ஃபேஸ்லிப்டட் Tata Punch மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரில் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் யூனிட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது
modified on ஜூலை 12, 2024 04:27 pm by dipan for டாடா பன்ச் 2025
- 59 Views
- ஒரு கருத்தை எழுதுக
2025 ஆண்டு சுமார் ரூ. 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் டாடா பன்ச் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா பன்ச் 2021 ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆகவே ஒரு இதற்கு மிக விரைவில் ஒரு அப்டேட் கொடுக்கப்படவுள்ளது.
-
புதிய கிரில், ஹெட்லைட் செட்டப் மற்றும் அலாய் வீல்கள் போன்ற புதிய வடிவிலான பாகங்களை பெற வாய்ப்புள்ளது.
-
ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு வடிவமைப்பு தற்போதைய பன்ச் போலவே இருக்கும்.
-
இது ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது தற்போதைய பன்ச் -ல் உள்ள 1.2-லிட்டர் இன்ஜின் (88 PS/115 Nm) கொடுக்கப்படலாம்.
டாடா பன்ச் 2021 ஆண்டு விற்பனைக்கு வந்தது. அதன் பின்னர் ஒரு அப்டேட் அந்த காருக்கு கொடுக்கப்படவில்லை. இப்போது அப்டேட் செய்யப்பட்ட இந்த மைக்ரோ-எஸ்யூவி -யின் ஃபேஸ்லிஃப்ட் 2025 ஆம் ஆண்டில் வெளியாக தயாராக உள்ளது. மேலும் இப்போது ஃபேஸ்லிஃப்ட் டாடா பன்ச் கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது படம் பிடிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இன்ட்டீரியர்களின் பற்றிய பார்வையை நமக்கு கொடுக்கின்றன.
தெரிய வரும் விவரங்கள்
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட்டின் அப்டேட் செய்யப்பட்ட உட்புறம் டாடா பன்ச் EV -யில் இருக்கும் அதே 10.25-இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொண்டுள்ளது. கியர் லீவருக்கு அருகில் டிரைவ் மோட் பட்டனும் இருந்தது. இது டாடா ஆல்ட்ரோஸில் உள்ளதை போன்றது. அதுமட்டுமல்லாமல் சோதனை கார் அதே ஸ்டீயரிங் மற்றும் அதே வொயிட் மற்றும் பிளாக் இன்ட்டீரியரை கொண்டுள்ளது. இருப்பினும் இது பன்ச் EV உட்பட சமீபத்திய டாடா காரிலிருந்து புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் கடன் வாங்கலாம்.
எதிர்பார்க்கப்படும் வெளிப்புற மாற்றங்கள் மற்றும் வசதிகள்
பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் பன்ச் EV போன்றே புதிய வடிவிலான கிரில் மற்றும் அப்டேட்டட் ஹெட்லைட் செட்டப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வடிவிலான 16-இன்ச் அலாய் வீல்களையும் இது பெறும். இருப்பினும் டெயில்லைட்ஸ், சமீபத்திய சோதனைக் காரில் காணப்படுவது போல், பிரீ-பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்து கொண்டு செல்லப்படலாம்.
பன்ச் EV இன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 2025 பன்ச் 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் கொண்டிருக்கலாம். பாதுகாப்பு வலையில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்புடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகியவை இருக்கலாம்.
அதே பவர்டிரெய்ன் கொடுக்கப்படலாம்
2025 டாடா பன்ச் தற்போதைய-ஸ்பெக் மாடலில் இருந்து 88 PS மற்றும் 115 Nm உற்பத்தி செய்யும் அதே 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே இன்ஜினை CNG எரிபொருள் ஆப்ஷனுடன் தேர்வு செய்யலாம். இது 73.5 PS மற்றும் 103 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. தற்போது சிஎன்ஜி பவர்டிரெய்ன் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட்டுடன் டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி -யில் உள்ளதை போல AMT கியர்பாக்ஸை டாடா அறிமுகப்படுத்தலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா பன்ச் சுமார் ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் மாருதி இக்னிஸ் உடன் தொடர்ந்து போட்டியிடும். மேலும் இதே போன்ற விலையில் கிடைக்கும் மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டெய்சர், சிட்ரோன் சி3, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
வாகன உலகில் நடப்பவை பற்றி உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் AMT