• English
    • Login / Register

    5-டோர் Mahindra Thar Roxx மற்றும் 5-டோர் Force Gurkha: விவரங்கள் ஒப்பீடு

    மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக ஆகஸ்ட் 19, 2024 07:58 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 76 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இரண்டு எஸ்யூவி-களும் அவற்றின் ஆஃப்-ரோடிங் திறன்களுக்காக நன்கு அறியப்பட்டவை. இப்போது 5-டோர் வெர்ஷன்ளில் கிடைக்கின்றன. குறைந்தபட்சம் கோட்பாட்டில் எது தனித்து நிற்கிறது என்பதை தீர்மானிக்க அவற்றின் விவரங்களை ஒப்பிடுகிறோம்

    5 Door Mahindra Thar Roxx Vs 5 Door Gurkha specifications compared

    மஹிந்திரா தார் ரோக்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கார் பிரியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி வருகிறது. அதன் குறிப்பிடத்தக்க டிசைன் மற்றும் வலுவான அம்சங்களுடன், இது 5-டோர் ஃபோர்ஸ் குர்காவுடன் நேருக்கு நேர் போட்டியிட தயாராக உள்ளது. இந்த கட்டுரையில், இரண்டு எஸ்யூவி-களின் விவரக்குறிப்புகளையும், அவற்றின் சிறப்பம்சங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவதன் மூலம் விரிவாக தெரிந்து கொள்வோம்.

    விலை

     

    மாடல்

     

    விலை

     

    மஹிந்திரா தார் ராக்ஸ்*

     

    ரூ. 12.99 லட்சம் முதல் ரூ. 20.49 லட்சம் வரை

     

    5-டோர் ஃபோர்ஸ் குர்கா

     

    ரூ. 18 லட்சம்

    *ரியர்-வீல்-டிரைவ் (RWD) விலை விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன, 4-வீல்-டிரைவ் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும்.

    விலை எக்ஸ்-ஷோரூம்-க்கானவை, பான்-இந்தியா

    5-டோர் ஃபோர்ஸ் குர்கா ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் வருகிறது, மஹிந்திரா தார் ரோக்ஸ் MX1, MX3, MX5, AX3L, AX5L மற்றும் AX7L போன்ற ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    Mahindra Thar Roxx gets LED headlights

    அளவுகள்

     

    அளவுகள்

     

    மஹிந்திரா தார் ராக்ஸ்

     

    5-டோர் ஃபோர்ஸ் குர்கா 

     

    வித்தியாசம்

     

    நீளம்

     

    4,428 மி.மீ

     

    4,390 மி.மீ

     

    +38 மி.மீ

     

    அகலம்

     

    1,870 மி.மீ

     

    1,865 மி.மீ

     

    +5 மி.மீ

     

    உயரம்

     

    1,923 மி.மீ

     

    2,296 மி.மீ

     

    (-920 மி.மீ)

     

    வீல்பேஸ்

     

    2,850 மி.மீ

     

    2,825 மி.மீ

     

    +25 மி.மீ

     

    கிரவுண்ட் கிளியரன்ஸ்

     

    இல்லை

     

    233 மி.மீ

    -

    -

    Force Gurkha 5 door side

    மஹிந்திரா தார் ரோக்ஸ் மற்றும் 5-டோர் ஃபோர்ஸ் குர்கா ஆகியவை ஒரே அளவிலான ஆஃப்-ரோடர்களாக உள்ளன, ஆனால் தார் ரோக்ஸ் சற்று நீளமாகவும் அகலமாகவும் இருப்பதால் அதன் சாலை இருப்பை மேம்படுத்துகிறது. இருப்பினும், குர்கா குறிப்பாக உயரமானது, இது பயணிகளுக்கு அதிக ஹெட்ரூமை வழங்கக்கூடியது. கூடுதலாக தார் ரோக்ஸ் சற்றே நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. இது அதிக உட்புற இட வசதியை வழங்குவதன் மூலம் பயணிகளுக்கு அதிக சௌகர்யத்தை வழங்கலாம்.

    ஆஃப்-ரோடு விவரங்கள்

     

     

    மஹிந்திரா தார் ராக்ஸ்

     

    5-டோர் ஃபோர்ஸ் குர்கா 

     

    அப்ரோச் ஆங்கிள்

     

    41.7 டிகிரி

     

    39 டிகிரி

     

    பிரேக்ஓவர் ஆங்கிள்

     

    23.9 டிகிரி

     

    28 டிகிரி

     

    டிபார்ச்சர் ஆங்கிள்

     

    36.1 டிகிரி 

     

    37 டிகிரி

     

    வாட்டர் வாடிங் கெப்பாசிட்டி

     

    650 மி.மீ

     

    700 மி.மீ

    ஆஃப்-ரோடு திறன்களைப் பொறுத்தவரையில் மஹிந்திரா தார் ரோக்ஸ் மற்றும் 5-டோர் ஃபோர்ஸ் குர்கா ஆகிய இரண்டு கார்களும் அட்டவணையில் காட்டியுள்ளபடி தனித்துவமான நன்மைகளுடன் வருகின்றன. தார் ராக்ஸ் ஒரு சிறந்த அப்ரோச் ஆங்கிளுடன் சிறந்து விளங்குகிறது, தடைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், பிரேக்ஓவர் மற்றும் டிபார்ச்சர் ஆங்கிள்களில் குர்கா சிறந்து விளங்குகிறது, இது சவாலான நிலப்பரப்பில் செல்வதற்கு மஹிந்திரா தார் ரோக்ஸை விட சிறிது கூடுதல் வசதியை பயணிகளுக்கு அளிக்கிறது. கூடுதலாக, குர்கா அதிக வாட்டர் வாடிங்  திறனைக் கொண்டுள்ளது, இது தார் ரோக்ஸ் கையாளக்கூடியதை விட 50 மி.மீ ஆழமான தண்ணீர் பாதைகளை கடக்க உதவுகிறது.

    மேலும் படிக்க: 5-டோர் Mahindra Thar Roxx vs Maruti Jimny மற்றும் Force Gurkha 5- டோர்: ஆஃப் ரோடு விவரக்குறிப்புகள் ஓர் ஒப்பீடு

    பவர்டிரெய்ன்

     

    விவரங்கள்

     

    மஹிந்திரா தார் ராக்ஸ்

     

    5-டோர் ஃபோர்ஸ் குர்கா

     

    இன்ஜின்

     

    2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

     

    2.2 லிட்டர் டீசல்

     

    2.5 லிட்டர் டீசல்

     

    பவர்

     

    177 PS வரை

     

    175 PS வரை

       

    140 PS 

     

    டார்க்

     

    380 Nm வரை

     

    370 Nm வரை

     

    320 Nm

     

    டிரான்ஸ்மிஷன்

     

    6-ஸ்பீட் MT/ 6-ஸ்பீட் AT^

     

    6-ஸ்பீட் MT/ 6-ஸ்பீட் AT

     

    5-ஸ்பீட் MT

     

    டிரைவ்டிரெய்ன்*

     

    RWD

     

    RWD/4WD

     

    4WD

    *RWD: ரியர்-வீல்-டிரைவ்; 4WD - ஃபோர்-வீல்-டிரைவ்

    ^AT: டார்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

    5-door Mahindra Thar Roxx Engine

    5-டோர் ஃபோர்ஸ் குர்காவை விட தார் ரோக்ஸ் கூடுதலாக பெறக்கூடிய ஒரு நன்மை அதன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகும், இது குர்காவில் வழங்கப்படவில்லை. இருப்பினும், இந்த டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் ரியர்-வீல்-டிரைவ்  (RWD) உள்ளமைவுடன் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Force Gurkha 5 door diesel engine

    மஹிந்திரா தார் ரோக்ஸ் மற்றும் 5-டோர் ஃபோர்ஸ் குர்கா ஆகிய இரண்டும் கார்களும் வலுவான டீசல் இன்ஜின்களுடன் வருகிறது, ஆனால் அவை சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. தார் ரோக்ஸ் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 175 PS மற்றும் 370 Nm டார்க்கை உருவாக்குகிறது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு இடையே தேர்வு செய்யும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. மறுபுறம், குர்கா 140 PS மற்றும் 320 Nm வழங்கும் ஒரு பெரிய 2.5-லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது, ஆனால் இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தார் ரோக்ஸ் ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஃபோர்-வீல் டிரைவ் ஆகிய இரண்டையும் வழங்குகிறது, அதேசமயம் குர்கா ஃபோர்-வீல் டிரைவ் உடன் பிரத்தியேகமாக கிடைக்கிறது, இது ஆஃப்-ரோடு பயணத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யோகமான ஆப்ஷனாக இருக்கும்.

    மேலும் படிக்க: 5-டோர் Mahindra Thar Roxx வேரியன்ட் வாரியாக அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் விளக்கப்பட்டுள்ளன

    வசதிகள்

     

    அம்சங்கள்

     

    மஹிந்திரா தார் ராக்ஸ்

     

    5-டோர் ஃபோர்ஸ் குர்கா

     

    வெளிப்புறம்

     
    • LED DRL-களுடன் கூடிய ஆட்டோ-LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள்

    • LED டர்ன் இண்டிகேட்டர்கள்

    • LED டெயில் லைட்கள்

    • முன் LED ஃபாக் லைட்கள்

    • 19-இன்ச் அலாய் வீல்கள்

    • LED DRL-களுடன் கூடிய LED ஹெட்லைட்கள்

    • ஃப்ரண்ட் ஹாலஜன் ஃபாக் லைட்கள்

    • 18-இன்ச் அலாய் வீல்கள்

    • ஏர் இன்டேக் ஸ்நோர்கெல்

    • ரூஃப் கேரியர்

    • ரியர் டெயில்கேட் லேடர்

     

     

    உட்புறம்

    • டூயல்-டோன் கருப்பு மற்றும் வெள்ளை டாஷ்போர்டு

    • வெள்ளை லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி

    • லெதரெட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

    • இரண்டு தனித்தனி ஃப்ரன்ட் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்கள்

    • கப் ஹோல்டர்களுடன் கூடிய பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்கள்

    • ஃபுட்வெல் லைட்டிங்

    • ஐந்து சீட்கள்

     
    • சிங்கிள்-டோன் பிளாக் டாஷ்போர்ட் 

    • ஆள் பிளாக் டாஷ்போர்டு

    • ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

    • இரண்டு தனித்தனி ஃப்ரன்ட் ஆர்ம்ரெஸ்ட்கள்

    • கப் ஹோல்டர்களுடன் ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்

    • ஆறு சீட்கள்

     

    வசதிகள்

    • ரியர் வென்ட்டுகளுடன் கூடிய ஆட்டோ ஏசி

    • காற்றோட்டமான முன் சீட்கள்

    • பனோரமிக் சன்ரூஃப்

    • 10-25 இஞ்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே

    • வயர்லெஸ் போன் சார்ஜர்

    • க்ரூஸ் கண்ட்ரோல்

    • 6- வே பவர்டு டிரைவரின் சீட்

    • பவர்-ஃபோல்ட் செயல்பாட்டைக் கொண்ட எலக்ட்ரிகல்லி சரிசெய்யக்கூடிய ORVM-கள்

    • 12-V ஃப்ரண்ட் மற்றும் ரியர் சீட்களுக்கான பவர் அவுட் லேட்

    • முன்பக்கத்தில் 65W டைப்-C மற்றும் டைப்-A USB போர்ட்கள்

    • பின்புறத்தில் 15W டைப்-C USB போர்ட்

    • குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ்

    • புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்

    • எலக்ட்ரிக் லாக்கிங் டிஃபரன்ஷியல்

    • ஆட்டோ-டிம்மிங் IRVM

     
    • மேனுவல் ஏசி

    • பின்புற பயணிகளுக்கான ரூஃப்-மௌன்ட்டெட்  காற்று சுழற்சி வென்ட்கள்

    • டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்

    • முன் மற்றும் பின் பயணிகளுக்கான சார்ஜிங் போர்ட்கள்

    • இரண்டு பயணிகளுக்கும் ஃப்ரண்ட் சீட் ஆர்ம்ரெஸ்ட்

    • கப்ஹோல்டர்களுடன்  ரியர் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்

    • நான்கு பவர் விண்டோக்களும்

    • டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

     

    இன்ஃபோடெயின்மென்ட்

     
    • 10.25-இன்ச் டச்ஸ்கிரீன்

    • வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ அண்ட் ஆப்பிள் கார்பிளே

    • கனெக்டெட் கார் டெக்னாலஜி

    • 9- ஸ்பீகர் ஹர்மன் கர்டன் சவுண்ட் சிஸ்டம்

    • 9-இன்ச் டச்ஸ்கிரீன்

    • வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே

     

     

    பாதுகாப்பு

     
    • 6 ஏர்பேக்குகள் 

    • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்  (ESC) ரோலோவர் மிடிகேஷன் உடன்

    • 360 டிகிரி கேமரா

    • ஃப்ரண்ட் மற்றும்  ரியர் பார்க்கிங் சென்சர்கள்

    • ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல்

    • ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள்

    • டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

    • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

    • ரியர்வைப்பருடன் கூடிய ரியர் டிஃபோகர்

    • ரெயின் சென்சிங் வைப்பர்கள்

    • அனைத்து சீட்களுக்குமான 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள்

    • அனைத்து சீட்களுக்குமான சீட் பெல்ட் ரிமைன்டர்

    • EBD உடன் கூடிய ABS

    • ISOFIX சைல்டு சீட் ஆன்கரேஜ்

    • லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)

    • டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்

    • ரியர் பார்க்கிங் கேமரா

    • EBD உடன் கூடிய ABS

    • டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம்

    • ஃப்ரண்ட்-வீல் டிஸ்க் ப்ரேக்ஸ்

    Mahindra Thar Roxx interiors

    • ஆட்டோ-LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ரண்ட் LED ஃபாக் லைட்டுகள் உள்ளிட்ட ஸ்டைலான அம்சங்களுடன் தார் ராக்ஸ் தனித்து நிற்கிறது. இதற்கு நேர்மாறாக, குர்கா ஏர் இன்டேக் ஸ்னார்க்கல்  மற்றும் ரூஃப் கேரியர் போன்ற அம்சங்களுடன் ஆஃப்-ரோடு நடைமுறைத்தன்மையை வலியுறுத்துகிறது,.

    • தார் ராக்ஸ் அதன் டூயல்-டோன் டாஷ்போர்டு, வெள்ளை நிற லெதரெட் சீட்கள் மற்றும் சுற்றுப்புற ஃபுட்வெல் லைட்டிங் ஆகியவற்றுடன் அதிக பிரீமியம் உட்புற-கேபின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, குர்கா ஆறு பேர் அமரக்கூடிய இட வசதியை அளித்தாலும், முழுக்க முழுக்க கருப்பு டாஷ்போர்டு மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் அதன் பயன்மிக்க முக்கிய அம்சத்தை பராமரிக்கிறது.

    Force Gurkha 5 door cabin

    • தார் ரோக்ஸ் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், காற்றோட்டமான முன் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் வசதிகளைக் கொண்டுள்ளது. குர்காவுடன் ஒப்பிடுகையில், இது ஒரு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 9-இன்ச் டச்ஸ்கிரீனை அதன் முதன்மை பிரீமியம் அம்சங்களாகக் கொண்டுள்ளது.

    • இரண்டு எஸ்யூவி-க்களும் பயணிகளுக்கான அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன, இருந்தபோதிலும், தார் ரோக்ஸ் ஆனது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உடன் கூடுதல் பாதுகாப்பிற்காக அதன் பாதுகாப்பு தொகுப்பை மேம்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: 5-டோர் Mahindra Thar Roxx வேரியன்ட் வாரியாக அதன் வசதிகள் விளக்கப்பட்டுள்ளன

    எதைத் தேர்ந்தெடுப்பது?

    Mahindra Thar Roxx rear

    மஹிந்திரா தார் ரோக்ஸ் மற்றும் 5-டோர் ஃபோர்ஸ் குர்கா இடையேயான தேர்வு உங்கள் முன்னுரிமைகளைப் பொறுத்தது. சிறந்த ஆஃப்-ரோடு திறன்கள் மற்றும் பலவிதமான பிரீமியம் அம்சங்களுடன் கூடிய பல்துறை எஸ்யூவியை நீங்கள் விரும்பினால், தார் ரோக்ஸ் தனித்து நிற்கிறது. இது மேம்பட்ட தொழில்நுட்பம், ஆடம்பரமான உட்புறம் மற்றும் பல டிரைவ் டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது, இருப்பினும் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.

    Force Gurkha 5 door rear

    மறுபுறம், அத்தியாவசிய அம்சங்கள் மற்றும் மிகவும் மலிவு விலையுடன் கரடுமுரடான, பாரம்பரிய ஆஃப்-ரோடரை நீங்கள் விரும்பினால், 5-டோர் ஃபோர்ஸ் குர்கா சிறந்த தேர்வாக இருக்கும். இது தார் ரோக்ஸில் இருக்கும் சில மேம்பட்ட அம்சங்களை வழங்கவில்லை என்றாலும், இது வலுவான ஆஃப்-ரோடு செயல்திறன் மற்றும் நடைமுறைத்தன்மையை பெற்று ஒரு சிறந்த ஆஃப்-ரோடராக தனித்து நிற்கிறது.

    இந்த இரண்டு எஸ்யூவி-களில் எதை உங்கள் கேரேஜில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? கீழே உள்ள கருத்துகளில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

    மேலும் படிக்க: Mahindra Thar ROXX-இன் ஆன்ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Mahindra தார் ROXX

    1 கருத்தை
    1
    G
    ganeshram
    Aug 19, 2024, 4:16:31 PM

    THAR ROXX 4X4 will not sell in huge numbers .I expect a pricing of ₹ 23.99 lacs all the way to ₹25.99 lacs for automatic . almost ₹9-₹12 lacs extra on the road price as compared to Gurkha

    Read More...
      பதில்
      Write a Reply

      explore similar கார்கள்

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience