சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra Thar 5-டோர் காருக்காக காத்திருக்கலாமா அல்லது வேறு காரை வாங்கலாமா: மஹிந்திராவின் புதிய ஆஃப்-ரோடர் காத்திருப்புக்கு மதிப்புள்ளதாக இருக்குமா?

published on ஜூலை 02, 2024 03:56 pm by ansh for மஹிந்திரா தார் 5-door

இந்திய கார் சந்தையில் ஏற்கனவே போதுமான ஆஃப்ரோடர்கள் இருக்கின்றன. என்றாலும் கூட தார் 5-டோர் காரில் கூடுதலாக நடைமுறை மற்றும் வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அது காத்திருப்புக்கு தகுதியானதாக இருக்குமா?

5-டோர் மஹிந்திரா தார் நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் அறிமுகமாக தயாராக உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகத்தை தொடர்ந்து கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முன்பதிவுகள் அதன் வெளியீட்டிற்கு சில நாள்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதே சமயம் 5-டோர் தார் காருக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது சந்தையில் ஏற்கனவே சிறந்த கார்கள் இருக்கின்றனவா?. நல்ல ஆஃப்-ரோடு திறன்கள், நல்ல சாலை தோற்றம், சிறந்த வசதிகள் மற்றும் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்கக்கூடிய மற்ற கார்களும் சந்தையில் உள்ளன . எனவே நீங்கள் அதன் போட்டியாளர்களில் ஒன்றை வாங்க வேண்டுமா அல்லது 5-டோர் தாருக்காக காத்திருக்க வேண்டுமா? நாம் கண்டுபிடிக்கலாம்.

மாடல்

எக்ஸ்-ஷோரூம் விலை

5-டோர் மஹிந்திரா தார்

ரூ 15 லட்சம் (எதிர்பார்க்கப்படுகிறது)

மஹிந்திரா தார்

ரூ.11.35 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம்

மாருதி ஜிம்னி

ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம்

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர்

ரூ.18 லட்சம்

மஹிந்திரா ஸ்கார்பியோ N

ரூ.13.85 லட்சம் முதல் ரூ.24.54 லட்சம்

மஹிந்திரா தார்: ஆஃப்-ரோடு திறன்கள் மற்றும் குறைவான விலை ஆகியவற்றுக்காக வாங்கலாம்

தற்போதைய புதிய தார் அதன் 3-டோர் பதிப்பில் கூட சிறந்த சாலை தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும் இது நல்ல ஆஃப்-ரோடு திறன்களுடன் வருகிறது. நீங்கள் ஒரு நல்ல ஆஃப்-ரோடரை தேடுகிறீர்களானால், இரண்டாவது வரிசையில் குறைவான லெக் ரூம் இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் 3-டோர் தார் ஒரு உங்களுக்கு ஏற்ற காராக இருக்கலாம். இது மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, ஓரளவுக்கு சிறப்பான வசதிகளின் பட்டியலைக் கொண்டுள்ளது, மேலும் ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப்கள் என இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை கூட நீங்கள் தேர்வு செய்யலாம். 5-டோர் தார் (ரூ. 15 லட்சம் எக்ஸ்-ஷோரூம்) அறிமுகமாகும் போது எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது இது குறைந்த விலையில் கிடைக்கிறது.

மாருதி ஜிம்னி: காம்பாக்ட் ஃபார்ம் ஃபேக்டர், வசதி, நம்பகத்தன்மை, நல்ல சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் வசதியான சவாரிக்காக வாங்கலாம்

சிட்டி டிரைவ்களுக்கும் சாகசங்களுக்கும் இடையே நல்ல சமநிலையை நீங்கள் தேடுகிறீர்களா ? மாருதி ஜிம்னி உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஆஃப்-ரோடரின் காம்பாக்ட் ஃபார்ம் ஃபேக்டர் நகர பயன்பாட்டிற்கு ஏற்ற காராக இதை மாற்றுகிறது, மேலும் அதன் பவர் ட்ரெய்ன் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப் ஆனது ஆஃப்-ரோடிங்கிற்கு ஏற்றதாக அமைகிறது. இது தாரை விட சிறந்த சவாரி தரத்தையும் கொண்டுள்ளது. இது நகர பயணங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வசதியாகவும் இருக்கிறது. மேலும் பின்பக்க டோர்கள் இருப்பது சற்று வசதியையும் பின் இருக்கைகளில் கூடுதல் லெக் ரூமையும் சேர்க்கிறது. இது டிரைவிங் செய்பவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

மேலும் படிக்க: மாருதி செலிரியோ -வின் விலையில் உங்களுக்கு தேர்வு செய்ய கிடைக்கும் 5 கார்கள்

இது ஒரு மாருதி நிறுவனத்தின் மாடல். ஆகவே இது மக்களிடையே நம்பகத்தன்மை என்ற மதிப்பை பெற்றுள்ளது. மேலும் மாருதியின் பரவலான சர்வீஸ் நெட்வொர்க் காரணமாக இதை பராமரிப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.

ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர்: பெரிய அளவு மற்றும் 6 இருக்கைகள் கொண்ட அமைப்பு ஆகியவற்றுக்காக வாங்கலாம்

நீங்கள் ஜிம்னி போன்ற கச்சிதமான ஆஃப்-ரோடரை தேடவில்லை என்றால், பெரிய மற்றும் நல்ல சாலை தோற்றத்தை கொண்டுள்ள கார் உங்கள் தேவையாக இருந்தால் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடும். இந்த பெரிய பதிப்பு கூர்க்கா இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது 4 வீல் டிரைவ் செட்டப் உடன் அதே டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. முக்கியமாக தேவைப்படும் அடிப்படையான வசதிகள் மட்டுமே இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சாகசங்களுக்கு ஆஃப்-ரோடரை விரும்பும் நபருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மேலும், 5-டோர் பதிப்பு 6-இருக்கை அமைப்பில் வருகிறது. இது ஒரு பெரிய குடும்பம் உள்ளவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இது அதன் போட்டியாளர்கள் எதிலும் கிடைக்காது.

மஹிந்திரா ஸ்கார்பியோ N 4X4: நவீன தோற்றம், பிரீமியம் கேபின், நல்ல வசதிகள், 7-சீட்டர் லேஅவுட் மற்றும் ஆஃப்-ரோடு திறன்களுக்காக வாங்கலாம்

இது நகர்ப்புறத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கானது, காரணம் அவர்கள்தான் சாலையில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். மஹிந்திரா ஸ்கார்பியோ N இது ஒரு பிரீமியம் எஸ்யூவி ஆகும். அதே சமயம் இது சில ஆஃப்-ரோடிங் திறன்களையும் கொண்டுள்ளது. இது உங்களுக்கு நவீன மற்றும் முரட்டுத்தனமான தோற்றம், பிரீமியம் மற்றும் ப்ளஷ் கேபின், 8 இன்ச் டச் ஸ்கிரீன், சன்ரூஃப் மற்றும் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக்ட் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற நல்ல வசதிகளைப் பெறும். இது ஒரு பெரிய குடும்பத்திற்கான சரியான கார் ஆகும், ஏனெனில் இது 6- மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் தேவையான அனைத்து விஷயங்களுடனும் வருகிறது. மேலும் நீங்கள் வழக்கமான சாலையில் இருந்து ஆஃப் ரோடுக்கு விரும்பினால் இதன் பவர்டிரெய்ன் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப் அதைச் சாத்தியமாக்கும்.

மஹிந்திரா தார் 5-டோர்: மிகச் சிறப்பான சாலை தோற்றம், அதிக இடம் மற்றும் சிறந்த வசதிகளுக்காக வாங்கலாம்

மேற்கூறிய மாடல்கள் எதுவும் உங்கள் தேவைகளுக்குப் பொருந்தவில்லை என்றாலோ, வழக்கமான 'தார்' காரணிக்காக காத்திருக்கும் நேரத்தை மாற்ற நீங்கள் தயாராக இருந்தாலோ மஹிந்திரா தார் 5-டோர் காரின் அறிமுகத்துக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும். நீளமான தார் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும். அதன் சாலை தோற்றதை தவிர, அதன் தற்போதைய 3-டோர் பதிப்பின் அதே பவர்டிரெய்னை இது வழங்கும். மேலும் இது பின்புற இருக்கை பயணிகளுக்கு சிறந்த இடவசதி சன்ரூஃப், மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் போன்ற புதிய வசதிகளுடன் வரும். இது ரியர்-வீல்-டிரைவ் மற்றும் நான்கு-வீல்-டிரைவ் அமைப்புகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரப் பயணங்களுக்கும் ஆஃப்-ரோடிங்கிற்கும் ஏற்றதாக அமைகிறது.

மேலும் பார்க்க: பாருங்கள்: மஹிந்திரா XUV400 மற்றும் டாடா நெக்ஸான் EV: எந்த EV இன்க்லைன் சோதனையில் சிறப்பாகச் செயல்படும்?

இப்போது, ​​உங்கள் அடுத்த காராக போட்டியாளர்களில் யாரையாவது தேர்ந்தெடுப்பீர்களா அல்லது 5-டோர் தாருக்காக இன்னும் காத்திருப்பீர்களா? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிரிந்து கொள்ளுங்கள்.

வாகன உலகில் நடக்கும் விஷயங்கள் தொடர்பாக உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேகோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்ட்

a
வெளியிட்டவர்

ansh

  • 24 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மஹிந்திரா தார் 5-Door

Read Full News

explore similar கார்கள்

மாருதி ஜிம்னி

Rs.12.74 - 14.95 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்16.94 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூலை சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா தார்

Rs.11.35 - 17.60 லட்சம்* get சாலை விலை
டீசல்15.2 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூலை சலுகைகள்ஐ காண்க

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.90 - 20.35 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.99 - 15.75 லட்சம்*
Rs.10.89 - 18.79 லட்சம்*
Rs.9.49 - 10.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை