1 மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அ திகமான முன்பதிவுகளை பெற்றது Mahindra Thar Roxx
published on அக்டோபர் 03, 2024 06:34 pm by anonymous for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதிகாரப்பூர்வ முன்பதிவு அக்டோபர் 11 மணி முதல் தொடங்கியது. ஆனால் பல டீலர்ஷிப்கள் ஆஃப்லைன் முன்பதிவுகளை சிறிது காலத்துக்கு முன்னரே எடுக்கத் தொடங்கின.
-
மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் காரை ரூ.12.99 லட்சம் முதல் ரூ.22.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியது.
-
தார் ராக்ஸ் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 1,76,218 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இதில் டீலர் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளும் அடங்கும்.
-
தார் ராக்ஸ் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் வழங்கப்படுகிறது.
-
இந்த கார் 4 வீல் டிரைவ் டிரெய்ன் ஆப்ஷன் டீசல் பவர்டிரெய்னுடன் மட்டுமே கிடைக்கும்.
5-டோர் தார் ராக்ஸ் காருக்கான முன் பதிவுகள் சமீபத்தில் தொடங்கியது. மேலும் இந்தியாவில் முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் 1,76,218 முன்பதிவுகளை ஏற்கனவே பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல டீலர்ஷிப்கள் ஏற்கனவே ஆஃப்-ரோடருக்கான ஆஃப்லைன் முன்பதிவுகளை சிறிது காலத்திற்கு முன்னரே எடுக்கத் தொடங்கின. தார் ராக்ஸின் விரைவான பார்வை இங்கே உள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ் வசதிகள்
தார் ராக்ஸ் காரில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவை உள்ளன.
பாதுகாப்புக்காக இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), EBD உடன் ABS, 360-டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், மற்றும் அட்டானம்ஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் படிக்க: மஹிந்திரா கருத்துகளைக் கேட்கிறது, தார் ராக்ஸ் இப்போது டார்க் பிரவுன் கேபின் தீம்களுடன் கிடைக்கிறது
மஹிந்திரா தார் ராக்ஸ் இன்ஜின் ஆப்ஷன்கள்
தார் ரோக்ஸின் விரிவான பவர்டிரெய்ன் விவரங்கள் இங்கே.
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
162 PS (MT)/177 PS (AT) |
152 PS (MT)/175 PS வரை (AT) |
டார்க் |
330 Nm (MT)/380 Nm (AT) |
330 Nm (MT)/ 370 Nm வரை (AT) |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
RWD/ 4WD |
மஹிந்திரா தார் ராக்ஸ் விலை
மஹிந்திரா தார் ராக்ஸ் அதன் ரியர் வீல் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு வேரியன்ட்களையும் சேர்த்து ரூ.12.99 லட்சம் முதல் ரூ.22.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் மாருதி சுஸூகி ஜிம்னி -க்கு ஒரு பெரிய ஆப்ஷனாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: தார் ராக்ஸ் டீசல்