சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

published on ஜனவரி 08, 2024 11:35 am by rohit for க்யா சோனெட்

டீசல்-IMT காம்போ சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் கூடுதல் மைலேஜை கொடுக்கக்கூடியது, அதே சமயம் டீசல் மேனுவல் -க்கான மைலேஜ் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

  • சோனெட் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும்.

  • அதன் டீசல்-IMT காம்போ 22.3 கிமீ லிட்டருக்கு அதிக மைலேஜ் கொண்ட பவர்டிரெய்ன் ஆகும்.

  • 2024 சோனெட்டிற்கான வடிவமைப்பு மாற்றங்கள் புதிய கிரில், ஷார்ப் LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.

  • கூடுதல் அம்சங்களில் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் சந்தையில் நுழையவுள்ளது. மேலும் கியா ஏற்கனவே அதன் வேரியன்ட் வரிசை மற்றும் இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளிட்ட புதிய எஸ்யூவி -யின் பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளது. தற்போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சப்-4எம் எஸ்யூவியின் பவர்டிரெய்ன் வாரியாக கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்களையும் கியா இப்போது வெளியிட்டுள்ளது.

பவர்டிரெய்ன் மற்றும் மைலேஜ் விவரங்கள்

விவரங்கள்

1.2-லிட்டர் N.A.* பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

83 PS

120 PS

116 PS

டார்க்

115 Nm

172 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

5-வேக MT

6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

கிளைம்டு மைலேஜ்

18.83 கி.மீ

18.7 கிமீ/லி, 19.2 கிமீ/லி

22.3 கிமீ/லி, T.B.D.^, 18.6 கிமீ/லி

*N.A. - நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்

^ - அறிவிக்கப்பட வேண்டியது

ஃபேஸ்லிஃப்ட் மூலம் கியா நிறுவனம் சோனெட் டீசல்-MT ஆப்ஷனை திரும்ப கொண்டு வரவுள்ளது. டீசல் மேனுவல் ஆப்ஷனின் கிளைம்டு மைலேஜ் விவரத்தை கியா இன்னும் வெளியிடவில்லை. எதிர்பார்க்கப்படும் வகையில், டீசல் பவர்டிரெய்ன் இங்கு மிகவும் மைலேஜ் தரக்கூடியது, அதே நேரத்தில் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் எஸ்யூவிக்கு மிகவும் சிக்கனமான பெட்ரோல் ஆப்ஷனாக இருக்கும்.

2024 சோனெட் -ல் புதிதாக என்ன இருக்கிறது?

சோனெட் கடந்த 2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் முதல் பெரிய அப்டேட்டை பெறுகிறது. புதிய வடிவிலான கிரில், ஷார்ப்பான LED ஹெட்லைட்கள், நீளமான ஃபாங் வடிவ LED DRL -கள், நேர்த்தியான LED ஃபாக் விளக்குகள், கனெக்டட் LED டெயில்லைட்கள் மற்றும் புதிய பம்பர்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்.

அதன் உட்புறம் பெரிய மாற்றமில்லாமல் இப்போதுள்ள மாடலை போலவே உள்ளது. புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல், சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, கியா செல்டோஸை போலவே 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ஹூண்டாய் வென்யூவில் இருப்பதை போன்ற 4-வே பவர்டு டிரைவர் இருக்கையையும் கியா இதில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பை பொறுத்தவரையில், புதிய சோனெட் இரண்டு முக்கிய அம்சங்களைப் பெறுகிறது, அவை 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS). ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பிற பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் கியா இந்த காரை வழங்கவுள்ளது.

தொடர்புடையது: 2024 கியா சோனெட்: காத்திருப்பது மதிப்புள்ளதா அல்லது அதன் போட்டியாளர்கள் சிறந்த காரை வழங்குகிறார்களா?

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் ஜனவரி 2024 இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்). மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் சப்-4மீ கிராஸ்ஓவர் மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 81 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா சோனெட்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை