• English
  • Login / Register

மஹிந்திரா நிறுவனம் புதிய தார் 5-டோர் காருக்கு "ஆர்மடா" உள்பட 7 பெயர்களை பதிவு செய்துள்ளது

published on டிசம்பர் 20, 2023 06:06 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 51 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இவற்றில் சில பெயர்கள் தார் சிறப்பு பதிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம். அல்லது வேரியன்ட்களுக்கு (டாடா போன்று) புதிய பெயரிடும் உத்தியை மஹிந்திரா பின்பற்றலாம்.

Mahindra Thar 5 door

மஹிந்திரா தார் 5 டோர் ஒரு வருடத்திற்கும் மேலாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் எஸ்யூவி -களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதை 2024 -ல் வெளியீட மஹிந்திரா திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் எஸ்யூவி சமீபத்தில் உற்பத்திக்கு நெருக்கமான தோற்றத்தில் சோதனை செய்யப்பட்டது. மஹிந்திரா நிறுவனம், தார் 5-டோரின் தயாரிப்பு பதிப்பிற்கான பெயரை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது போல் தெரிகிறது. அதை உறுதிப்படுத்தும் வேரியன்ட்யில் சமீபத்தில் 7 பெயர்களை வர்த்தக முத்திரைக்காக பதிவு செய்துள்ளது.

என்ன பெயர்கள் வர்த்தகத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன?

மஹிந்திரா பின்வரும் பெயர்களுக்கான வர்த்தக முத்திரை பதிவுகளுக்காக தாக்கல் செய்துள்ளது:

  • தார் அர்மடா

  • தார் கல்ட்

  • தார் ரெக்ஸ்

  • தார் ரோக்ஸ்

  • தார் சவன்னா

  • தார் கிளாடியஸ்

  • தார் செஞ்சுரியன்

இதையும் பாருங்கள்: மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார் – எந்த பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 4x4 வேகமானது?

எது சிறந்த தேர்வாக இருக்கும்?

5-door Mahindra Thar render

7 ஏழு பெயர்களில், வரவிருக்கும் 5-டோர் மஹிந்திரா எஸ்யூவிக்கான புதிய பெயருக்கான போட்டியில், ‘தார் அர்மடா’ முன்னணியில் உள்ளது. அது தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் மஹிந்திராவுக்கு இன்னும் 6 தார் பேஸ்டு வர்த்தக முத்திரைகள் மீதம் இருக்கும்.

கார் தயாரிப்பாளர் இந்த பெயர்களை தார் 5 டோர்களின் வேரியன்ட்களுக்கு பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம். டாடா சமீபத்தில் அதன் வேரியன்ட் -களுக்கான பெயரிடலை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளை போல வெறும் எழுத்துக்களில் இருந்து சரியான வார்த்தைகளால் பெயரிடும் முறையை தொடங்கியது. தார் 3-டோர் மாதிரியின் வரிசையும் புதிய வேரியன்ட்களை தொடங்க புதிதாக வர்த்தக முத்திரையிடப்பட்ட சில அடையாளங்களையும் இது பயன்படுத்தலாம் 

3-டோர் மற்றும் 5-டோர் இரண்டு பதிப்புகளின் சிறப்பு பதிப்புகளை மஹிந்திரா வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த வர்த்தக முத்திரைகள் சுட்டிக்காட்டக்கூடும், இது சர்வதேச சந்தைகளில் ஜீப் நிறுவனம் அதன் எஸ்யூவி-யான ரேங்க்லர் காரில் செய்ததை போன்றது.

பவர்டிரெய்ன்கள் மற்றும் வெளியீடு

மஹிந்திரா தார் 5-டோர் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களை அதன் 3-டோர் இட்டரேஷனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது அதிகரித்த அவுட்புட்களுடன் இருக்கலாம். இரண்டு இயந்திரங்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறலாம். தார் 5 டோர் பின்புற சக்கர டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டின் ஆப்ஷனையும் வழங்கக்கூடும்.

Mahindra Thar 5 door rear

2024 -ம் ஆண்டின் முதல் பாதியில் 15 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இது மாருதி ஜிம்னி -யுடன் போட்டியிடும் மேலும் அதே நேரத்தில் விரைவில் வெளியாகவுள்ள 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா உடனும் போட்டியிடும்.

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra தார் ROXX

2 கருத்துகள்
1
D
deepak chaudhary
Jan 14, 2024, 9:17:28 PM

Gladius is also good name armada look like old version car

Read More...
    பதில்
    Write a Reply
    1
    V
    vivekanand pattar
    Dec 19, 2023, 11:57:39 AM

    ARMADA Name is a Very well Suited for the 5 door Version of Thar.

    Read More...
      பதில்
      Write a Reply
      Read Full News

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience