Kia Syros காருக்கான முன்பதிவு மற்றும் டெலிவரி விவரங்கள்
published on டிசம்பர் 19, 2024 08:38 pm by kartik for க்யா syros
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜனவரி 3, 2025 அன்று சைரோஸிற்கான ஆர்டர் புத்தகங்கள் திறக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் விலை விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கியா சைரோஸ் HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.
-
1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (120PS/172Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116PS/250Nm) என இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது
-
MT, DCT மற்றும் AT ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
-
டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
எஸ்யூவி -யின் விலை ரூ.9 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் கியா சைரோஸ் அறிமுகமானது. இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் கிடைக்கும். அறிமுகத்தின் போது, சைரோஸிற்கான முன்பதிவு 2025 ஜனவரி 3 -ம் தேதி தொடங்கும் என்றும் டெலிவரி பிப்ரவரி தொடக்கத்தில் தொடங்கும் என்றும் கியா தெரிவித்துள்ளது. சைரோஸ் -க்கான விலை விவரங்களும் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் கியா சைரோஸ் காரை வாங்க நினைத்திருக்கிறீர்கள் என்றால் இந்த புதிய எஸ்யூவி -யை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
கியா சைரோஸ் பவர்டிரெய்ன்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT), டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) என இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
இன்ஜின் |
1 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
116 பி.எஸ் |
டார்க் |
172 என்எம் |
250 என்எம் |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
கியா சைரோஸ் இன்டீரியர் மற்றும் வசதிகள்
சைரோஸ் டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கலர் கேபின் தீம் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் கிடைக்கும். கேபினில் 64 கலர் ஆம்பியன்ட் லைட்டிங் தீம் மற்றும் டூயல்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் கிடைக்கும்.
கியா சைரோஸ் இரட்டை 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 5-இன்ச் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஸ்கிரீன் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி ஆனது 4-வே பவர்டு டிரைவர் சீட்கள், முன்பக்க மற்றும் பின்பக்க வென்டிலேட்டட் சீட் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. கியா சைரோஸ் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு, ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது. மேலும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் டூயல் டேஷ்போர்டு கேமராவும் உள்ளன.
பற்றி மேலும் படிக்க: கியா சைரோஸ் காரின் வடிவமைப்பு 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
போட்டியாளர்கள்
இந்தியாவில் கியா சைரோஸ் -க்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை. சப் காம்பாக்ட் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவிகளான டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் கிரெட்டா, மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்றவற்றுக்கு மாற்றாக இது இருக்கும்.
இதே போன்ற செய்தியை வாசிக்க: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kia Syros கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
0 out of 0 found this helpful