• English
  • Login / Register

ஆகஸ்ட் 15 அன்று அறிமுகமாகவுள்ள மஹிந்திரா தார் 5-டோர் கார் புதிதாக 3 ஷேடுகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on ஜூலை 12, 2024 04:40 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 67 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தார் 5-டோர் வொயிட், பிளாக் மற்றும் ரெட் எக்ஸ்ட்டீரியர் ஷேடுகளில் இருந்தது. இந்த கலர்கள் அனைத்தும் ஏற்கனவே அதன் 3-டோர் காரில் கிடைக்கின்றன.

  • 3-டோர் மாடலில் வழங்கப்படும் 5-டோர் கேலக்ஸி கிரே மற்றும் அக்வாமரைன் எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்களுடன் வரலாம்.

  • மஹிந்திரா தார் 5-டோர் காரை டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், டூயல் ஜோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வழங்க முடியும்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்படலாம்.

  • 3-டோர் தார் உடன் வழங்கப்படும் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

  • ஆகஸ்ட் அறிமுகத்திற்குப் பிறகு வெளியீடு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது; ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை இருக்கலாம்.

மஹிந்திரா தார் 5-டோர் ஆனது மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாகும். மேலும் இது கடந்த 2 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. தார் 5-டோர் 2024 சுதந்திர தினத்தன்று அறிமுகமாக உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக தார் 5-டோர் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கார் மூன்று புதிய எக்ஸ்ட்டீரியர் வண்ணங்களில் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது.

3-டோர் மாடலை போன்று 3 ஷேடுகளை பெறலாம்

எஸ்யூவி -யின் எக்ஸ்டீரியர் இன்னும் முழுவதுமான மறைக்கப்பட்டிருந்தாலும் கூட பி-பில்லர் மற்றும் கீழ் பக்க பாடி பேனல்களை சுற்றி பாடி பெயின்ட் ஓரளவு தெரிந்தது. மூன்று சோதனைக் கார்கள் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் வொயிட், ரெட் மற்றும் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடுகளில் ஃபினிஷ் செய்யப்பட்டவையாக இருந்தன. அவை தார் 3-டோர் காரில் கிடைப்பதைப் போலவே இருக்கின்றன. இந்த வண்ணங்களுக்கு கூடுதலாக தார் 5-டோர் ஆனது தற்போதுள்ள 3-டோர் மாடலை போலவே கேலக்ஸி கிரே மற்றும் அக்வாமரைன் எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஸ்கீம் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம். 

மூன்றாவது வரிசை சீட்கள் தவிர தார் 5-டோர் புதிய கிரில் வடிவமைப்பையும், வெளிப்புறத்தில் அப்டேட்டட் அலாய் வீல்களையும் பெறலாம். உட்புறத்தில் இது ஒரே மாதிரியான டேஷ்போர்டை பெறும். ஆனால் வேறுபட்ட தீம் மற்றும் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மேலும் பார்க்க: ஃபேஸ்லிப்டட் Tata Punch மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரில் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் யூனிட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

5-door Mahindra Thar Cabin

5-டோர் தார் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் (ஒருவேளை 10.25 இன்ச் ஆக இருக்கலாம்), அதே அளவிலான டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஜோன் ஏசி உள்ளிட்ட வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் இருக்கலாம். கூடுதலாக இது 360 டிகிரி கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் சில முந்தைய ஸ்பை ஷாட்கள் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இன்ஜின் ஆப்ஷன்கள்

தார் 5-டோர் வழக்கமான தார் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக ட்யூன் செய்யப்பட்ட நிலையில் இருக்கலாம். ஆப்ஷன்களில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை கொடுக்கப்படலாம். ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஃபோர் வீல் டிரைவ் (4WD) அமைப்புடன் இரண்டு ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா தார் 5-டோரின் விலை ரூ.15 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் -க்கு க்கு இது நேரடி போட்டியாக இருக்கும். ஒரு மாருதி ஜிம்னி பெரிய அளவிலான மாற்றாக இருக்கும்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலைப் ஃபாலோ செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்

பட ஆதாரம்

மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra தார் ROXX

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience