ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros
anonymous ஆல் பிப்ரவரி 01, 2025 09:10 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் கியாவின் இரண்டாவது சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இது ஒரு தனித்துவமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச் சிறப்பான கேபினை கொண்டுள்ளது.
-
சிரோஸ் என்பது கியாவின் புதிய எஸ்யூவி ஆகும். இது இந்தியாவில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
-
சிறந்த வசதிகள், டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவற்றோடு வருகிறது.
-
6 வேரியன்ட்களிலும், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் வழங்கப்படுகிறது.
-
விலை ரூ.9 லட்சம் முதல் ரூ.17.80 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு கியா சிரோஸ் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.9 லட்சம் முதல் ரூ.17.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). சிரோஸிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. அதே நேரத்தில் டெலிவரி இந்த மாத மத்தியில் இருந்து தொடங்கும். இது 6 வேரியன்ட்களில் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். கியா சிரோஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே.
கியா சிரோஸ் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள்
வேரியன்ட் |
6-ஸ்பீடு MT உடன் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
7-ஸ்பீடு DCT உடன் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல், 6-ஸ்பீடு MT |
1.5 லிட்டர் டீசல், 6-ஸ்பீடு AT |
HTK |
ரூ.9 லட்சம் |
- |
- |
- |
HTK (O) |
ரூ.10 லட்சம் |
- |
ரூ.11 லட்சம் |
- |
HTK பிளஸ் |
ரூ.11.50 லட்சம் |
ரூ.12.80 லட்சம் |
ரூ.12.50 லட்சம் |
- |
HTK |
ரூ.13.30 லட்சம் |
ரூ.14.60 லட்சம் |
ரூ.14.30 லட்சம் |
- |
HTX பிளஸ் |
- |
ரூ.16 லட்சம் |
- |
ரூ.17 லட்சம் |
HTX பிளஸ் (O) |
- |
ரூ.16.80 லட்சம் |
- |
ரூ.17.80 லட்சம் |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
கியா சிரோஸ் வடிவமைப்பு
ஒரு மஸ்குலர் தோற்றம் மற்றும் நவீன ஸ்டைலிங் உடன் இது கியாவின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவியான EV9 -ல் இருந்து வடிவமைப்புக்கான விஷயங்களை பெறுகிறது. அதன் முன்பக்கம் நேர்த்தியான LED DRL -கள் மற்றும் செங்குத்தாக 3-பாட் LED ஹெட்லைட்கள் உள்ளன. இவை இரண்டும் பம்பருக்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ளன.
சிரோஸ் ஒரு பாக்ஸி தோற்றத்தை கொண்டுள்ளது. 17-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. பெரிய பாடி கிளாடிங் மற்றும் ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்களால் முரட்டுத்தனமான தோற்றம் காருக்கு கிடைக்கிறது. பின்புறத்தில் இது L-வடிவ LED லைட்களும் உள்ளன. அதே நேரத்தில் கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் ஒரு ஸ்போர்ட்டி டச்சை காருக்கு கொடுக்கிறது.
கியா சிரோஸ் இன்ட்டீரியர்


சிரோஸ் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய சிறப்பான கேபின் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு வேரியன்ட்களில் டூயல்-டோன் தீம் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: கியா சிரோஸ் டாப்-எண்ட் வேரியன்ட்களுடன் மேனுவல் கிடைக்காது. அது தவறவிட்ட வசதிகள் இதோ
கியா சிரோஸ் வசதிகள்


கியா சிரோஸ் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே/ ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 5 இன்ச் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஸ்கிரீன் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. கியா 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், முன் மற்றும் பின் பயணிகளுக்கான சீட் வென்டிலேஷன், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் -களையும் வழங்கியுள்ளது.
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, முன், பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல்-2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆகியவற்றைப் பெறுகிறது.
கியா சிரோஸ் இன்ஜின் ஆப்ஷன்கள்
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அல்லது 1.5-லிட்டர் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன. இவை இரண்டும் சோனெட்டிலிருந்து பெறப்பட்டுள்ளன. கீழே உள்ள இரண்டு இன்ஜின்களின் விவரங்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே.
இன்ஜின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
116 PS |
டார்க் |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT^ |
*DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
போட்டியாளர்கள்
கியா சிரோஸ் ஆனது மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், ஸ்கோடா கைலாக், சோனெட், ஹூண்டாய் வென்யூ, மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.