Mahindra Thar Roxx இன்டீரியர் விவரங்களோடு முதல் முறையாக டீசர் வெளியாகியுள்ளது, காரில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது
ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் இந்த கார் வரும்.
-
தார் ரோக்ஸ் கார் வொயிட் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் பிளாக் லெதர் கொண்ட டேஷ்போர்டை கொண்டிருக்கும்.
-
சமீபத்திய டீசரில் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் இல்லை. ஆனால் வென்டிலேட்டட் முன் சீட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் 3-டோர் பதிப்பைப் போலவே 2-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:.
-
வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி இது வெளியிடப்படும். விலை ரூ. 12.99 லட்சத்தில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளது(எக்ஸ்-ஷோரூம்).
மஹிந்திரா தார் 5-டோர் காருக்கு மஹிந்திரா தார் ரோக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும் கார் தயாரிப்பாளர் சிறிது காலமாக ஆஃப்-ரோடரை டீஸர் செய்து வருகிறார். தார் ரோக்ஸ் இன் சமீபத்திய டீஸர் முதல் முறையாக அதன் இன்ட்டீரியரை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. தார் காரில் மேலும் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தார் ரோக்ஸின் கேபின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே.
டீஸர் மூலமாக தெரிய வரும் விவரங்கள்
இந்த டீசரில் இருந்து பெரிய தார் கேபின் தீம் பற்றிய ஒரு பார்வை கிடைக்கிறது. இது டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. சீட்கள் வொயிட் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியால் கவர் செய்யப்பட்டிருக்கும். மேலும் டாஷ்போர்டில் கான்ட்ராஸ்டிங் காப்பர் ஸ்டிச்களுடன் பிளாக் லெதரெட் பேடிங்கால் கவர் செய்யப்பட்டிருக்கும்.
தார் ரோக்ஸ் ஆனது ஒரு பனோரமிக் சன்ரூஃப் பெறும் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், டீஸர் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (இரண்டும் 10.25-இன்ச் யூனிட்கள்) மற்றும் சிங்கிள்-ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட்க் கன்ட்ரோல் ஆகியவையும் இந்த காரில் கிடைக்கும். மஹிந்திரா ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டத்தையும் டீஸர் செய்துள்ளது, மேலும் தார் ரோக்ஸ் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற விஷயங்களை XUV700 காரில் இருந்து இது பெறக்கூடும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்
தற்போதைய 3-டோர் தாரில் இருப்பதை போன்ற 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தார் ராக்ஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது: இருப்பினும் இந்த இன்ஜின்கள் சற்று மாறுபட்ட அவுட்புட்டை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 5 டோர் மஹிந்திரா தார் ரோக்ஸ் தார் காரில் இந்த 10 வசதிகளை அறிமுகப்படுத்தும்
மேலும் இது 3-டோர் பதிப்பைப் போலவே ரியர் வீல் டிரைவ் (RWD), மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் வரும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ரோக்ஸ் விலை ரூ. 12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா -வுக்கு ஒரு போட்டியாக இருக்கும். மேலும் இது மாருதி ஜிம்னி -க்கு மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்