• English
  • Login / Register

ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Thar Roxx -ன் சீரியல் நம்பர் 1 கார்

modified on அக்டோபர் 09, 2024 07:18 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கடந்த 2020 ஆம் ஆண்டு தார் 3-டோர் காரின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்ட போது மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் செயல் இயக்குனர் ஆகாஷ் மிண்டா ரூ. 1.11 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார்.

Mahindra Thar Roxx

  • பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான நந்தி அறக்கட்டளைக்கு ஏலத்தில் வருமானம் வழங்கப்படும்.

  • ஆகாஷ் மிண்டா, தார் ரோக்ஸின் நெபுலா ப்ளூ கலரை தேர்ந்தெடுத்தார்.

  • தார் ராக்ஸ்ஸின் இந்த குறிப்பிட்ட யூனிட்டில் ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பம் அடங்கிய பேட்ஜுடன் ‘VIN 0001’ சிம்பல் உள்ளது.

  • ஏலம் விடப்பட்ட யூனிட் டாப்-ஸ்பெக் AX7 L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD (4-வீல்-டிரைவ்) வேரியன்ட் ஆகும்.

  • இது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் இணைக்கப்பட்ட 175 PS 2.2-லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது.

  • தார் ராக்ஸ்ஸின் விலைகள் ரூ. 12.99 லட்சம் முதல் ரூ. 20.49 லட்சம் வரை (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா, RWDக்கு மட்டும்)

கடந்த 2020 இல் 3-டோர் மாடலுக்கு ஏலம் விடப்பட்ட போது அது 1.31 கோடி ரூபாய்க்கு நிறைவடைந்தது . அதை போலவே இப்போது மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் முதல் யூனிட் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 16 வரை ஏலம் விடப்பட்டது. இதில் மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் செயல் இயக்குனர் ஆகாஷ் மிண்டா ஏலத்தில் வெற்றி பெற்றார். மஹிந்திரா இப்போது தார் ராக்ஸ்ஸின் முதல் யூனிட்டை வெற்றியாளருக்கு வழங்கியுள்ளது. மிண்டா 2020 ஆம் ஆண்டில் முதல் 3-டோர் மஹிந்திரா தாரைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவர் ரூ 1.11 கோடிக்கு வாங்கினார். 

ஏலத்தொகை நந்தி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது

ஏலத்தில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரட்டப்பட்ட நிதி, பெண்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பான நந்தி அறக்கட்டளைக்கு முழுத் தொகையும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: மஹிந்திரா தார் ராக்ஸ் ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது

VIN 0001 தார் ராக்ஸ் -ன் சிறப்புகள்

5 Door Mahindra Thar Roxx

மஹிந்திரா தார் ராக்ஸ்ஸின் டாப்-ஸ்பெக் AX7 L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD வேரியன்ட்டை ஏலத்தில் விட்டது. தார் ராக்ஸ்ஸின் இந்த யூனிட்டில் = 'VIN 0001' சிம்பல் உள்ளது மற்றும் ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் கூடிய பிரத்யேக பேட்ஜும் கொண்டுள்ளது. ஆகாஷ் மிண்டா, தார் ரோக்ஸின் நெபுலா ப்ளூ நிறத்தைத் தேர்ந்தெடுத்தார்.

“2020 ஆம் ஆண்டில் முதல் தார் காரை பெற்றேன் அதைத் தொடர்ந்து  2024 ஆம் ஆண்டில் முதன்முதலில் தார் ராக்ஸையும் இப்போது வாங்கியுள்ளேன். இது தார் எஸ்யூவி மரபுக்கான எனது தொடர்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த தருணத்தை இன்னும் சிறப்பானதாக்குவது என்னவென்றால், இது மனிதநேயம் சார்ந்த ஒரு முன்முயற்சி மற்றும் நிகழ்வின் மூலம் கிடைக்கும் வருமானம் சமூக நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. மஹிந்திராவின் குறிப்பிடத்தக்க பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது நம்பமுடியாத உணர்வு, இது தார் பரிணாம வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது” என இது குறித்து ஆகாஷ் மிண்டா தெரிவித்துள்ளார்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

5 Door Mahindra Thar Roxx Interior

இது இரட்டை 10.25-இன்ச் திரைகள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே), ஆட்டோ ஏசி, காற்றோட்டமான முன் இருக்கைகள், 6 வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழுமையான தொகுப்பு ஆகியவை உள்ளன.

பவர்டிரெய்ன் விவரங்கள்

தார் ராக்ஸ் -ன் VIN 0001 யூனிட்டில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. விரிவான விவரங்கள்:

விவரங்கள்

மஹிந்திரா தார்  ராக்ஸ்

இன்ஜின்

2.2 லிட்டர் டீசல்

பவர்

175 PS 

டார்க்

370 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு ஏடி

டிரைவ் டைப்

4WD

*AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

^4WD - 4-வீல் டிரைவ்

தார் ராக்ஸ் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் மேனுவல் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Thar Roxx க்கான விரிவான பவர்டிரெய்ன் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

2.2 லிட்டர் டீசல்

பவர்

162 PS (MT)/ 177 PS (AT)

152 PS (MT)/ 175 PS வரை (AT)

டார்க்

330 Nm (MT)/ 380 Nm (AT)

330 Nm (MT)/ 370 Nm வரை (AT)

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT^

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

டிரைவ் டைப்

RWD^

RWD^/ 4WD

^RWD - ரியர் வீல் டிரைவ்

விலை & போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 12.99 லட்சத்தில் இருந்து ரூ. 20.49 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. தார் ராக்ஸ்ஸின் 4WD வேரியன்ட்களுக்கான விலை விவரங்களை மஹிந்திரா இன்னும் அறிவிக்கவில்லை. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் மற்றும் மாருதி ஜிம்னி ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: தார் ROXX டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra தார் ROXX

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience