Tata Punch EV -வெளியானது … விலை 10.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
published on ஜனவரி 17, 2024 02:40 pm by ansh for டாடா பன்ச் EV
- 118 Views
- ஒரு கருத்தை எழுதுக
பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: ஒன்று 25kWh மற்றொன்று 35kWh. ஒரு முறை சார்ஜ் செய்தால் 421 கிமீ தூரம் வரை பயணம் செய்யலாம்.
-
பானெட் முழுவதும் உள்ள LED DRL -கள், ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் செங்குத்தாக உள்ள LED ஹெட்லைட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
கேபினுக்கு டூயல்-டோன் தீம், டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.
-
வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் டச்-எனபில்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகிய வசதிகள் இந்த காரில் உள்ளன.
-
விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.14.49 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
டாடா பன்ச் EV நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ளது, இதன் விலை ரூ.10.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). அதன் பிரிவில் முதலாவதாக வரும் எலக்ட்ரிக் மைக்ரோ-எஸ்யூவி -யான இது ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் EV -யிலிருந்து டிசைனுக்கான ஐடியாவை பெற்றுள்ளது. இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது, பிரீமியமான வசதிகளைக் கொண்டுள்ள இந்த கார் 421 கிமீ வரை செல்லக்கூடியது.
பன்ச் EV -யின் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் தொடங்கி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே.
விலை
அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை |
||
வேரியன்ட் |
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
ஸ்மார்ட் |
ரூ.10.99 லட்சம் |
அந்த |
ஸ்மார்ட் + |
ரூ.11.49 லட்சம் |
அந்த |
அட்வென்ச்சர் |
ரூ.11.99 லட்சம் |
ரூ.12.99 லட்சம் |
எம்பவர்டு |
ரூ.12.79 லட்சம் |
ரூ.13.99 லட்சம் |
எம்பவர்டு + |
ரூ.13.29 லட்சம் |
ரூ.14.49 லட்சம் |
குறிப்பு:- உங்களுக்கு சன்ரூஃப் உடன் அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு + வேரியன்ட்கள் தேவைப்பட்டால், நீங்கள் ரூ. 50,000 அதிகமாக செலவழிக்க வேண்டும்.
பன்ச் EV -யின் ஆரம்ப விலை அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பை விட ரூ. 5 லட்சம் அதிகம் ஆகும், இதில் முக்கிய பங்களிப்பானது பேட்டரி பேக் ஆக உள்ளது.டாடாவின் மிகவும் விலை குறைவான மின்சார காரான டாடா டியாகோ EV உடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் பன்ச் EV ரூ. 2.3 லட்சம் விலை கூடுதல் ஆக உள்ளது. பன்ச் EV -யின் நீண்ட தூர பதிப்பு 7.2 kW AC சார்ஜரை கூடுதலாக ரூ.50,000 -க்கு பெறுகிறது.
பவர்டிரெய்ன் விவரங்கள்
டாடா நிறுவனம் மற்ற அனைத்து Tata.ev தயாரிப்புகளைப் போலவே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் பன்ச் EV -யை வழங்குகிறது. அவை MR (மிட் ரேஞ்ச்) மற்றும் LR (லாங் ரேஞ்ச்) என பிரிக்கப்பட்டுள்ளன, ரேஞ்ச் மற்றும் செயல்திறன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
டாடா பன்ச் EV வேரியன்ட்கள் |
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
பேட்டரி பேக் |
25 kWh |
35 kWh |
பவர் |
82 PS |
122 PS |
டார்க் |
114 Nm |
190 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (NEDC) |
315 கி.மீ |
421 கி.மீ |
அதிகபட்ச வேகம் |
மணிக்கு 110 கி.மீ |
மணிக்கு 140 கி.மீ |
சார்ஜிங் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், பன்ச் EV ஆனது 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இதைப் பயன்படுத்தி அதன் பேட்டரி பேக்கை 56 நிமிடங்களில் 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய முடியும். வீட்டில் சார்ஜ் செய்வதற்கு, பன்ச் EV ஆனது இரண்டு AC சார்ஜர்கள், 7.2 kW மற்றும் 3.3 kW ஆகிய ஆப்ஷன்களுடன் வருகிறது, இவற்றின் சார்ஜிங் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வடிவமைப்பு
வெளிப்புறமாக, பன்ச் EV டாடாவின் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கம் முழுவதும் உள்ள LED DRL -கள், செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்கள், ஒரு பெரிய பம்பர் மற்றும் ஸ்லீக்கான ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைப் பெறுகிறது. பக்கவாட்டில் 16-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் உள்ளன, மேலும் பின்புற கதவுகளுக்கான டோர் ஹேண்டில் சி-பில்லரில் வைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ஏறக்குறைய பெட்ரோலில் இயங்கும் பன்ச் -ஐ போலவே தோற்றமளிக்கின்றது.
உள்ளே, எலக்ட்ரிக் எஸ்யூவி டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே நிற கேபின் மற்றும் லேயர்டு டேஷ்போர்டு வடிவமைப்புடன் வருகின்றது. டாடாவின் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது, பேக்லிட் டாடா லோகோவுடன், சென்டர் கன்சோல் கிளாஸி பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது லெதரெட் அப்ஹோல்ஸ்டரியையும் பெறுகிறது.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
கேபினில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டச்-எனேபில்டு பேனலுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் உள்ளன. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டிவி நிகழ்ச்சிகள்/திரைப்படங்களைப் பார்க்க Arcade.ev, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவ வசதிகள் இந்த காரில் உள்ளன.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs கியா செல்டோஸ் vs மாருதி கிராண்ட் விட்டாரா vs ஹோண்டா எலிவேட்: கார்களின் விலை ஒப்பீடு
6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் ஒரு பிளைண்ட் வியூ மானிட்டர் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள்
டாடா பன்ச் EV காரானது சிட்ரோன் eC3 -க்கு நேரடி போட்டியாக இருக்கும். இது டாடா டியாகோ EV, டாடா டிகோர் EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகிய கார்களுக்கு பிரீமியம் மாற்றாகவும் உள்ளது.
மேலும் படிக்க: பன்ச் EV AMT
0 out of 0 found this helpful