ஆகஸ்ட் 15 அறிமுகத்திற்கு முன்னதாக Mahindra Thar 5-டோர் காரின் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன
360 டிகிரி கேமரா மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகள் தார் 5-டோர் காரில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-
தார் 5-டோர் புதிய 6-ஸ்லேட் கிரில் மற்றும் வட்ட வடிவ LED DRL -களுடன் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களை பெறும்.
-
டூயல் 10.25-இன்ச் ஸ்கிரின்கள் மற்றும் டூயல் ஜோன் ஏசி போன்ற வசதிகளைப் பெறலாம்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ADAS ஆகிய வசதிகள் அடங்கும்.
-
3-டோர் தார் உடன் வழங்கப்படும் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
-
ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா தார் 5-டோர் இந்திய வாகன தயாரிப்பாளரான மஹிந்திராவின் அடுத்த முக்கியமான கார் வெளியீடு ஆகும். எஸ்யூவி பலமுறை சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தார் 5-டோர் காரின் மறைக்கப்படாத புதிய படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. இதன் மூலம் முதன்முறையாக அதன் முன்பக்கம் மற்றும் எஸ்யூவி -யின் பக்கவாட்டு தோற்றம் ஆகிய விவரங்கள் தெரிய வந்துள்ளன. இந்த வருடம் சுதந்திர தினத்தன்று, அதாவது ஆகஸ்ட் 15, 2024 அன்று இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிய கிரில் வடிவமைப்பு மற்றும் வசதிகளின் விவரங்கள் தெரிய வருகின்றன
அதன் 3-டோர் பதிப்போடு ஒப்பிடும்போது தார் 5-டோர் காரில் உள்ள முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட புதிய 6-ஸ்லாட் கிரில் ஆகும். மற்றொரு புதிய வசதி ஹெட்லைட்கள் ஆகும். இது வழக்கமான தாரில் இருப்பது போல இல்ல்லாமல் LED ப்ரொஜெக்டர் அமைப்புகளாகத் தோன்றும் மற்றும் வட்ட LED DRL களை ஒருங்கிணைக்கிறது. எவ்வாறாயினும் இண்டிகேட்டர் மற்றும் ஃபாக் லைட்ஸ் -களின் அமைப்பு 3-டோர் பதிப்பில் உள்ளதைப் போலவே உள்ளது. முன்பு வெளியான படங்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை பற்றிய ஒரு பார்வையும் எங்களுக்கு கிடைத்தது.
பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது தார் 5-டோர் வழக்கமான தார் போன்ற அதே பாக்ஸி வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும் அதன் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இரண்டு-டோர்கள் கூடுதலாக இருப்பதால் இப்போது கார் பெரிதாகத் தெரிகிறது. இது சி-பில்லர் பொருத்தப்பட்ட பின்புற டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது, மேலும் படத்தில் தார் 5-டோர் காரில் உள்ள ORVM கேமராவு இருப்பது தெரிந்தது. இது 360 டிகிரி செட்டப்பை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக உட்புறமானது ஒரு பனோரமிக் சன்ரூஃபை கொண்டிருக்கும், இருக்கைகள் பீஜ் அப்ஹோல்ஸ்டரியில் ஃபினிஷ் உள்ளது.
மேலும் பார்க்க: மஹிந்திரா நிறுவனம் 2024 ஜூன் மாதத்தில் பெட்ரோல் கார்களில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே விற்பனை செய்துள்ளது
எதிர்பார்க்கப்படும் பிற வசதிகள்
மஹிந்திரா தார் 5-கதவை 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-ஜோன் ஏசி போன்ற வசதிகளுடன் கொடுக்கப்படலாம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் வரை இருக்கலாம். கூடுதலாக இது அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளையும் கொண்டிருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள் ஆப்ஷன்கள்
தார் 5-டோர் வழக்கமான தார் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்தும். ஆனால் பவர் அவுட்புட் அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம். இந்த ஆப்ஷன்களில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4 வீல் டிரைவ் (4WD) என இரண்டு செட்டப்களில் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் 5-டோர் ஆகஸ்ட் 15, 2024 அன்று அறிமுகமான சிறிது நேரத்திலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா இதன் விலையை ரூ. 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யலாம். இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் உடன் போட்டியிடும். மேலும் மாருதி ஜிம்னி காருக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்
shreyash
- 31 பார்வைகள்