• English
  • Login / Register

2024 Hyundai Creta -வின் EX வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

published on ஜனவரி 22, 2024 06:01 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா

  • 48 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2024 Hyundai Creta EX

ஹூண்டாய் கிரெட்டா சமீபத்தில் புதிய அப்டேட்டை பெற்றது. இது காருக்கு ஒரு புதிய தோற்றத்தை மட்டும் கொடுக்கவில்லை,  புதிய அம்சங்களையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்டை 7  வேரியன்ட்களில் வழங்குகிறது: E, EX, S, S(O), SX, SX டெக், மற்றும் SX(O). இந்தக் கட்டுரையில், 5 படங்களில் அப்டேட்டட் காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் பற்றிய விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகியுள்ளோம்.

2024 Hyundai Creta EX Front

முன்பக்கத்தில், 2024 ஹூண்டாய் கிரெட்டா EX வேரியன்ட் இன்வெர்டட் L-வடிவ LED DRLகள், ஒரு செவ்வக கிரில் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும்,  கனெக்டட்  DRL -கள் இல்லை மற்றும் LED -களுக்குப் பதிலாக ஹாலோஜன் ஹெட்லைட்கள் ஆகியவை அதன் ஹையர்-ஸ்பெக் மாடல்களில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டுகின்றது. மேலும், DRL செட்டப்பில் இன்டெகிரேட்ட டர்ன் இன்டிகேட்டர்கள் செயல்பாடு கிடையாது.

2024 Hyundai Creta EX Side

பக்கத்திலிருந்து பார்க்கும்போது, ​​இந்த EX வேரியன்ட் மற்றும் ஹையர்-ஸ்பெக் மாடல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் தெளிவாகத் தெரியும். EX வேரியன்ட் 16-இன்ச் ஸ்டீல் வீல்களுடன் வீல் கவர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் சைடு இன்டிகேட்டர்கள் ORVM -களுக்கு பதிலாக பக்கவாட்டு ஃபெண்டரில் உள்ளன. இருப்பினும், கிரெட்டா EX ஆனது அதன் பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட்டுடன் கிடைக்காத சைடு கார்னிஷை பெறுகிறது.

இதையும் பார்க்கவும்: புதிய ஹூண்டாய் Hyundai Creta E Base வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்

2024 Hyundai Creta EX Side

பின்புறத்தில், கிரெட்டா EX ஆனது அடுத்த வேரியன்ட்டிலிருந்து வழங்கப்படும் LED டெயில் லைட்களை கொண்டிருக்கவில்லை. இருப்பினும், அதன் பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட் போலல்லாமல், கிரெட்டாவின் இந்த EX வேரியன்ட் ஒரு ஷார்க்-ஃபின் ஆண்டெனாவை பெறுகிறது. உயர் பொருத்தப்பட்ட LED  ஸ்டாப் லைட் மற்றும் பின்புற பம்பரில் இன்டெகிரேட்டட் ஆக உள்ள சில்வர் ஸ்கிட் பிளேட் போன்ற பிற விவரங்கள் கிரெட்டாவின் மற்ற டிரிம்களை போலவே உள்ளன.

2024 Hyundai Creta EX Interior
2024 Hyundai Creta EX Interior

உட்புறத்தில், ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் ஒன்-அபோவ்-பேஸ் EX வேரியன்ட் சிறிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது, இது வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயை சப்போர்ட் செய்கின்றது, இது பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. லோவர்-ஸ்பெக் மாடல் என்பதால், இது ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உடன் வரவில்லை.

ஹூண்டாய் வென்யூ மற்றும் ஹூண்டாய் வெர்னாவில் காணப்படுவது போல, இந்த வேரியன்ட்டின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒரு செமி-டிஜிட்டல் யூனிட் ஆக உள்ளது, அதே சமயம் டாப் வேரியன்ட் 10.25-இன்ச் முழு டிஜிட்டல் க்ளஸ்டரை கொண்டுள்ளது.

கிரெட்டா EX -ல் உள்ள மற்ற அம்சங்களில் நான்கு பவர் விண்டோஸ், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கை, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் கன்ட்ரோல்கள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது. 2024 கிரெட்டாவின் இந்த வேரியன்ட் இன்னும் ரியர் வியூ கேமராவை பெறவில்லை.

இதையும் பார்க்கவும்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவின் ஒவ்வொரு வேரியன்ட் கார்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

இன்ஜின் ஆப்ஷன்கள்

கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் EX வேரியன்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (115 PS / 144 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் யூனிட் (116 PS / 250 Nm), இவை இரண்டும் 6-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்மிஷன் மட்டுமே. பெட்ரோலுடன் CVT ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் யூனிட்டுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை கிரெட்டாவின் மிட்-ஸ்பெக் S(O) வேரியன்ட்டிலிருந்து கிடைக்கின்றன.

2024 கிரெட்டாவின் டாப்-ஸ்பெக் SX(O) வேரியன்ட் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) மட்டும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகிறது.

விலை & போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா EX விலை ரூ. 12.18 லட்சத்தில் இருந்து ரூ. 13.68 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா  ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience