நாளை வெளியாகின்றது Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார்
published on ஜனவரி 11, 2024 04:36 pm by sonny for க்யா சோனெட்
- 175 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் சப்காம்பாக்ட் எஸ்யூவியான சோனெட் காரின் வடிவமைப்பில் சில மாற்றங்களும், பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன
-
கியா சோனெட் டிசம்பர் 2023 நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் பிறகு முன்பதிவுகள் தொடங்கியது.
-
வெளிப்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஷார்ப்பான ஸ்டைலிங் கொடுக்கப்பட்டுள்ளது கேபினில் குறைந்த மாற்றங்களே இருக்கின்றன.
-
ADAS, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்களும் இருக்கின்றன.
-
8 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் நாளை வெளியாக உள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட சோனெட் -க்கான முன்பதிவுகள் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடந்து வருகின்றன. அறிமுகத்திற்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்ட கியா சப்-4எம் எஸ்யூவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள்
கியா ஆனது சோனெட் காரின் முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் ஷார்ப்பான ஸ்டைலிங் உடன் வருகின்றது. குறிப்பாக LED DRL -கள் மற்றும் கனெக்டட் டெயில்லேம்ப்கள் போன்ற புதிய லைட்டிங் எலமென்ட் ஆகியவை உள்ளன. கேபினில் குறைவான மாற்றங்களே உள்ளன, டாஷ்போர்டு வடிவமைப்பு பழையபடியே உள்ளது. ஆனால் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் புதிதாக உள்ளது.
புதிய வசதிகள்
இந்த பிரிவில் சிறப்பான வசதிகளுடன் கிடைக்கும் கார்களில் ஒன்றாக மாறுவதற்காக புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது இப்போது 10.25-இன்ச் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் 4-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கையுடன் வருகிறது. புதிய கியா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யில் குறிப்பிட்டு கூற வேண்டிய வசதிகளில் ஒன்று அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகும்.
டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன் ஆகிய மூன்று டிரிம்களிலும், மொத்தம் 7 வேரியன்ட்களிலும் கியா இந்த காரை வழங்குகிறது.
தொடர்புடையது: ஃபேஸ்லிஃப்ட் Kia Sonet காரில் கொடுக்கப்பட்டுள்ள வேரியன்ட் வாரியான வசதிகள் இங்கே
பவர்டிரெயின்கள்
1.2-லிட்டர் பெட்ரோல், 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் - வெளிச்செல்லும் சோனெட்டின் அதே மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை கியா தக்கவைத்துள்ளது. ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால், டீசல் இன்ஜின் இப்போது iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) ஆப்ஷனை தக்கவைத்துக்கொண்டு வழக்கமான மேனுவல் டிரான்ஸ்மிஷனை பெறுகிறது. கீழே அதைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன :
1.2-லிட்டர் N.A.* பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
|
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
மேலும் படிக்க: 2024 Kia Sonet: வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரம் இங்கே
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக இது தொடரும்.
மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful