற்றும் பின்புற டிஃபரென்ஷியலை பெறுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

5-door Force Gurkha

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோரின் விலை ரூ. 16 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2024 முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இது வரவிருக்கும் கார்களுக்கு ஒரு மாற்றாக இருக்கும். இது வரவிருக்கும் 5-டோர் மஹிந்திரா தார் மேலும் சப்-4 மீட்டர் மாருதி ஜிம்னி ஆகியவற்றுக்கு பெரிய மாற்றாகவும் இருக்கும். 

மேலும் படிக்க: ஃபோர்ஸ் கூர்க்கா டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Force குர்கா 5 டோர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience