Hyundai Venue S Plus வேரியன்ட் அறிமுகம், ச ன்ரூஃப் இப்போது குறைவான விலையில் கிடைக்கும்
published on ஆகஸ்ட் 16, 2024 08:41 pm by rohit for ஹூண்டாய் வேணு
- 110 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய எஸ் பிளஸ் வேரியன்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு MT ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
-
லோயர்-ஸ்பெக் S மற்றும் மிட்-ஸ்பெக் S(O) இடையே புதிய வேரியன்ட் இருக்கும்.
-
சன்ரூஃப் தவிர இது 8 இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள் மற்றும் TPMS ஆகிய வசதிகள் உடன் வருகிறது.
-
வென்யூவின் விலை ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும்.
ஹூண்டாய் வென்யூ காரின் புதிய மிட்-ஸ்பெக் S(O) பிளஸ் வேரியன்ட் மூலமாக ஹூண்டாய் நிறுவனம் சன்ரூப் வசதியை இப்போது இன்னும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. இது இப்போது புதிய எஸ் பிளஸ் வேரியன்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.9.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.
புதிய வேரியன்ட் விவரங்கள்
புதிய வேரியண்ட் லோயர்-ஸ்பெக் S மற்றும் மிட்-ஸ்பெக் S(O) வேரியன்ட்களுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும். எஸ்யூவியின் வேரியன்ட் வரிசையில் இது எந்த இடத்தில் உள்ளது என்பது பற்றிய விவரம் இங்கே:
வேரியன்ட் |
விலை |
எஸ் |
ரூ.9.11 லட்சம் |
எஸ் பிளஸ் (புதியது) |
ரூ.9.36 லட்சம் |
S(O) |
ரூ.9.89 லட்சம் |
எஸ்(ஓ)பிளஸ் |
ரூ.10 லட்சம் |
ஹூண்டாய் புதிய வேரியன்ட் விலையை முந்தைய எஸ் டிரிம் விலையை விட ரூ.25,000 கூடுதலாக நிர்ணயித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட S(O) பிளஸ் வேரியன்ட் S பிளஸ் உடன் ஒப்பிடும்போது சன்ரூஃப் கொண்ட வேரியன்ட் ரூ.64,000 அதிகம்.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்
இது எஸ்யூவி -யின் 83 PS 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.
காரிலுள்ள வசதிகள் என்ன ?
சன்ரூஃப் தவிர, இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ ஹெட்லைட்கள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீனையையும் பெறுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.
மேலும் பார்க்க: ஹூண்டாய் எக்ஸ்டெர் டூயல் சிலிண்டர் சிஎன்ஜி வேரியன்ட் நிஜ வாழ்க்கைப் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் வென்யூவின் விலை ரூ.7.94 லட்சத்தில் இருந்து ரூ.13.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: வென்யூ ஆன்ரோடு விலை
0 out of 0 found this helpful