• English
  • Login / Register

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kia Syros கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

published on டிசம்பர் 19, 2024 02:43 pm by shreyash for க்யா syros

  • 14 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் கியா நிறுவனத்தின் எஸ்யூவி வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற வென்டிலேட்டட் இருக்கைகள், பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் பல கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.

Kia Syros Unveiled

  • HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என சைரோஸ் 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • கியா EV9 போன்று பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

  • 3-பாட் LED ஹெட்லைட்கள், எல் வடிவ LED டெயில் லைட்ஸ் மற்றும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ளன.

  • உள்ளே இது டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கலர் கேபின் தீம் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங்கை கொண்டிருக்கும்.

  • டூயல் 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் வருகிறது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை இருக்கின்றன.

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் அல்லது 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

  • சைரோஸ் காரின் விலை ரூ.9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியாவில் கியா சைரோஸ் கார் வெளியிடப்பட்டது. பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்புடன் இது கியா -வின் எஸ்யூவி வரிசையில் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் இடையே இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கியா எஸ்யூவி -கள் அல்லது சப்-4 மீட்டர் பிரிவில் உள்ள பிற நிறுவனங்களின் மாடல்களில் வழங்கப்படாத சில பிரீமியம் வசதிகளுடன் கியா நிறுவனம் சைரோஸை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.  மேலும் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை சோனெட்டிலிருந்து பெற்றுள்ளது. 

A post shared by CarDekho India (@cardekhoindia)

HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் சைரோஸ் கிடைக்கும். ஜனவரி 3, 2025 அன்று சைரோஸ் எஸ்யூவிக் -கான ஆர்டர் புத்தகங்களை கியா திறக்கவுள்ளது. மேலும் அதே நேரத்தில் சைரோஸ் காரின் முழுமையான விலை விவரங்கள் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைரோஸிற்கான டெலிவரிகள் பிப்ரவரி 2025 முதல் தொடங்கவுள்ளன.

சைரோஸ் காரை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வடிவமைப்பு

Kia Syros Rear

கியா சைரோஸ் வழக்கமாக பழைய கார்களில் நாம் பார்க்கக்கூடிய பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, கியா இவி 9 -லிருந்து நிறைய விஷயங்களை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் வெர்டிகலான 3-பாட் LED ஹெட்லைட்கள் மற்றும் LED DRL -கள் உள்ளன. பக்கவாட்டில் இது பெரிய ஜன்னல் பேனல்கள், சி-பில்லர் அருகே ஒரு கின்க்ட் பெல்ட்லைன் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்களைக் கொண்ட ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இது ஒரு முக்கிய ஷோல்டர் லைன் மற்றும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. கியா -வின் இந்தியாவின் வரிசையில் இந்த டோர் ஹேண்டில்களுடன் வரும் முதல் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மாடல் சைரோஸ் ஆகும். மற்றொரு தனித்துவமான வடிவமைப்பு எலமென்ட் பாடி கலர்டு பி-பில்லர் டோர் பில்லர் இருப்பது ஆகும். பின்புறத்தில் சைரோஸ் நேர்த்தியான L-வடிவ LED டெயில் லைட்ஸ் மற்றும் ஒரு பிளாட் டெயில்கேட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கேபின் மற்றும் வசதிகள்

Kia Syros Interior

சைரோஸின் டாஷ்போர்டு அமைப்பு கியா EV9 -லிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டதை போல தெரிகிறது. இது லெதரெட் இருக்கைகளுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கலர் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்கும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்கு), 5-இன்ச் ஸ்கிரீன், கிளைமேட் கன்ட்ரோலுக்கான டூயல் டிஸ்பிளேக்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, 4-வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் டூயல்- ஜோன் ஏசி ஆகிய வசதிகள் உள்ளன. இது 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் லைட்ஸ், வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள், ரிமோட் ஜன்னல் அப்/டவுன் பவர் விண்டோஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் செட்டப் ஆகிய வசதிகள் சைரோஸில் உள்ளன. 

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன. மேலும் கூடுதலான பாதுகாப்புக்காக டூயல் கேமரா டேஷ்கேம் மற்றும் ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: கியா சைரோஸ் வடிவமைப்பு 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

கியா சைரோஸை 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்குகிறது. விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

120 PS

116 PS

டார்க்

172 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

Kia Syros Front

சோனெட் மற்றும் செல்டோஸ் போல இல்லாமல் கியா சைரோஸ் 1.2 லிட்டர் அல்லது 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்களின் ஆப்ஷனை இது பெறவில்லை.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் வேரியன்ட்களின் முழுமையான விவரங்கள் இங்கே:

வேரியன்ட்கள்

1-லிட்டர் டர்போ பெட்ரோல் MT

1-லிட்டர் டர்போ பெட்ரோல் DCT

1.5 லிட்டர் டீசல் MT

1.5 லிட்டர் AT

HTK

HTK (O)

HTK பிளஸ்

HTX

HTX பிளஸ்

HTX பிளஸ் (O)

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா சைரோஸ் காரின் விலை ரூ. 9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைரோஸ் -க்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் எதுவும் இல்லை, ஆனால். ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் கியா செல்டோஸ் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும். மேலும் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற சப்காம்பாக்ட் எஸ்யூவி களுக்கு போட்டியாகவும் இது இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia syros

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9 - 16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2025
×
We need your சிட்டி to customize your experience