சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

தென் ஆப்ரிக்கா -வில் Mahindra Scorpio N Adventure எடிஷன், ஆஃப்-ரோடிங்கிற்கான மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

mahindra scorpio n க்காக மே 20, 2024 07:25 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஸ்கார்பியோ N அட்வென்ச்சர் காரின் வெளிப்புறத்தில் சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மிரட்டலான தோற்றத்துடன் இருக்கிறது.

  • ஸ்கார்பியோ N அட்வென்ச்சர் எஸ்யூவியின் Z8 டிரிம் ஹார்வேர் 4x4 செட்டப் உடன் வருகின்றது.

  • இது புதிய ஸ்டீல் பம்ப்பர்கள், ரூஃப் ரேக், உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ஆஃப்-ரோட் டயர்களுடன் வருகிறது.

  • கேபினில் வழக்கமான மாடலின் அதே தீம் உள்ளது.

  • SUV ஆனது 8 அங்குல டச் ஸ்கிரீன், டூயல் ஜோன் கிளைமேட் ஏசி மற்றும் 6 ஏர்பேக்குகளை பெறுகிறது.

  • ஒரே ஒரு 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் (175 PS/400 Nm) 6-ஸ்பீடு AT உடன் மட்டுமே இது கிடைக்கும்.

  • ஸ்கார்பியோ N அட்வென்ச்சரின் விலை R644,499 (INR மதிப்பில் ரூ. 29.59 லட்சம்) ஆக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டு நடந்த நம்போ ஹார்வெஸ்ட் டே நிகழ்வில் மஹிந்திரா பல புதிய மாடல்களை காட்சிக்கு வைத்தது. அப்போது மஹிந்திரா தென்னாப்பிரிக்காவில் அதன் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி -க்காக மஹிந்திரா ஸ்கார்பியோ N அட்வென்ச்சர் என்ற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியது. இதன்விலை R644,499 (தோராயமாக ரூ. 29.59 லட்சம்) ஆகும். இந்த நிகழ்வு ரெயின்போ நேஷனில் மஹிந்திரா கார்களின் 20 -வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்தது.

ஸ்கார்பியோ N அட்வென்ச்சர் காரின் விவரங்கள்

எஸ்யூவி -யின் முரட்டுத்தனமான ஸ்பெஷல் எடிஷன் தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் ஸ்கார்பியோ N -ன் ரேஞ்ச்-டாப்பிங் Z8 டிரிமில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதில் 4x4 ஹார்ட்வேர் உள்ளது. இது வழக்கமான மாடலை விட பல காஸ்மெட்டிக் அப்டேட்களை கொண்டுள்ளது. இதில் முன்பக்கம் டோ பார் உடன் கூடிய கூடிய ஸ்டீல் பம்ப்பர்கள் மற்றும் ஆஃப்ரோடு -க்கான டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆஃப்-ரோடு -க்கான அண்டர்பாடி பாதுகாப்பு, ஒரு ரூஃப் ரேக், உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட அணுகுமுறை மற்றும் புறப்படும் கோணங்கள், கர்ட்டெஸி புதிய பம்ப்பர்கள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகள் ஆகும்.

அதே கேபின் மற்றும் வசதிகளை பெறுகிறது

மஹிந்திரா சிறப்பு பதிப்பிற்காக ஸ்கார்பியோ N -ன் கேபினில் எந்த மாற்றமும் செய்யவில்லை (மேல்நிலை ஸ்டோரேஜ் ரேக் தவிர). இது அதே டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் ஸ்டாண்டர்டான மாடலில் இருக்கும் ஒரே மாதிரியான வசதிகளையே கொண்டுள்ளது. பட்டியலில் சன்ரூஃப், டூயல் ஜோன் ஏசி, 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை உள்ளன. பாதுகாப்பு -க்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின் பார்க்கிங் கேமரா, டிரைவர் டெரெளவுஸினெஸ் டிடெக்‌ஷன் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஒரே ஒரு பவர்டிரெய்னுடன் மட்டுமே இது கிடைக்கும்

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஸ்கார்பியோ N ஆனது இந்தியா-ஸ்பெக் பதிப்பைப் போலவே 175 PS/400 Nm அவுட்புட்டை கொடுக்கும் சக்திவாய்ந்த 2.2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக விற்கப்படுகிறது ஆனால் 2WD மற்றும் 4WD அமைப்பில் கிடைக்கிறது.

மஹிந்திரா இந்தியா-ஸ்பெக் மாடலை அதே டீசல் இன்ஜினுடன் குறைந்த ட்யூனிலும் (132 PS/300 Nm) வழங்குகிறது, அதே 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 6-ஸ்பீடு MT விருப்பமும் உள்ளது. 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினும் (203 PS/380 Nm வரை) விற்பனையில் உள்ளது மேலும் அதே டிரான்ஸ்மிஷன் செட்களுடன் கிடைக்கிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் விலை R477,199 மற்றும் R644,499, அதாவது இந்திய மதிப்பில் ரூ.21.91 லட்சம் மற்றும் ரூ.29.59 லட்சம் ஆகும். இந்தியாவில் ஸ்கார்பியோ N கார் டாடா ஹாரியர், சஃபாரி மற்றும் ஹூண்டாய் கிரெட்டா/அல்கஸார் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது. இந்தியாவில் மஹிந்திரா வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்கார்பியோ N அட்வென்ச்சர் எடிஷன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் அது நன்றாக இருக்கும், அல்லது குறைந்தபட்சம் தார் காரிலாவது இது கொடுக்கப்பட வேண்டும். கீழே உள்ள கமெண்ட் பகுதியில் இந்த மாற்றியமைக்கப்பட்ட ஸ்கார்பியோ N காரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: ஸ்கார்பியோ N ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra scorpio n

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை