இந்த நவம்பரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 5 கார்கள்
published on அக்டோபர் 31, 2023 04:49 pm by ansh for டாடா பன்ச் EV
- 56 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பட்டியலில் டாடா பன்ச் EV மற்றும் மெர்சிடிஸ்-AMG C43 போன்ற பெர்ஃபார்மன்ஸ் மாடல்கள் போன்ற அனைத்து புதிய அறிமுகங்களும் அடங்கும்.
2023 ஆம் ஆண்டில், ஃபேஸ்லிஃப்ட் உட்பட பல குறிப்பிடத்தக்க புதிய கார் அறிமுகங்களை நமது நாடு கண்டுள்ளது. ஆண்டு இறுதியை நெருங்கும் போது, புதிய கார்களின் தாக்கம் குறைந்து வருகிறது ஆனாலும் நம்மிடம் அறிமுகத்திற்காக சில புதிய உள்ளூர் மற்றும் குளோபல் மாடல்கள் இரண்டும் வரிசையில் காத்திருகின்றன. இந்த நவம்பரில் வெளியிடப்படும் அல்லது அறிமுகப்படுத்தப்படும் அத்தகைய 5 கார்களை பற்றி இங்கே காண்போம் வாருங்கள்.
மெர்சிடீஸ்-பென்ஸ் GLE ஃபேஸ்லிஃப்ட்
ஃபேஸ்லிஃப்டட் மெர்சிடீஸ்-பென்ஸ் GLE இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது நவம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி சிறிய ஒப்பனை மாற்றங்கள், அம்ச மேம்படுத்தல்கள் மற்றும் பியூர் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது. இந்தியா-ஸ்பெக் மாடல் பெரும்பாலும் 3-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் தொடர்ந்து வரும், மேலும் பெட்ரோல் ஆப்ஷனையும் அறிமுகப்படுத்தலாம். தொடக்க விலை ரூ. 93 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: BMW i7 M70 xடிரைவ் vs பெர்ஃபார்மன்ஸ் EV செடான் போட்டியாளர்கள்: விவரக்குறிப்புகள் ஒப்பிடப்படுகின்றன
மெர்சிடீஸ் பென்ஸ் AMG C43
புதுப்பிக்கப்பட்ட GLE உடன், மெர்சிடிஸ் புதிய காரையும் C43 AMG அறிமுகப்படுத்தவுள்ளது ஸ்போர்ட்டி பெர்ஃபார்மன்ஸ் செடான், 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும், இது அதன் முந்தைய தலைமுறையின் 3-லிட்டர் ஆறு சிலிண்டர் யூனிட்டை விட அதிக சக்தி வாய்ந்தது. மெர்சிடீஸ் C43 AMG விலை ரூ.1 கோடிக்கு (எக்ஸ்-ஷோரூம்) குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பன்ச் EV
டாடா கடந்த சில மாதங்களில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட், ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றுடன் பல பெட்ரோல்/டீசல் கார்கள் மற்றும் EVகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் கடைசி அறிமுகம் டாடா பன்ச் EVஆகும் . சிறிய EV சோதனையின் போது பல முறை சாலையில் தென்பட்டது மற்றும் புதிய டாடா நெக்ஸான் EV -யில் இருப்பதைப் போன்ற பல வடிவமைப்பை பெறலாம் மேலும், பன்ச் EV ஆனது 500 கிமீக்கு மேல் உரிமை கோரப்பட்ட பயணதூர வரம்பில் பயணிக்க முடியும் என்று டாடா கூறுகிறது. பன்ச் -ன் எலக்ட்ரின் வெர்சனின் தொடக்க விலை ரூ.12 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) ஆக இருக்கலாம்.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர்
ரெனால்ட் நிறுவனம் மூன்றாம் தலைமுறை டஸ்டர் காரை நவம்பர் 29 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. புதிய டஸ்டர் முதலில் போர்ச்சுகலில் டேசியா (ரெனால்ட்டின் பட்ஜெட் சார்ந்த பிராண்ட்) மூலம் வெளியிடப்படும், மேலும் இது கார் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய வடிவமைப்பைக் கொண்டு செல்லும். புதுப்பிக்கப்பட்ட SUV பல பெட்ரோல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும், மேலும் இது 2025 ஆம் ஆண்டளவில் இந்திய சந்தையில் நுழைய வாய்ப்புள்ளது. புதிய டஸ்டரின் விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காணவும்: பின்புறம் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வரும் 5-door Mahindra Thar
நான்காம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப்
ஸ்கோடா சூப்பர்ப் சிறிது காலத்திற்கு முன்பு இந்திய சந்தையில் இருந்து நிறுத்தப்பட்டது, அதன் பிறகு நாங்கள் அதன் வருகைக்காக காத்திருக்கிறோம். 2024 சூப்பர் காரின் வெளிப்புற வடிவமைப்பு படங்களை கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது ,இது நவம்பர் 2 அன்று உலகளவில் அது வெளியிடப்படும். இது ஸ்கோடாவின் புதிய மாடர்ன் சாலிட் டிசைனை கொண்டுள்ளது மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது. இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படா விட்டாலும், அடுத்த ஆண்டு எப்போதாவது இது இந்திய சாலையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா சூப்பர்ப் -ன் விலை ரூ. 40 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார்கள் இந்த 2023 நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் அல்லது வெளியிடப்படும். நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? கீழே உள்ள விமர்சனங்களில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.