• English
  • Login / Register

Kia Sonet Facelift HTK+ வேரியன்ட்டை 5 படங்களில் விரிவாக இங்கே பார்க்கலாம்

published on ஜனவரி 23, 2024 03:27 pm by shreyash for க்யா சோனெட்

  • 268 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 Kia ​​Sonet காரின் HTK+ வேரியன்ட் -டில் LED ஃபாக் லைட்ஸ், 8 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் மற்றும் ஆட்டோமெட்டி ஏசி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

Kia Sonet 2024 HTK+

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உட்பட புதிய தோற்றம் மற்றும் கூடுதல் தொழில்நுட்பம் கொண்ட ஒரு மிட்லைஃப் அப்டேட் சமீபத்தில் கிடைத்தது. 2024 சோனெட் 7 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-லைன். 2024 சோனெட்டின் மிட்-ஸ்பெக் HTK+  வேரியன்ட் மற்றும் அது என்ன வசதிகளை வழங்குகிறது என்பதை 5 படங்கள் மூலமாக பார்ப்போம்.

Kia Sonet 2024 HTK+ Front

முன்புறத்தில், 2023 கியா சோனெட் -ன் HTK+ வேரியன்ட், மேட் குரோம் டீடெயில்ஸ் மற்றும் ஹாலோஜன் ஹெட்லைட்கள் கொண்ட புதிய வடிவிலான கிரில்லை கொண்டுள்ளது. இது எல்இடி ஹெட்லைட்களை பெறவில்லை என்றாலும், LED DRL -கள் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் ஆகியவை லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களில் இருந்து இதை வேறுபடுத்துகிறது.

Kia Sonet 2024 HTK+ Profile

பக்கவாட்டு தோற்றத்தைப்  பற்றி பேசுகையில், சோனெட் HTK+ ஆனது 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது HTX+ வேரியன்ட்டன் வழங்கப்படும் டூயல்-டோன் அலாய் வீல்களில் இருந்து சற்று வித்தியாசமானது. HTK+ டிரிம் கொண்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு சன்ரூஃப் கிடைக்கும்.

இதையும் பார்க்கவும்: புதிய Kia Sonet பேஸ்-ஸ்பெக் HTE வேரியன்ட் -ன் விவரங்களை 5 படங்களில் பாருங்கள்

Kia Sonet 2024 HTK+ Rear

கனெக்டட்ட் LED டெயில்லேம்ப்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் 2024 கியா சோனெட் -ன் என்ட்ரி லெவல் வேரியன்ட்டாக HTK+ உள்ளது. இது பிளாக்-அவுட் பின்புற பம்பர் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்டையும் பெறுகிறது, இது சோனெட்டின் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு பங்களிக்கிறது.

Kia Sonet 2024 HTK+ Interior

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் HTK+ வேரியன்ட் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் கேபின் தீமை பெறுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய சிறிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள் மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதில் உள்ளன. இது ஒரு ஆட்டோ அப்/டவுன் டிரைவரின் சைடு விண்டோ மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றை ஸ்மார்ட் கீயுடன் பெறுகிறது.

சோனெட்டின் இந்த வேரியன்ட்டில் ஆல் டிஜிட்டல் 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே, ஏர் பியூரிஃபையர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இல்லை. இருப்பினும், அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கின்றது, அதே சமயம் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் உயர்-ஸ்பெக்ட் வேரியன்ட்களுடன் வழங்கப்படுவது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே -க்கான சப்போர்ட்டை மட்டுமே வழங்குகிறது.

இதையும் பார்க்கவும்: 2024 Hyundai Creta -வின் EX வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

2024 Kia Sonet HTK+ Rear seat

பின் இருக்கை பயணிகளுக்கு, சோனெட் ஃபேஸ்லிஃப்ட் பின்புற ஏசி வென்ட்கள், பின்புற சன்ஷேடுகள் மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட்களை வழங்குகிறது. இருப்பினும், பின்புற இருக்கைகள் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களை பெறவில்லை.

சோனெட்டின் இந்த வேரியன்ட்டின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பார்க்கும்போது , இது 6 ஏர்பேக்குகள், ABS வித் EBD , எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் , ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் அனைத்து பயணிகளுக்குமான சீட் பெல்ட் ரிமைன்டர்களையும் பெறுகிறது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்

கியா ஆனது சோனெட் -ன் HTK+ வேரியன்ட்டை மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது ஆனால் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் இல்லை. தேர்வுகளில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS / 172 Nm) 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்), 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (83 PS / 115 Nm) உடன் இணைக்கப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS / 250 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலை & போட்டியாளர்கள்

கியா சோனெட்  ஃபேஸ்லிஃப்ட்டின் HTK+ வேரியன்ட்டின் விலை ரூ. 9.89 லட்சத்தில் இருந்து ரூ.11.39 லட்சம் வரை இருக்கும், அதே சமயம் அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ.15.69 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆகும். இது டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா மற்றும் ரெனால்ட் கைகர் போன்றவற்றுடன் போட்டியிடுகின்றது.

மேலும் படிக்க: கியா சொனெட் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia சோனெட்

1 கருத்தை
1
A
abhishek thakur
Mar 31, 2024, 3:19:39 PM

I want kia sonet htk plus variant but this variant doesn't have sunroof now I want to buy venue sx with sunroof If kia gives sunroof on htk plus variant then I buy.

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience